குடுகுடுவென விரைந்து வரும் ஐபிஎல் செய்திகள்

நாளுக்கு நாள், ஐபிஎல் பற்றிய செய்திகளும் தகவல்களும் வெளிவர தொடங்கியுள்ளது. ஐபிஎல் ஜுரம் ஆரம்பமாகியுள்ளது என்றே கூறவேண்டும். பல அணிகள், தங்களுடைய சொந்த ஊரில், பயிற்சி முகம் அமைத்து, குழுவாக இனைந்து, பயில்கின்றனர். சிலர், தனிப்பட்ட முறையில், தங்களின் பயிற்சிகளை மேற்கொள்ள, மேலும் சில அணிகள், பயிற்சிகளை கடந்து, வேறு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இவையனைத்தையும், கீழ்காணும் பதிவில் பார்க்கவுள்ளோம். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்த வரை, இவ்வாண்டின் ஜெர்சி ஸ்பான்சராக MPL களமிறங்கியுள்ளது. சென்ற ஆண்டு வரை, BYJUS நிர்வாகம்,  ஸ்பான்சராக பணிபுரிந்து வந்தனர். ஆனால், தற்போது, தங்கள் பணியிலிருந்து வெளியேறியது. ஆதலால், அவர்களுக்கு மாற்றாக MPL நிர்வாகம், தங்கள் கால்தடங்களை பதித்துள்ளது. கொல்கத்தா அணியின் வீரர்கள், குழு அமைக்காவிட்டாலும், தனித்த முறையில், தங்களின் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட் அணியின், துணை பயிற்சியாளராக ஆண்ட்ரே மெக்டொனால்ட், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரை விட்டுவிட்டு, ராஜஸ்தான் ராயல் அணியுடன் இணைத்துக்கொண்டார். அதனோடு, விதர்பா'வை சேர்ந்த சௌரப் துபே, ஆதித்யா தாக்கரே, யாஷ் தாகூர், நச்சிகேட் பூடே, மற்றும் இவர்களுடன் ஸ்ரீகாந்த் வாக், ஆகிய ஐவரும், ராஜஸ்தான் ராயல் அணியின் நிகர பந்துவீச்சாளர்களாக நியமிக்கப்பட்டுளளர்கள். 

டெல்லி கேபிட்டல்ஸ் அணியை பொறுத்த வரை,தனிப்பட்ட முறையில் தங்களின் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள், 6 நிகர பந்துவீச்சாளர்களை நியமிக்கவுள்ளார்கள். 

பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல், மயங்க அகர்வால் மற்றும் கிருஷ்ணப்ப கெளதம், ஆகியோர் இனைந்து, பெங்களுருவில் தங்களின் பயிற்சிகளை தொடங்கியுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து, கருண் நாயர், தனது கொரோனா பரிசோதனையை வெற்றிகரமாக முறியடித்து களமிறங்கவுள்ளார். 

சன்ரைசர்ஸ் அணியை பொறுத்த வரை, அவர்களும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இனைந்து, இம்மாத 23ம் தேதியன்று, ஐக்கிய அரபு நாடுகளுக்கு பறக்க உள்ளதாக திட்டம் வெளிவந்துள்ளது. பயிற்சியை பற்றி எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்த வரை 5 நிகர பந்துவீச்சாளர்களைநியமித்துள்ளார்கள் . பிராவின் துபே, சுஷாந்த் மிஸ்ரா, சேட்டன் சகாரியா, அமன் குமார் மற்றும் ஆதித்ய தாக்கரே ( மகாராஷ்டிரா) ஆகியோரை நியமித்துள்ளார்கள். இதற்கு இணையாக, தற்போது, யுஸ்வேந்திர சஹால், நவதீப் சைனி, பார்திவ் படேல், மற்றும்  உமேஷ் யாதவ் ஆகியோர் பெங்களூரை வந்தடைந்தனர். ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதன் முன், பெங்களூருவில் 7 நாட்களுக்கு, தனிமைப்படுத்தப்பட்டு, 6 தேர்ச்சிகளை நடத்தவுள்ளார்கள். இத்தேர்ச்சிகளில் 3க்கும் மேற்பட்ட தேர்ச்சிகளில், எதிர்மறையான தீர்வுகள் வெளிவந்தால் மட்டுமே, அவர்களை பயணம் மேற்கொள்ள அனுமதிப்பர், என தகவல் வெளிவந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரை, ரிலையன்ஸ் ஜிவ் மைதானத்தில் ஓர் பெரிய வளாகத்தை கட்டியமைத்துள்ளார்கள். அவ்வளாகத்தை, கண்ணாடிகளால் 4 புராணங்களும் வெளியமைக்க, உள்ளே கிரிக்கெட் விளையாடும் வசதிகளுடன், அமைத்துள்ளார்கள். மழையின் காரணத்தாலும், பயிற்சிகள் தடைபெறாமல் துவங்க இவ்வாறு ஓர் அமைப்பு. இதுவே, கிரிக்கெட்டின் மீது மும்பை அணியிலுள்ள காதலும் ஆர்வமும் விவரிக்கும். 

இறுதியாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அடுத்த 5 நாட்களுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இவ்வணியின் வீரர்கள், பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார்கள். நேற்று, ரெய்னா, பியூஸ் சாவ்லா, தீபக் சஹார், மோனு குமார், கெதர் ஜாதவ், ருதுராஜ் கைக்கவாட், கரண் ஷர்மா மற்றும் அணியின் தலைவனான மகேந்திர சிங் தோனி, போன்ற அனைவரும் சென்னையை வந்தடைந்தனர். இங்கு, சென்னை அணியின் சார்பாக 10 நிகர பந்துவீச்சாளர்களை நியமித்துள்ளார்கள். இவர்களும் ஆகஸ்ட் 22ம் தேதியின் நேரங்களில், ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள். 

1 ஆண்டுக்குப்பின், தல டோனி அவர்களை களத்தில் பார்க்கவுள்ளோம். ஆனால், அதனைக்கடந்து, 4 மாதங்களுக்குப் பிறகு, இந்தியா கிரிக்கெட் வீரர்களை சார்ந்த போட்டிகள் நடைபெறவுள்ளது. 

"கெத்தா நடந்து வரான், gate'அ எல்லாம் கடந்து வரான்
த்தா வெடிய ஒன்னு போடு தில்லால"           

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt