சரித்திரத்தை மீண்டும் உருவாக்கினால்.....
லார்ட்ஸ் மைதானத்தை கிரிக்கெட்டின் வீடு என்றே அனைவரும் அழைப்பர். காரணம், இங்கிலாந்தை கிரிக்கெட்டின் கண்டுபிடிப்பாளர் என அனைவரும் அழைக்க, அக்கண்டுபிடிப்பாளரின் தலைநகரான லண்டனில், இம்மைதானம் இடம்பெற்றுள்ளது. முதன்முதலில் கட்டியமைக்கப்பட்ட தரமான மைதானமும் லார்ட்ஸ் மைதானம் தான். இங்கு, பல தலைமுறைகளாய் கிரிக்கெட் விளையாடப்படுகின்றது. பல சிறப்புவாய்ந்த போட்டிகளும் நடைபெற்றுள்ளது. பல அணிகள், இங்கு வெற்றிபெற முயல்வர். காரணம், " லார்ட்ஸ்'ல மேட்'ச ஜெயிக்கிறதே ஒரு தனி கெத்து தான சார்"
இவ்வாறு உள்ள நிலையில், 1986ம் ஆண்டில், இங்கிலாந்து அணியிற்கு எதிராக இந்திய அணி ஓர் டெஸ்ட் போட்டியை, லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றிபெறுகின்றது. அதற்கு பின், 28 ஆண்டுகாலமாய், லார்ட்ஸ் மைதானத்தில், இந்திய அணியினால் வெற்றிபெற இயலவில்லை. இதனை மாற்றியமைக்க வேண்டும். நடந்தது.
இன்று, 6 வருடங்களுக்கு முன், இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள், லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜனாக திகழும் ஓர் அணியாகும். ஆனால், மறுபுறத்தில் உள்ளதோ, அனுபவமற்ற இந்திய அணிகள். இன்னும் எளிமையாய் கூறவேண்டுமென்றால், களத்தில் இருப்பது கத்துக்குட்டிகள். அனைவரும், எதிர்பார்த்தது, ராஜனின் ஆதிக்கம் மட்டுமே. ஆனால், எதிர்பாராதது, கத்துக்குட்டிகளின் எழுச்சி.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. களமிறங்கினர், இந்திய அணியின் இளங்கன்றுகளான, முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான். இந்திய அணியை பொறுத்த வரை, நினைத்தபடி தொடக்கம் அமையவில்லை. வெறும் 7 ரன்களுக்கு களத்தை விட்டு வெளியேறினார், ஷிகர் தவான். புஜாராவும் முரளி விஜயும் இனைந்து சில ரன்களை சேர்த்தனர். ஆட்டத்தை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள், இனி வருந்த தேவையிருக்காது என நினைத்து முடிப்பதற்குள், முரளி விஜய், ஆட்டமிழந்தார். விராட் கோலி அவர்களுக்கு, தொடக்கம் நன்றாக அமைந்தது, ஆனால் அதனை இறுதிவரை இழுத்து செல்ல இயலாமல், விக்கெட்டை பறிக்கொடுத்தார். அங்கிருந்து சரிவு தான். 86 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது என்கிற நிலையிலிருந்து, 145 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு, பரிதாப நிலையில் கிடந்தது, இந்திய அணி. அனைவருக்கும், போட்டியின்மீது ஆர்வம் குறைந்தது. ஆனால், அன்று போட்டியை காணாமல், விட்டு வெளியேறியவர்களுக்கு, விலை மதிப்பில்லாத விருந்து ஒன்றை தவறவிட்டார்கள் என்றே தான் சொல்லணும்.
களத்தில் இருந்தது அஜின்கியா ரஹானே மற்றும் புவனேஷ்வர் குமார். இங்கிலாந்து அணியை பொறுத்த வரை, இவர்களை பொட்டலம் போட்டு, வெளியே வீசிவிடலாம் என்று எண்ணினார்கள். நடைபெற்றது பொட்டலம் வேலைகள் தான். ஆனால், அவையனைத்தும் இங்கிலாந்து அணியிற்கு தான். ரஹானே, தனது பொன்னான நேரத்தை கடைபிடித்து, ஒவ்வொரு ரன்னாய் சேர்த்தார். மறுபுறத்தில் உள்ள புவனேஷ்வர் குமார், தனது விக்கெட்டை பறிகொடுக்காமல், துணை புரிந்தார். மெல்ல மெல்ல ஸ்கோர் உயர்ந்தது. ரஹானே, பெரும் போராட்டத்துடன், 101 பந்துகளில் தனது அரை சதத்தை எட்டினார். ஆனால், எப்போது, அவர் அரைசதத்தை கடந்து சென்றாரோ, அத்தருணத்திலிருந்து சரவெடி தொடங்கியது. இங்கிலாந்து அணியின் ஜாம்பவான்கள் எனக்கருதப்படும் ஆண்டர்சன், பிராட், பிளங்கெட் அவர்களுக்கு எதிராக தனியொருவனாய் போராடினார். அதிரடியான ஆட்டத்தையும் வெளிக்காட்ட, அடுத்த 50 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். தனது கிரிக்கெட் வாழ்வில், தான் எட்டிய மிகவும் பொன்னான ஓர் சதம் என்றே கூறலாம். இந்திய அணி, இறுதியில் 295 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. 200 ரன்களை அடைவதே சந்தேகம் கூறிய செய்தியாய் திகழும் தருணத்திலிருந்து போராட்டத்துடன், 295 ரன்களை அடைந்தார்கள்.
இங்கிலாந்து அணி பேட்டிங்கை மேற்கொள்ள களமிறங்கியது. கேரி பாலன்ஸ் அடிக்கப்பட்ட ஓர் சதத்தின் காரணத்தினாலும், மற்றும் இறுதியில் பிளங்கெட் அடித்த ஓர் முக்கிய அரை சதத்தின் காரணங்களினாலும், 319 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளை இழக்கின்றது, இங்கிலாந்து அணி. 24 ரன்கள் முன்னிலை. முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்து, பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், தலைசிறந்து விளங்கினார். 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தனக்கு ஏற்ற ஸ்விங்கும் கிடைத்தது.
இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்றால் 300 ரன்களுக்கும் மேல், இலக்கை வழங்கினால் மட்டுமே சாத்தியமாகும். முதல் இன்னிங்சில், இந்திய அணி செய்த தவற்றை இரண்டாம் இன்னிங்சில், செய்யவில்லை. முரளி விஜய் 95 ரன்கள் குவித்து, ஓப்பனிங்கில் அசத்தினார். அவருடன் இனைந்து, தவான் மற்றும் புஜாரா அவர்கள் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்த, இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இவர்களை தொடர்ந்து, இடைத்தளத்தில் சரிவு ஏற்பட்டாலும், இறுதியில் ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் அணியை கரைசேர்த்தனர். இருவரும் அரை சதங்களை குவித்தனர். அதிலும், ஜடேஜாவிற்கு, டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் அரை சதம் ஆகும். முதல் அரைசதமோ, பொன்னாக திகழ்ந்தது.இந்திய அணி 342 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆதலால், இங்கிலாந்து அணியிற்கு இலக்கானது, 319 ரன்கள்.
இங்கிலாந்து அணியின் தொடக்கம் சுமாராய் அமைத்தது.ஆனால், இடையில் பேட்டிங்கை மேற்கொண்ட ரூட் மற்றும் மொயின் அலி, தங்கள் அணியின் நிலையை மாற்றியமைக்க விளையாடினர். இருவரும் இனைந்து ரன்களை குவிக்கும்போது, இந்தியா'வின் வெற்றி, அவர்களுடைய கைகளிலிருந்து நழுவிக்கொள்ளும் சூழல் ஏற்பட, யாராவது காப்பாளர் களத்தில் தனது கால்களை பதித்து, வெற்றியை மீது தருவானா என்கிற ஏக்கம் அனைவரின் மனதிலும் இருந்தது. 72/4 என்கிற நிலையிலிருந்து 173/4 என்கிற நிலையை அடைந்தனர். லஞ்ச் இடைவெளியிற்கு முன் வீசப்பட்ட கடைசிப்பந்தில், மொயின் அலி, தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அப்போது, ஓர் எண்ணம் தோனியின் மனதில் தோன்றியது. முடிவு செய்தார். இஷாந்த் ஷர்மாவிடம் பந்தை ஒப்படைத்து, அவரிடம் அறைக்குழி பந்துகளை வீசுமாறு கேட்டுக்கொண்டார். அவர் வீசாவுள்ள பந்துகளுக்கேற்ப, ஸ்லிப் திசையில், இரண்டு வீரர்களை நிற்கவைத்தார். பின்னர், டீப் லெக் திசையிலும், டீப் ஸ்குவையர் லெக் திசைகளிலும் வீரர்களை நிற்கவைத்தார். தந்திரத்தின் உச்சம் என்றே கூறலாம். அந்த யுக்தியின் பலன், களத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் காற்றில் பந்தை அடிக்கமுயன்று, ஸ்லிப்பில் உள்ள வீரரிடமோ, ஷார்ட் லெக் திசையில் உள்ள வீரரிடமோ, அல்லது டீப் லெக் சிஐயில் உள்ள வீரரிடமோ, கேட்ச் கொடுத்து விட்டு வெளியேறினர். இவ்வாறு தொடர்ந்து நடைபெற்றது. பலனளித்தது. இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இஷாந்த் ஷர்மா 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
28 எங்கிற எண்ணிற்கும் இந்திய அணியிற்கும், பூர்வ ஜென்மம் பந்தம் உள்ளது என்றே நான் நினைக்கிறன். காரணம், இந்திய அணி, தங்களின் இரண்டாவது உலகக்கோப்பையை கைப்பற்றுவதற்கு, எடுத்துக்கொண்ட காலம், 28 வருடங்கள். இப்போது, லார்ட்ஸ் மைதானத்தில், டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை வெற்றிபெற எடுத்துக்கொண்ட காலமும் 28 வருடம்.
ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றியது - இஷாந்த் ஷர்மா.
"இளங்கன்று பயமறியான்"- இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, இந்த வெற்றி...
"சின்ன பசங்க நாங்க, ரொம்ப நல்ல பசங்க தாங்க. ஆனா பிரச்னைன்னு வந்தா, கொஞ்சம் கேட்ட பசங்க தாங்க"
Comments
Post a Comment