RR vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து,  பஞ்சாபுக்கும் இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், ஒரு high scoring thriller. இதுல, IPLஓட சாதனையான, highest run chase ஆன 215 runs, முறியடிக்கப்படுது. " தெனை வெதைச்சவன் தெனை அறுப்பான், வெனை வெதைச்சவன் வெனை அறுப்பான்" 'ங்கிற மாதிரி, record set பண்ண RR தான் அதே recordஅ முறியடிச்சிருக்காங்க. இந்த matchஓட analysis video, என்னோட youtube channelல release பண்ணியிருக்கேன். அந்த videoவோட link - https://www.youtube.com/watch?v=dwzvKM_9rXo


 எப்படியும், இந்த மாதிரி high scoring gamesல பல turning points இருக்கும். அதுல, ரொம்பவும் சிறப்பான turning point பத்தி, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்க போறோம்.

RR tossஅ ஜெயிச்சு, fielding choose பன்றாங்க. Sharjah மாதிரி சின்ன stadiumல, fielding choose பண்ணுற option, கொஞ்சம் 50 - 50 call மாதிரி தான் தெரிஞ்சிது. காரணம், ராஜஸ்தானுக்கு middle order batting, கொஞ்சம் அடி வாங்குற நிலைமையில தான் இருக்கு. இன்னொரு பக்கம், KL Rahulலும் Mayank Agarwalலும், தீயா விளையாடிட்டு இருக்காங்க. எப்படி சமாளிப்பாங்க'ன்னு கேள்வி இருந்துட்டு இருக்கும்போது, நெனச்ச மாதிரியே ரெண்டு பெரும் சேர்ந்து அதிரடியா விளையாட ஆரம்பிச்சாங்க. 14 oversகு இவங்க மட்டுமே நின்னு score பண்ணாங்க. Wicketஏ விடல அதுல Mayank 100 அடிக்குறாரு, இன்னொரு பக்கம் KL Rahul, அரை சதம் போடுறாரு. அது காரணமா, 223/2னு இமாலய scoreல finish பன்றாங்க. ஆனா, நெனச்சிதைவிட ஒரு 10-15 runs shortனு தான் சொல்லணும். 

இதுக்கு அடுத்து ராஜஸ்தான் battingகு வராங்க. ரொம்பவும் சீக்கிரமா Butler காலி ஆகுறாரு. ஆனா, துளிகூட மனதைரியத்தை விடாம, Steve Smithதும் சஞ்சு சாம்சனும், வெறியோட விளையாடுறாங்க. ஆனா, Steve Smith, half century போட்டதும் அப்புறம் pavilion விட்டு வெளில போறாரு. அதுவரைக்கும், கையில இருந்த போட்டி, Tewatiaனு ஒரு ஆள் உள்ள எறங்குறதுனால, கொஞ்சம் கொஞ்சமா கைய விட்டு நழுவுது. Spinகு againstஅ struggle பன்றாரு. சஞ்சு சம்சனோட ஆட்டத்தை waste பண்ற மாதிரி விளையாடிட்டு இருந்தாரு. அதுல, கடுப்பாகி, சஞ்சு சாம்சன் out ஆகிட்டு வெளில போறாரு. 53 off 18 ballsனு situation திரும்புது. எல்லாரும் காரி துப்பிட்டு இருந்த Tewatia, ஒரே overல 5 sixes அடிக்குறாரு. அந்த அந்த ஒரு ஓவர், மொத்த நாடுமே அவரை புகழுது. அங்க இருந்து, வெற்றி நிச்சயம்னு நெலமை மாறுது. ஜெய்க்குறாங்க ராஜஸ்தான். சாதனை முறியடிக்குறாங்க !!

இங்க எல்லாரும் Tewatiaவோட innings தான் turning pointனு நெனச்சுக்கிட்டு இருப்பாங்க. அதுவும் ஒரு turning point தான். But, the real turning point is something beyond this !!. பஞ்சாப் பேட்டிங் பண்ணிட்டு இருக்கும்போது, 14 oversல 161/0னு இருந்தாங்க. இங்க இருந்து, அடிக்க ஆரம்பிச்சிருந்தா, RCB அடிச்ச 263 recordஏ break பண்ணிருக்கலாம். ஆனா, அப்போ boundariesஅ முழுசா cover பண்ணிட்டாரு, Captain Steve Smith. அங்க இருந்து, இடையில் வீசுன 4 oversல, நெனச்ச அளவுக்கு runsஉம் வரல. Sharjah மாதிரி stadiumsல இடையிடையில 7, 9னு runs கொடுக்குறது லாம் ரொம்பவே toughஆன விஷயம். அதை செஞ்சதுனால தான் 223 அடிக்க முடிஞ்சுது. இந்த score, இதுக்கு பின்னாடி chase பண்ணுறதுக்கும் வாட்டமா அமைஞ்சுது. 

So, இங்க credit கொடுக்க வேண்டியது Steve Smith'கு தான். !     

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?