இந்திய அணியை குறித்து மேலும் சில தகவல்கள்
இம்மாத இறுதியில், ஆஸ்திரேலியாவில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளது. இரு தேசங்களின் அணிவகுப்புகளையும், சென்ற மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு உள்ள மாற்றங்கள், இந்திய நாட்டின் வெற்றி சதவீதத்தை குறைக்கும் பொருட்டு அமைந்துள்ளது. இவற்றுள், சில மாற்றங்கள், மிகவும் அச்சுறுத்தும் என முன்பாகவே நான் தெளிவு படுத்திக்கொள்கிறேன்.
உலகின் தலைசிறந்த batsman மற்றும் இந்திய நாட்டின் தலைவரான விராட் கோலி அவர்கள், இத்தொடரின் இடையிலிருந்து விளகவுள்ளார். வருகின்ற ஜனவரி மாத காலத்தில், தன்னுடைய முதல் குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கும் இவரோ, முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன், இந்தியா திரும்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு, இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியமும் பச்சை கோடி காட்டியுள்ளது. விராட் கோலி இல்லாமல், இந்திய அணியின் பங்கேற்பு, சக்கரம் இல்லாத தேரினை போன்றதாகும். சக்கரமின்றி தேர், சிறிது அளவும் நகராது. ஆதலால், இந்திய அணிக்கு முதல் இடி.
ரோஹித் ஷர்மா அவர்கள், மீண்டும் IPL போட்டிகளில் பங்குபெற்றாலும், அவருடைய உடல்நிலை எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்ய Yo-Yo test நடைபெறும். அதோடு, அவருடைய காயத்தின் வீரியத்தையும் மனதில் வைத்துக்கொண்டு செயல்படுகிறது BCCI. காயம் இல்லாமல், Yo-Yo பயிற்சியில் சிறிதும் பிளவு இல்லாமல் தேர்ச்சியாக வேண்டும். இல்லையெனில், பின்னர் வரவிருக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணி தத்தளிக்க நேரிடும்.
சஞ்சு சாம்சன் அவர்களை, ஒரு நாள் கிரிக்கெட் அணியிலும் நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியை வரவழைக்கின்றது. வருண் சக்ரவர்த்தியின் தோள்பட்டையில் உள்ள காயம், அவரை இத்தொடரிலிருந்து விளக்கவைத்துள்ளது. " ஒரு கதவு அடைக்கப்பட்டால், மறு கதவு திறக்கப்படும் " என்கிற பழமொழியிற்கேற்ப, சக்ரவர்த்தியின் விலகல், நடராஜன் அவர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளது. ஆம், சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் அவர்களை முன்னதாக, கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் என நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது, அவரை 20 ஓவர் கிரிக்கெட் அணியினுள் நியமிக்கப்பட்டது இன்பத்தை வரவழைக்கின்றது.
கமலேஷ் நாகர்கோடி அவர்கள் இம்முறை ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள இயலாது. சாஹா'வின் காயம் சிறிதும் சரியாகாததால், அவரின் பங்கேற்பை பற்றிய தகவல், சிறிது நாட்களுக்கு பிரகு வெளியிடப்படும். இஷாந்த் ஷர்மா அவர்கள் எப்போது முழுமனதுடன் குணமாகி வெளிவருகின்றாரோ, அப்போது தான் அவரை டெஸ்ட் அணியினுள் சேர்க்கப்படுவார் என திட்டவட்டமாக அறிக்கையை வெளியிட்டது BCCI.
என்னை பொறுத்தவரை, இம்முறை பெரிதும் எதிர்பார்ப்புடன், இத்தொடரை நாம் கண்டிர வேண்டாம். ஆனால், 2007/08 ஆண்டில் நடைபெற்ற தொடரில், அனுபவமின்றி தான், இந்திய அணி Commonwealth Bank seriesல் களமிறங்கியது. அதன் விளைவு, அத்தொடரை வென்றது இந்திய அணி. ஆதலால், எதுவும் சாத்தியமே. இளங்கன்றுகள் சாதனையை நிகழ்த்தினால், அதனை விட பெரிய இன்பம் எனக்கு தனிப்பட்ட வகையில் ஏதும் கிடையாது.
உண்மைதான் சகோ கோலி இல்லதா டெஸ்ட் அணி எந்த அளவு சண்டபோடுவாங் தெரியல பவுலர்ஸ் கைலதான் இருக்கு
ReplyDeleteஅகர்வால் ராகுல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லா விளையாடனும்
ரஹாணு கேப்டன்சிப் நல்லா இருக்கனும் ஐபிஎல் பவுலிங் பன்னமாறி சமி பும்ரா பன்னனும் இது எல்லா பர்பெக்டா நடந்தா மட்டுமே சண்டையாச்சு செய்ய முடியும்
ODI T20 பொருத்தவரை பிரச்சனை இல்லை அன்றையநாள் நல்லா விளையாடனும்
எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வோம் !! இளம் அணியினர் வென்றால் மிகுந்த மகிழ்ச்சி, தோல்வியடைந்தால் பழகிக்கொள்வோம் !!
ReplyDelete