பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜிங்கியா ரஹானே

இந்திய அணியினுள் பல வீரர்கள், போற்றப்படாமல் இருப்பர். தங்கள் மதிப்பிலும் ஆட்டத்திலும் உயர்ந்து திகழ்ந்தாலும், அவர்களின் ஆட்டத்திற்கு உரிய வரவேற்ப்பு கிடைக்காமல் இருக்கும். அருகில் இருக்குவரை அருமை புரியாது என வாசகங்கள் நான் அறிவோம். அதற்கு இணங்க பல வீரர்கள் உள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் அஜிங்கியா ரஹானே.

அஜின்கியா ரஹானே, ஜூன் 6ம் தேதி, 1988ம் ஆண்டில், சந்திராபுரி எனும் மகாராஷ்டிர மாநிலத்தில் பிறக்கின்றார். பொதுவாகவே, இந்திய கிரிக்கெட் என்று எடுத்துக்கொண்டால், பல வீரர்கள் டெல்லி, மகாராஷ்டிரா போன்ற இடங்களை சேர்ந்தவர்களாகவே இருப்பர். அதில் குறிப்பாக பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதனை மீறி, இந்திய அணியில் இடம்பெறுவது மிகவும் கடின செயலாகும். மற்றும், அதில் தனக்கென உரிய காலத்தில் விளையாடியிருப்பது மிக பெரிதாகும். அவ்வாறு உள்ள வீரரே அஜின்கியா ரஹானே. 2011ம் ஆண்டில், 23வயதிஜில் , இவர் இந்திய சர்வதேச அணியில் இங்கிலாந்து அணியிற்கு எதிராக இடம் பெறுகின்றார். இவர் வலது கை பேட்ஸ்மேனாக அணியில் வலம் வருகின்றார். அணியினுள் எவ்வித இடமாக இருந்தாலும், அதில் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும் என்கிற கட்டாயம். ஆனால், அதனை சிறப்பாக நிறைவு படுத்த இயலவில்லை. காரணம், ஓப்பனிங்கில் தன்னால் செய்ய முடிந்ததை இடையில் செய்ய முடியாமல் இருக்கும் தடுமாற்றம். ஆனால், தாங்கிக்கொண்டு செய்தார்.

பொதுவாக இவர் வெகு விரைவாக விளையாடும் அளவில் உள்ள பேட்ஸ்மேன் அல்ல. சிறிது நேரம் கடைபிடித்து, தவறான பந்துகளை பௌண்டரிகளுக்கு தள்ளி மாரத்தான் இன்னிங்ஸ் விளையாடும் சிறப்புடையவர். 2013ம் ஆண்டு வரை அவருடைய இடம் உள்ளே வெளியே என மாறுபட்டே காணப்பட்டது. அதற்கு பின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய முன்னேற்றம், தேர்வாளர்கள் மீது நம்பிக்கை வழங்கியது. 2014ம் ஆண்டில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ம் டெஸ்ட் போட்டியில், அணியை காப்பதும் நோக்கத்துடன் ஓர் சதம் அடிப்பார். இச்சதத்தின் மூலமாக இவர் 4வது இந்திய பேட்ஸ்மேன், லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடும் தனது முதல் போட்டியில் சதம் வழங்குதல். அதே ஆண்டில், நியூ ஸிலண்ட் மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் மிகவும் சிறப்பாக விளையாடினார். தனது இடத்தை வலுவாக மாற்றியது.

பொதுவாக அனைத்து வீரர்களும் தனது சொந்த நாட்டில் மிகவும் நன்றாக விளையாடுவர், ஆனால் வெளிநாடுகளில் சொதப்புவர். ஆனால், அஜின்கியா ரஹானேவின் சிறப்பு குணம் வெளிநாடு மைதானங்களில் அவரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும். ஆனால், கவலை என்னவென்றால் சொந்த ஊரில் அவ்வாறு சிறப்பானதாக அமையவில்லை . ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்சுகளை கைப்பற்றியதும் இவரே (8). 2015ம் ஆண்டில் தான் எனக்கு தெரிந்து ரஹானேவின் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் வாழ்வில் சிறப்பானதாக அமைந்த ஆண்டாகும். உலகக்கோப்பையில் 2 அரை சதங்கள், இடையில் விளையாடிய பொழுதில் கிடைத்தது. அதற்கு பின், பங்களாதேஷ் அணியின் தொடரில் அடிக்கப்பட்ட முக்கிய 1 அரை சதம். பின்னர், ஜிம்பாப்வே தொடரில், தலைமை பொறுப்பு. அதில், இந்தியாவின் வெற்றிகள். பின்னர், தென் ஆஃப்ரிக்கா எதிரே விளையாடிய தொடரில், ஒரு நாள் போட்டிகளில் 438 ரன்கள் 5 போட்டிகளில் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ம் போட்டியில், இரு இன்னிங்சிலும் சதங்கள் என கூறியவாறு செல்லலாம். ஆனால், இதற்கு பின் ஒரு நாள் மற்றும் இருவது ஓவர் போட்டிகளில், தனது ஆட்டம் பழுதாகியது. 2018ம் ஆண்டில் தான் கடைசியாக குறைந்த ஓவர் போட்டிகளில் இடம் பெற்றார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மதிப்பு உயர்ந்த நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா அணியிற்கு எதிராக 2017ம் ஆண்டில் தலைமை பொறுப்பு மாஸ்ட்டரும் ஆப்கானிஸ்தான் அணியிற்கு எதிரே தலைமை பொறுப்பு என அணியின் தூமை தசல்ஸிவ்ஸ்ர்ஸ்க்ஸ் நசுங்கு பணிபுரிந்தார். தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில், 11 சதங்கள் மற்றும் 22 அரை சதங்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,203 ரன்கள் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 2,962 ருங்கள் என தனக்கென ஓர் உரிய அடித்தளத்தை அமைத்துள்ளார். ஆனாலும், இவருக்கு நினைத்த வாறு மதிப்பு கொடுக்கவில்லை. ஆனாலும் இவர் மனம் தளராது ஓடிக்கொண்டிருக்கின்றார், தனது கிரிக்கெட் வாழ்வை நோக்கி............ !
      

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt