ஜாம்பவான் ஸ்கோர் திரில்லர் போட்டி - ஐபிஎல் வரலாற்றில் இன்று

ஐபிஎல் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களும், அதே நேரத்தில் அடுத்த தலைமுறை வீரர்களும் சேர்ந்து விளையாடுவர். அதில் நிறைய வீரர்கள் மிகைப்படுத்தப்பட்டும், குறைந்து மதிப்பிடப்பட்டும் இருப்பார்கள். சில வீரர்கள், நன்றாக விளையாடியும் இந்திய சர்வதேச அணியில் இடம்பெறாமல், ஐபிஎல் கிரிக்கெட்டுடன் தங்களுடைய காலம் முடிவு பெரும். சிலர், இந்தியாவிற்கு விளையாடினாலும், பெரும் மதிக்கப்படாது திகழ்வர். அவ்வாறு அதிகம் போற்றப்படாத வீரர்கள் ஒன்றிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்.........

2017ம் ஆண்டு மே 11ம் நாள் அன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகள், வான்கடே மைதானத்தில் மோதியது. இரு அணிகளும் இதற்கு முன் 12 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில், மும்பை அணி அதில் 9 போட்டிகளை வென்று சுமூகமாக பிளே - ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அவர்களை பொறுத்த வரை, முதல் 2 அணிகளில் ஒன்றாக வர வேண்டும் என்ற மனநிலை மட்டும் தான். ஆனால், மறுபுறத்தில் பஞ்சாப் அணி, 6 போட்டிகளை வென்று 6 போட்டிகளை தோற்று இருந்தது. ஆதலால், வரும் போட்டிகளை வென்றால் தான் பிளே - ஆஃப் சுற்றை அடைய முடியும். ஆதலால், தேவை பஞ்சாப் அணியிற்கு மிகவும் அதிகம்.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையின் பிட்ச் மிகவும் பேட்டிங்கை சார்ந்து இருந்தது. பந்துவீச்சாளருக்கு ஏற்றவாறு அமையவில்லை. நான் ஏற்கனவே கூறினேன், குறைந்து போற்றப்பட்ட வீரர்கள் ஒன்று சேர்ந்து விளையாடிய ஆட்டம் என்று, அவற்றுள் மார்ட்டின் கப்டில் மற்றும் விருத்திமன் சாஹா வும் அடங்கியுள்ளவர்கள் தான். நீங்கள் என்னை கேளலாம், மார்ட்டின் கப்டில் தான் உலகில் மிகவும் சிறப்புற்ற ஒப்பனர்களுள் ஒருவர், அவரை ஏன் குறைந்து போற்றப்பட்டவர் என்று கூறியுள்ளீர் ? என, ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்த வரை, ஏலத்தில் அவரை வாங்குவதற்கு நிறைய அணிகள் சிறிது யோசிப்பர். சில முறை ஏலத்தில், விலைபோகாமல் சென்றதும் உண்டு. சாஹா தனது பேட்டிங்கிற்காக பெரிது எவ்வித தளத்திலும் போற்றப்படவில்லை. அது சர்வதேச கிரிக்கெட்டோ இல்லை லோக்கல் கிரிக்கெட்டோ, அவர் நிலை இது தான். ஆனால் அன்று வரும் பந்துகளை பௌண்டரியை நோக்கி அம்பை போன்று எய்தினார்கள். பவர்பிளே ஓவர்களில் 71/1 என்று சூர ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், வேகமாக விளையாடிய கப்டில்,36 ரன்களுக்கு பவர்பிளே ஓவர்களினுள் அவுட் ஆனார். அதற்கு பின்னும் சரவெடி தான். உள்ளிறங்கின மேக்ஸ்வெல் விண்வெளியின் வேகத்தில் சிக்ஸர்களை அடித்து பார்வையாளர்களுக்கு வானவேடிக்கையை காட்டினார். மறுபுறத்தில் சாஹா சிறப்பாக விளையாடி அரை சதத்தை கடக்க, இவர் வெகுவிரைவில் அரைசதத்தினை தொட்டு விடுவார், பல நாள் பிறகு கிடைக்கபோகின்ற அரை சதம் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, வெறும் 21 பந்துகளில் 47 ரன்கள் வெடித்து, ஆட்டமிழந்தார். நான் மறுபடியும் கூறுகிறேன், "வெடித்து". பின்னர், ஷான் மார்ஷ் களத்தில் இறங்க, சாஹா'வின் ஆட்டம் அடுத்த கியர் வேகத்திற்கு ஏற்றப்பட்டது. ஷான் மார்ஷும் அதற்கு ஏற்றவாறு விரைவாக சில பௌண்டரிகளை குவிக்க, 15.2 ஓவர்களில் 25 ரங்களுக்கு ஷான் மார்ஷ் ஆட்டமிழக்க, ஸ்கோர் 181/3 என உச்சத்தில் இருந்தது. அதிலிருந்து ஏற்றம் மட்டும் தான். இரக்கமே இல்லை. பந்துவீச்சாளர்கள் மீது இரக்கமே இல்லாமல், பௌண்டரிகளை குவித்தார்கள். அதன் காரணமாக இறுதியில் 230/3 என்ற எவரெஸ்ட் இலக்கை அடைந்தார்கள். சாஹா 93 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பும்ரா மட்டும் தான் ரன் புயலிலிருந்து தப்பிச்சென்ற ஒரே பந்துவீச்சாளர். வென்றே தீர வேண்டிய சூழல், காரணம் போன முறை இவ்வாண்டில் இவ்விரு அணிகளும் சந்தித்தபோது, பஞ்சாப் அணி, முதல் பேட்டிங்கில் 190 ரன்களை அடிக்க, திரும்பி மும்பை அணி அதனை 15 ஓவர்களில் அடித்து போட்டியை முடித்தார்கள். 

மும்பை அணியின் ஒப்பனர்களான சிம்மன்ஸ் மற்றும் பார்திவ் களமிறங்கினர். பஞ்சாப் அணியை போன்று இவர்களும் பவர்பிளே ஓவர்களை சர்வ நாசம் செய்தார்கள். குறிப்பாக சிம்மன்ஸ் முழு ஸ்ட்ரைக்கினை பெற்றுக்கொண்டு தனி ராகத்தில் பந்துவீச்சாளர்களுக்கு மைந்தனத்தை சுற்றி சுற்றி காமித்தார். அதன் காரணமாக அரை சதத்தினையும் எட்டினார். ஆனால், திடீரென விக்கெட்டுகள் விழ, ஆட்டத்தில் தங்களின் சென்ற வருகையை சத்தமின்றி உணர்த்தினார்கள். 9 முதல் 13வது ஓவர் உள்ள இடைவெளியில் 4 விக்கெட்டுகளை தவறவிட்டது மும்பை அணி. அதிலும் குறிப்பாக, லாங் ஆஃப் பௌண்டரியில் நின்றிருந்த மார்ட்டின் கப்டில், சிக்ஸரை அடையும் பந்தினை எகிறி குதித்து பிடித்தது, மிகவும் சிறப்பான தருணம். அதன் காரணமாக 13 ஓவர்களில் முடிவில் 123/4 என்கிற ஸ்கோரில் இருந்தது. இங்கிருந்து வெறும் 7 ஓவர்களில் 108 ரன்களை, அதிலும் கையில் 6 விக்கெட்டுகள் இருந்ததை பார்த்தபொழுது, கண்டிப்பாக 180-190 ரங்களுள் நின்றுவிடும், என்று தன் அனைவரும் எண்ணினார்கள். உள்ளிருந்து பொல்லார்ட் மற்றும் ஹர்திக். இருவரும் பந்துவீச்சாளர்களை தாக்கினார்கள். ஆட்டத்தில் விக்கெட்டுகள் இழந்தாலும், வேகம் குறையவில்லை. ஹர்டிக் மற்றும் பௌண்டரிகளுடன் தாக்க, சரியான நேரத்தில் ஹர்டிக் பாண்டியவையும் அவுட் ஆக்கினார்கள். ஆனால், போட்டியை வென்றே ஆகா வேண்டும், அதை செய்தால் நிச்சயம் இப்பாலில் அதிக ஸ்கோரை அடித்தது இதுவே என்கிற சாதனையை பாதிக்க வேண்டிய எண்ணம். இங்கு, மும்பை அணி நினைத்திருந்தால் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்திருப்பர், காரணம் அவர்கள் பிளே - ஆஃப், சுற்றினை அவர்கள் அடைந்தார்கள். ஆனால், ஒவ்வொரு போட்டியினையும் முக்கியம் என கருதி விளையாடுவது, அவ்வணி விட  காட்டுகின்றது. அங்கிருந்து கடைசி ஓவரில், 16 ரன்கள் தேவை என்ற நிலையிற்கு ஆட்டம் வந்தடைந்தது. மோஹித் ஷர்மாவிடம் பந்து கொடுக்கப்பட்டது. உள்ளிருந்து, நன்கு அமைத்து விளையாடிக்கொண்டிருந்த பொல்லார்ட். முதல் பந்தில், ஹர்பாஜன் 1 ரன் எடுக்க அடுத்த பந்தில், பொல்லார்ட் டீப் ஸ்குவையர் லெக் திசையினை நோக்கி ஓர் சிக்ஸர் அடிக்க, 9 ரன்கள் தேவை நான்கு பந்துகளில் என்று சூழல் மும்பை அணியிற்கு சாதகமாக அமைந்தது. ஆனால், பெரிதும் போற்றப்பதாத, மற்றும் அப்போட்டியில் மிகவும் அடி வாங்கிய மோஹித் ஷர்மா, இங்கு மிகச்சரியாக ஓர் செயலை செய்தார். ரன்களை கட்டுப்படுத்த அடுத்த மூன்று பந்துகளுமே யார்க்கர் வீசினார். இரண்டு பந்துகள் கால்களை குறிவைத்து யார்க்கர், ஒரு பந்து ஆஃப் ஸ்டம்ப்பை ஒட்டி ஓர் யார்க்கர். இறுதி பந்திலும் யார்க்கர் வீச, வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து, 7 ரங்களில் பஞ்சாப் ஆட்டம் வென்றது. இப்போது புரிந்திருக்கும் நான் யாரை போற்றப்படாத, சிறப்பான வீரர்களாக கூறினேன் என்று. அந்த பட்டியலில் மோஹித் ஷர்மாவும் ஒருவரே. 54 ரன்களை 4 ஓவர்கள் முடிவில் வழங்கியிருந்தாலும், இறுதி ஓவரில் அவர் வீசிய யார்க்கர் பந்துகள், மற்றவற்றை மறக்க செய்தது. பொல்லார்ட் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.

"யானைக்கும் அடி சறுக்கும்" என்கிற பழமொழி இங்கு நன்கு பொருந்தியுள்ளது.




ஆட்ட நாயகன் விருதை வென்றது - சாஹா (93*)                   

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?