IPL - BCCI செய்திகள்

சில நாட்களுக்கு முன், VIVO கைபேசி நிறுவனம்,  தாமாக முன்வந்து, இவ்வாண்டின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்'பிலிருந்து விலகினர். காரணம், எல்லையில் நடைபெற்ற இரு நாட்டு தாக்குதல். அதனை தொடர்ந்து, தற்போது, இந்திய கிரிக்கெட் வாரியம், புதிய ஸ்பொன்சார்களை வரவேற்றுள்ளார்கள். அவர்களுள் ஏலம் அமைத்து, அதில் வெற்றிபெறும் நிர்வாகத்திற்கு, இவ்வாண்டின் IPL  டைட்டில் ஸ்பான்சர்' என அறிவிக்கப்படுவார். 

அதன் விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்கள். இதனோடு, இவ்வாண்டின் ஐபிஎல் தொடரை நடத்த, தேவையாயுள்ள செயல்முறையை  தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். ஆதலால், இந்திய கிரிக்கெட் ஏதேனும் ஓர் வழியில் துவங்கவுள்ளது.

IPL டைட்டில் ஸ்பொன்சொற் ஏலத்தின் முடிவுகளை, இம்மாத 18ம் தேதி அன்று அறிவிப்பார். அது மட்டுமல்லாது, ஏலத்தில் பங்குபெறுவதற்கு ஆர்வம் மிக்க நிர்வாகங்கள் அனைத்தும், இம்மாத 14'ங்காம் தேதிக்குள், தங்களின் உரிய ஆவணங்களையும், "ஆர்வத்தின் வெளிப்பாடு" என்றழைக்கப்படும் "EOI" ஆவணத்தையும், பதிவு செய்யவேண்டும். 

மேலும் BCCI குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், இவ்வாண்டின் டைட்டில் ஸ்பான்சரை, அதிக விலையின் மத்தியில் தேர்ந்தெதுக்க மாட்டோம். எவருடைய விளம்பரங்களின் முறையும் மற்றும் சந்தைப்படுத்துதலின் முறையும், நன்றாக உள்ளதோ, அவர்களையே நாங்கள் டைட்டில் ஸ்பான்சாராக அறிவிப்போம்.

அது மட்டுமின்றி, இவ்வாண்டின் உரிமம், வெறும் நான்கு மாதங்களுக்கு மட்டுமே. ஆகஸ்ட் 18, 2020 அன்று முதல் டிசம்பர் 31, 2020 வரை உள்ள காலகட்டத்தில் இவ்வுரிமம் செல்லுபடியாகும். மாற்றும், உரிய ஆவணங்கள் இல்லையெனில், அவர்களை வெளியேற்றம் செய்வர் எனக்குறிப்பிட்டனர். ஏலத்தில் அமரும் தருணத்தில், அணியின் முதன்மையானோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். நடுவர் அல்லது முகவர் எவரேனும் பங்கேற்றால், அந்நிர்வாகத்தை வெளியேற்றம் செய்வர் என அறிவித்தார்கள். 

இவ்வாண்டு, ஏலத்தில் பங்கேற்பதன் விலையையும் குறைத்துள்ளார்கள். 300 கோடி ரூபாய் வழங்கி பங்கேற்க வேண்டும், என்கிற எல்லைக்கோட்டினை அமைத்துள்ளார்கள். தற்போது, பாபா ராம்தே'வின் பதஞ்சலி நிர்வாகம், இவ்வாண்டின் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றுக்கொள்ள முன்வந்தனர். 

டைட்டில் ஸ்பான்சர் தேர்வினை தொடர்ந்து, IPL நிர்வாகம், தற்போது ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள, இந்திய அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்றுக்கொண்டனர். வெளிநாடுகளில் தொடரை நடத்த விளையாட்டு துறை அமைச்சகம், வீடுவிவகார துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதற்கு முன்பாகவே, முதலில் குறிப்பிட்ட அமைச்சகங்களிலிருந்து அனுமதி பெற்றிருந்தார்கள். ஆனால், தற்போது இந்திய மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்றுக்கொண்டனர்.

அதனால், இப்போது பயணம் மேற்கொள்வதற்கு முன், இரண்டு காரோண பரிசோதனைகளை வீரர்கள் மேற்கொண்டு, வெளியேற வேண்டும். ஆகஸ்ட் 22ம் தேதி என்று அனைத்து அணிகளும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் இடையில் ஓர் 5 நாட்களுக்கு மட்டும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்கள். அதன் காரணம், ஐக்கிய அரபி நாடுகளில் உள்ள பிட்சுக்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள பிட்சுக்களுக்கு இணையானவை. 

எனவே, இன்னும் ஒரு மாத காலம் வரை மட்டுமே காத்துக்கொள்ள வேண்டும். ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் அவர்களை அறிவித்தப்பின், இவ்வாண்டின் ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.   

" போடு ஆட்டம் போடு, நம்மள கேக்க எவனுமில்ல "   

   

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?