பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹிட்மன் அவர்களே

 உயர்வினை நோக்கி ஓர் பயணம் 

இப்போது உள்ள இந்தியா அணியில் அனுபவம் அதிகமாய் இருக்கின்ற ஓர் வீரர் தோணியினை ரோஹித் ஷர்மா தான். 2007ம் ஆண்டில் இந்தியா அணியிற்காக தனது கிரிக்கெட் பணியினை தொடர்கின்றார். ஆனால் முதல் 5 ஆண்டுகள், மிடில் ஆர்டர் வீரராக காலம் மிறங்குகின்றார். அதன் காரணமாக ஓர் சராசரி ஆட்டத்தினை நாம் கண்டோம். பல போட்டிகளில் ஜொலித்தாலும், சில சமயம் அவர் ஆட்டம் தேவையான அளவு இல்லை என்றே அனைவருக்கும் தோன்றியது. 2007 சிபி தொடர், 2007 டீ20 உலகக்கோப்பை, 2009 மற்றும் 2010 டீ20 உலகக்கோப்பை, இவை அனைத்திலும் ஆடினார். சில போட்டிகளில் நல்ல ஆட்டத்தினை கொடுத்தாலும், முக்கியமான சில போட்டிகளில் ( 2011 உலககோப்பைக்கு முன் தென் ஆஃப்ரிக்கா தொடர்) சரியாக விளையாததால் மற்றும் அவருக்கு அப்போது கடும் போட்டியாக திகழ்ந்த விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா, சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியதால் இவருக்கு 2011 உலகக்கோப்பை விளையாட முடியாமல் போனது. ஆனால், அவர் மனம் தளரவில்லை. ஐபிஎலில் டெக்கான் சார்ஜ்ர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினர். அங்கு வெளிப்படுத்தியதை இங்கு, இந்தியா அணியிற்காக வெளிப்படுத்தினார். தோனி தெளிவாக சில இளம் வீரர்களை, மாற்று முயற்சியில் பரிசோதனை செய்து கொண்டே இருந்தார். அதில் ஒருவர் தான் ரோஹித் ஷர்மா. 2011ம் ஆண்டில், மேற்கு இந்திய தீவுகள் அணி இந்திய மண்ணில் 5 ஒரு நாள் போட்டி தொடர் ஒன்றை விளையாடும். அதில், ரோஹித் ஷர்மா 5 மற்றும் 6ம் இடங்களில் அவரை பேட்டிங் செய்ய அனுப்புவர். அப்போது அவர் 3 அரை சதங்களை முதல் மூன்று போட்டிகளில் குவிப்பார். அத்தொடரில் அதிக ரன்களை குவித்து, தொடர் நாயகன் விருதினை தட்டி செல்வார். எப்படியாவது, இந்தியா அணியில் ஓர் முக்கிய பாகமாக இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம், அவரை எந்த இடத்தில் விளையாட முயற்சி செய்தாலும், அதில் அவர் ரன்களை குவிக்கும் தரத்தில் இருந்தார். இவ்வாறே அடுத்த ஆண்டும் சென்றது.

2013ம் ஆண்டு, ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் காலத்தில், ஒர் திருப்புமுனை என்றே கூறலாம். கே.ஜி.எஃப் பாணியில் "சரித்திரத்தை அவசரத்துல படைச்சிட முடியாது, அதுக்கு ஒரு தீப்பொறி வேணும். ஆனா இப்போ காட்டு தீயே பத்திக்குச்சு". தோனி, ரோஹித் ஷர்மா'வை ஒப்பனராக மாற்றுகின்றார். இந்தியா கிரிக்கெட்டில் நடந்த மிகப்பெரிய புரட்சி என்றே கூறலாம். நாடு தளத்தில் விளையாடும் பொழுதிலேயே அவர் தனித்து ஜொலித்தார். இப்போது ஒப்பனராக மாறியுள்ளார், என்னென்ன மாயன்களை நிகழ்த்த போகின்றார் என நினைத்தாலும், ஒப்பனராக விளையாடுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால், இந்திய அணியில் ஓர் முக்கிய பாகமாக இருக்கவேண்டும் என்பதற்காக அதை எதிர்கொண்டார், ஜொலித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியிற்காக தலைமை பொறுப்பு தொடரின் இடையில் கொடுக்கப்பட்டது. அணியில் ஓர் முக்கியமான வீரர் என்கிற பெயரில் இருந்து, அணியின் தலைவனாக மாற்றப்பட்டு, அவ்வாண்டில் தங்களின் முதல் ஐபிஎல் கோப்பையினை அடித்தார். அது மட்டுமில்லாமல் சாம்பியன்ஸ் கோப்பையில் ஓர் நல்ல தொடர், பிறகு ஆஸ்திரேலியா அணியின் எதிராக நடந்த தொடரில் 3 வருடங்களுக்கு பிறகு தனது முதல் சதத்தினை பதிவிட்டார். அது மட்டுமில்லாமல், அதே தொடரில் தனது முதல் ஒரு நாள் இரட்டைசதத்தினை பதிவு செய்தார். டெண்டுல்கர் மற்றும் விரேந்தர் சேவாக் பதிவு செய்த சதங்களில், அவர்களின் அனுபவம் அதிகம் இருந்தது. ஆனால், இங்கு அனுபவம் குறைந்த, 26 வயது சிறுவன் இரட்டை சதம் அடிக்கின்றான் என்றால், அவனுடைய தன்னம்பிக்கை மற்றும் ஆட்டம் எந்த அளவிற்கு உயர்ந்தது என்பது உங்களுக்கு புரியும். அத்துடன் நின்றுகொள்ளாமல், அடுத்த ஆண்டு இருந்தாவது இரட்டை சதம் பதிவு செய்கின்றார். இன்றும் எந்த அணியின் கிரிக்கெட் வீரரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரண்டு இரட்டை சதங்களை பதிவு செய்யவில்லை. முதல் முறை 206, இம்முறை 264(இன்றும் உலக அளவில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அடித்த அதிக ஸ்கோர் இதுதான்). அதற்குப்பின், 2015ம் ஆண்டு உலகக்கோப்பை. அதிலும் ஒப்பனராக வலம் வந்து, நல்ல ஆட்டத்தினை வெளிப்படுத்துகின்றார். அதற்குப்பின் உச்சம் தான். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் சதங்களை பதிவிட்டுள்ளார். 

2018ம் ஆண்டு வரை, அவருடைய ஆட்டம் சீரானது என்று கூறமுடியாது. ஒரு போட்டியில் மிக பெரிய ஸ்கோரினை அடிப்பார், ஆனால் அடுத்த போட்டியில் சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழப்பார். ஆனால், சீராக இல்லாத ஒரு ஆட்டம் தன் எதிராணிகளுக்கு எப்போது அவர் ஜொலிப்பார், என்றே தெரியாமல் பயத்தில் ஆழ்த்தியது. ஐபிஎல் தொடரில் அதற்கு பின் 3 கோப்பைகளை தட்டி சென்று, ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான அணியாக உயர்த்தியுள்ளார். அதன் பிறகு இந்தியா அணியின் வைஸ் கேப்டன். அனால் சில தொடர்களில், தான் தலைவனாகவு பதவி ஏற்று, நன்கு ஜொலித்துள்ளார். அதன் எடுத்துக்காட்டாக நிடஹாஸ் கோப்பையின் வெற்றி, மாற்றும் ஆசியா கோப்பையின் வெற்றி ஆகும். மேலும் கூறினால், 2019ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பையில் 5 சதங்களை பதிவு செய்து 648 ரன்களை குவித்தார்( அதிக ரங்களில் முதல் இடம்), அதன் காரணமாக அவ்வண்டின் ஒரு நாள் கிரிக்கெட் வீரர் விருதினை பெற்றார். 

300 ரங்களுக்கு மிகவும் பொறுமையாக சேர்த்தார் என்கிற பெயரிலிருந்து 8000 ரன்களை மிக விரைவாக சேர்த்தார் என்கிற பெயரை பெற்றுள்ளார். ஒரு நாள் போட்டியில் மட்டும் தான் என்று பார்த்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடிய முதல் தொடரில் பேட்டிங் செய்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் சதங்களை பதிவு செய்தார். 20 ஓவர் போட்டியில் 4 சதங்களை பதிவு செய்தார். அதிக ரன் பட்டியலில், தலைமை பொறுப்பினை பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அது மட்டுமின்றி 6 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. அதில், தனது இரட்டை சத்தினை பதிவு செய்தார். இவ்வாறு "எங்கு சென்றாலும் அரசன் தான்" மற்றும் "தொட்டதெல்லாம் பொன்னாகவும்" மாறியது.

அவர் தலைமையில் பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார். நாம் கூறலாம், மும்பை அணியில் வீரர்கள் அவ்வளவு வலுவுள்ளவர்கள் என்று. ஆமாம் வலுவுள்ளவர்கள் தான், ஆனால் இவர்களை வழிநடத்தி உருவாக்கியது ரோஹித் ஷர்மா. அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு, இந்தியா அணியிற்கு ஓர் வேகபந்து வீசும், அடித்து விளாசும் ஆல் ரவுண்டர் தேவையாக இருந்தது. ஹர்திக் பாண்டியா'வை உருவாக்கி மிகப்பெரிய ஜாம்பவானாக மாற்றினார். உலக தரத்தில் வேகபந்து வீச்சாளர் தேவையாய் இருந்தது. ஜஸ்பிரிட் பும்ரா'வை மாற்றினார். இவ்வாறு இளம் ரத்தங்களை, உலகளவில் சிறப்பாக மாற்றினார், மாற்றுகின்றார்.                         

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt