ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் ஓர் அலசல்

அடுத்த மாதம்,  இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இது ஓர் 3 மாத கிரிக்கெட் தொடராக அமையும் நிலையில், இதற்கான வீரர்களை எப்போது தேர்ச்சி செய்வர், அதன் அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று பல வகையான கேள்விகள் மக்கள் மனதுள் இருந்து வரும் நிலையில், தற்போது, 32 வீரர்களை கொண்டு ஓர் அணியின் பட்டியலை, இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியம், தனது Twitter பக்கத்தில் வெளியிட்டது. இந்த வீரர்களின் தேர்ச்சியை அலசி ஆராய்ந்து எழுதப்படும் பதிவே இது ஆகும்.

முதலில், 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் 23ம் தேதியன்று துவக்கம் பெரும் நிலையில், அதன் அணிவகுப்பை நாம் எடுத்து பார்க்க வேண்டும். 


அதற்கு பின், டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், களமிறங்கி மோதிக்கொள்ளவுள்ளது. இத்தொடர், வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடராக அமையும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் அணிவகுப்பு - விராட் கோலி ( C ), ப்ரித்வி ஷா, KL ராகுல், அஜிங்கியா ரஹானே, ஷுப்மண் கில், ரிஷப் பண்ட், புஜாரா, ஹனும விஹாரி, சாஹா, பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், முஹம்மத் சிராஜ், சைனி, குலதீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், மயாங்க் அகர்வால்.

இறுதியாக, 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர். 

அதன் அணிவகுப்பு - விராட் கோலி ( C ), KL ராகுல், ஷிகர் தவான்,  ஷுப்மண் கில், மயாங்க் அகர்வால், ஷ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மனிஷ் பாண்டே, யுஸ்வேந்திர சஹால், குலதீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, நவதீப் சைனி, முஹம்மத் ஷமி, ஷார்துல் தாகூர். 

இவர்களுடன் சேர்த்து, கூடுதலாக 4 வேகப்பந்து வீச்சாளர்களை, பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் - தங்கராசு நடராஜன், கார்த்திக் தியாகி, இஷான் பொரேல் மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி.

இறுதியாக, ரோஹித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மா எனும் இரண்டு கிரிக்கெட் வீரர்கள், காயங்கள் காரணத்தினால் இடம்பெற மாட்டார்கள் எனவும் அவர்களின் உடல்நிலை குணமாகும் வரை கண் பார்வையில் நிச்சயம் உள்ளார்கள் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

முதலில், வருண் சக்ரவர்த்தியின் சேர்ப்பு. தமிழகத்தை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர், சமீபத்தில் நடந்து வரும் IPL தொடரில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். கிரிக்கெட்டின் ஜாம்பவானாக மஹேந்திர சிங் தோனி அவர்களின் விக்கெட்டை கைப்பற்றி பின்னர் டெல்லி அணிக்கு எதிரே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரின் பந்துகள், எத்திசையில் சுழலும் என்று கணிக்கவே முடியாததால், "Mystery Bowlerராக" கருதப்பட்டு வருகின்றார். 20 ஓவர் கிரிக்கெட் அணியில், இவருக்கு கிடைத்த இடம், தன்னுடைய வாழ்வின் போராட்டத்தை வெளிக்காட்டுகின்றது. மறவாதீர்கள், ஆஸ்திரேலியா நாட்டின் மைதானங்கள் மிகவும் பெரிது. சுழற்பந்திற்கு எதிரே ஆஸ்திரேலியா நாட்டின் வீரர்கள் தடுமாறுவதை நாம் இதற்கு முன் கண்டுள்ளோம். ஆதலால், இவருடைய சேர்ப்பு நிச்சயம் இந்திய அணிக்கு வலுவலிக்கும் செய்தியாக அமையும்.  

கூடவே, வாஷிங்டன் சுந்தரின் சேர்ப்பு, மிகுந்த மகிழ்ச்சியை வரவழைக்கின்றது.  கடந்த 3 ஆண்டுகளாக, இந்தியா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் அணியில், இருந்தும் இல்லாமலும் தான் இருந்து வந்தார். இத்தொடரில், இவர் பங்குபெறுவாரா என்கிற சந்தேகம் அனைவரின் மனத்திலும் இருந்தது. இதற்கு விடையாக தற்போது இவரை அணியினுள் இணைத்தது மிகுந்த மகிழ்ச்சியை வரவழைக்கின்றது. ஆயினும், மற்ற வடிவ போட்டிகளில், இவரை கண்டுகொள்ளாதது சிறிது வருத்தமளிக்கும் விஷயமாக இருக்க, இனி வரும் காலங்களில் தனது திறனை அனைவருக்கு அறியப்படுத்தி, மேலும் மேலும் கிரிக்கெட் வாழ்வில் வலம்வருவார் என்று நம்பிக்கை வைப்போம். 

பின்னர், நடராஜன் அவர்களை, கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக அழைத்து செயல்வது மிகவும் மகிழ்ச்சியை வரவழைக்கின்றது. சின்னப்பம்பட்டியில் பிறந்து பல ஆண்டுகள் அயராது உழைத்து, தற்போது அரபு நாடுகளில், தன்னுடைய யார்க்கர் பந்துகளில் கலக்கிக்கொண்டிருக்கு இவர், அங்கு மட்டுமின்றி வாய்ப்பு கிடைத்தால் ஆஸ்திரேலியாவிலும் கலக்குவேன் என்று மனவலிமையுடன் புறப்பட்டுள்ளார். விராட் கோலி அவர்கள் மனம் வைத்தால், விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில், கவலை இல்லை. ஆஸ்திரேலியாவில் கலக்கும் வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து, பல விஷயங்களை கற்றுக்கொள்வார். இவ்வாறு கற்றுக்கொள்ளும் பாடமானது, பின்னர் வரும் பல காலங்களுக்கு உதவும்.  

நவதீப் சைனி, அணைத்து வித தொடர்களிலும் இடம் பெற்றுள்ளதும், நமது வேகப்பந்து வீச்சின் வலிமையை மேலும் அதிகரிக்கும். தன்னுடைய திறனையும், இப்பயணம் வெளிக்காட்டுகின்றது. தீபக் சஹர் அவர்களை, ஒரு நாள் அணியிலிருந்து நீக்கியது சற்று குழப்பங்களை வரவழைக்கும். ஆனால், இவ்வாண்டின் IPL தொடரில், தனது ஆட்டம் சற்று வலிமை குன்றி காணப்பட்டது. அது மட்டுமல்லாது, ஏற்கனவே ஷமி, பும்ரா, சைனி, தாகூர் எனும் வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இவரையும் சேர்ப்பது எனும் காரியம், அணியின் batting வலிமையை குறைக்கும் விதமாக அமையும். தாகூர் அவர்கள், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கேற்ப வீசும் பந்துவீச்சாளராவார். அது மட்டுமல்லாது, தன்னால் batting மேற்கொள்ள முடியும் எனும் கூடுதல் திறன், அவரை அணியினுள் சேர்த்துள்ளது. ராகுல் அவர்களை டெஸ்ட் அணியினுள் நியமித்ததும், துணை தலைவர் பதவியில் அமர்த்தியதும் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. மயாங்க் அவர்களை, டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் அல்லது மற்ற அணியினுள் சேர்க்கப்பட்ட திட்டம், நன்றாக பார்க்கப்படுகின்றது. இவையனைத்திற்கும் ஒரே காரணம், ரோஹித் ஷர்மா இல்லாதது தான். இடது புறத்தில் காயம் ஏற்பட்டதால், இவரை நியமிக்கவில்லை என்று அறிவித்தாலும், இந்த பதிவு வெளியிடப்பட்ட சில மணி நேரத்திற்குள், ரோஹித் ஷர்மா பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. ஆகையால், இதில் மர்மம் என்னவென்று, மும்பை அணி விளையாடும் அடுத்த போட்டியில் தெரிந்து விடும். கடந்த ஆண்டில், ரிஷப் பண்ட் அவர்களின் ஆட்டத்தில் சிறிதும் தெளிவில்லாததால், நல்ல எண்ணிக்கை இல்லாததால், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது. ஆனால், அவருக்கு டெஸ்ட் அணியினுள் இடம் கிடைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், தனக்கு கிடைக்கும் வாய்ப்பினை, தன்வசம் ஆகிக்கொண்டு, தன்னை நிரூபிக்க வேண்டும். அந்த கட்டாயத்தில், அவரும் உள்ளார். இளம் சிறுத்தைகளான கார்த்திக் தியாகி, கமலேஷ் நாகர்கோட்டி மற்றும் இஷான் பொரேல் ஆகிய மூவரின் சேர்ப்பு, கவனத்தை ஈர்த்துள்ளது. சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு. இம்முறை 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டுமே. இவரைப்பொறுத்த வரை, அறைக்குழி பந்துகளுக்கு எதிரே தடுமாற்றத்தை கண்டுள்ளார். அவ்வாறு இருக்கும் நிலையில் , ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மைதானங்களில், Bounce மிகுந்து காணப்படும். அதை எதிர்கொண்டு கையாள வேண்டும். இதுமட்டுமல்லாது, inconsistency பிரச்சனையும் தன்னை துரத்திக்கொண்டே வருகின்றது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டால், மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கும். இல்லையெனில் கடினம் !. 

இங்கு இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ், எனும் இரு வீரர்களை சேர்க்காமல், ஒதுக்கிய சம்பவம் பலரின் மனதில் கோபத்தை வரவழைத்திருக்கும். சூரியகுமார் யாதவ் அவர்கள், 2018ம் ஆண்டிலிருந்து IPL கிரிக்கெட் மட்டுமல்லாது உள்நாட்டு கிரிக்கெட்

போட்டிகளிலும், சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். அவரின் ஆட்டமும், மிக மிக துணிச்சலாய் காணப்படும். மிக மிக நேர்த்தியாக விளையாடும் இவரை, ஏன் இந்திய சர்வதேச அணியினுள் சேர்க்கவில்லை என்கிற ஆதங்கமும், கோபமும் பலரின் மனதில் இருக்கின்றது. ஆனால், உண்மையாதெனில், அணியினுள் உள்ள அனைத்து வீரர்களும், பாறையைப்போன்று வலுவுடன் செயல்பட்டு வந்துள்ளார்கள். ஷிகர் தவான், மயாங்க் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் எனும் நான்கு வீரர்கள், நான்கு தூண்களாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கும் கீழ் உள்ள தளங்களில் இவரால் செயல்பட இயலுமா என்கிற கேள்வி ஒரு பக்கம் இருப்பினும், 2017ம் ஆண்டு வரை finisherராக தான் விளையாடியுள்ளார் என்கிற கணக்கும் உள்ளது. ஆனால், இதற்கு கீழ் விளையாட உள்ள வீரர்களான, ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா, கிடைக்கும் முதற்பந்திலிருந்து அடித்து ஆடும் திறம் கொண்டவர்கள் கூடுதலாக இருவருமே All Rounderகள். மனிஷ் பாண்டே, அவ்வாறு என்ன சிறப்பு நிகழ்த்தியுள்ளார் என்கிற கேள்வியிருந்தாலும், கொரோனா பாதிப்புக்கு முன் விளையாடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அவரது எண்களை எதிர்நோக்கினோம் எனில், அதில் நன்றாக விளையாடியுள்ளார் என்றே நமக்கு உணர்த்துகிறது. ஆதலால், எவ்வாறு சிந்தனை செய்தாலும் இவரை சேர்ப்பது கடினம். விளையாடும் அணியில் எடுக்காவிட்டாலும், பயணம் மேற்கொள்ளவிருக்கும் 32 நபர்களும் ஒருவராக இவரையும் சேர்த்திருக்கலாம். இஷான் கிஷன் அவர்களையும், விக்கெட் கீப்பராக பரிசோதித்தால், மேலும் ஓர் இடது கை வீரர் கிடைத்திருப்பார். அதையும் தவறியிருக்கார்கள். முஹம்மத் சிராஜ் அவர்கள் சிவப்பு பந்தில் மிக நன்றாக வீசுவார். ரஞ்சி கிரிக்கெட்டில், 36 போட்டிகளில் 147 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தன்னிடம் வேகம் உள்ளது. ஆகையால், இவருடைய சேர்ப்பு வலிமையை கூடும். 

எனவே, இந்த அணியானது, வலிமையிருந்தும் வலிமையில்லாமலும் காணப்படுகின்றது. 2018/19ம் ஆண்டில் அனுப்பப்பட்ட அணியுடன் ஒப்பிட்டு பார்த்தோமெனில், சற்று வலிமை குறைந்து காணப்படுகின்றது. இளம் இரத்தங்கள் அதிகம் உள்ளார்கள். இத்தொடர் மீது பலரின் எதிர்பார்ப்புகள் உள்ளது.              

                         


Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt