இரு மாறுபட்ட போட்டிகள்

சென்ற ஆண்டு, இதே நாளில், 2019ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள், லீட்ஸ் மைதானத்தில் ஒரு புறம் போட்டியிட, மறுபுறம், மாஞ்செஸ்டர் மைதானத்தில், தென் ஆஃப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இரு போட்டிகளிலும் உள்ள ஒற்றுமை, இவ்விரு போட்டியின் முடிவுகள், எந்த வகையிலும் அரை இறுதி சுற்றிற்கு தகுதி பெற்ற அணிகளின் நிலையினை மாற்ற இயலாது. ஆனால், இலங்கை மற்றும் தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கு தங்கள் மரியாதையை இழக்காது, தொடரை முடிக்க வேண்டிய நிபந்தனை.  ஆனால், இவ்விரு போட்டிகளும் ஒன்றை போன்று மற்றோன்று அமையவில்லை.

இந்தியா - இலங்கை, லீட்ஸ் 

லீட்ஸ் மைதானத்தில், இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டது. இந்திய அணி, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. ஆனால் இலங்கை அணியின் நிலை, அவ்வாறு அமையவில்லை. சில போட்டிகளில், அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும், மிகவும் மோசமான தொடராக அமைந்தது, இலங்கை அணியிற்கு.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அன்று இந்திய அணியின் பந்துவீச்சு அசத்தலாய் அமைந்தது. இலங்கை ஙிஹ்யின் வீரர்களால், அதனை தாக்குப்பிடித்து விளையாட தடுமாறினர். 55 ரங்களுக்கு முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. வேகப்பந்து வீச்சிற்கு ஏற்ப பிட்ச் நன்கு பங்களித்து, பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியினை வழங்கியது. இதனை மீறி நன்கு ரன்களை குவித்தால் மட்டுமே இந்திய அணியினை எதிர்த்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஓர் ஓரத்தில் எட்டும் என புரிந்துக்கொண்ட மெத்தியூஸ் மற்றும் திருமண்ணே, தொடக்கத்தில் சில நேரம் கடைபிடித்து நின்றனர். பந்துவீச்சாளர்களின் யுக்தியினை யறிந்துக்கொண்ட பின் அதனை முறியடிக்க முயற்சித்தனர். அனுபவம், அன்று நன்கு துணைபுரிந்தது. இருவரும் அரை சதங்களை கடந்தனர். மெத்தியூஸ் குறிப்பாக சதம் அடித்தார். ஆனால், திருமண்ணே, அவ்வாய்ப்பினை தவறினார். இறுதியில், 264/7 என ஓர் நடுநிலை ஸ்கோரினை அடித்தார்கள். பும்ரா'வின் பந்துவீச்சு, இலங்கை அணியின் உடலினை நடுங்க வைத்தது.

இந்திய அணி பேட்டிங்கை மேற்கொள்ள களமிறங்கியது. அனைவரும் ஒரு புறம் எதிர்பார்த்தது, இங்கிலாந்து அணியின் எதிரே, அசாத்தியத்தை நிகழ்த்தியவாறு, இந்திய அணியிற்கு எதிராகவும் நிகழ்த்துவர் என்று. ஆனால், அவ்வாறு எண்ணம் இருந்திருந்தால், அதனை குழி ஒன்றை தோண்டி புதைக்குமாறு கேட்குமளவிற்கு, இந்திய அணி எதிர்த்து விளையாடியது. ரோஹித் மற்றும் ராகுல், இருவருமே சதங்கள் குவித்தனர். ராகுலை பொறுத்த வரை, உலகக்கோப்பை தொடரில் தான் அடித்த முதல் சதம், தனது வாழ்வில் நினைவில் கொண்டிருக்கும் ஓர் சிறப்பான சதம் என்றாலும், மறுபுறம் ரோஹித் ஷர்மா'விற்கு இச்சதத்தின் மூலம், இவ்வுலககோப்பையில் மட்டும் ஐந்தாவது சதத்தை பெற்றிருக்கின்றார். உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறுகளில், முதல் முறை, இச்சம்பவத்தை நிகழ்த்தியது. இருவரும் மிக மிக அருமையாக விளையாடி, கட்டிடத்தை கட்டி முடிக்க, அதன் உள்ளிருப்பு அமைப்புகளை வழங்கினார் விராட் கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியா. மிக எளிதில் கிடைத்த வெற்றியாகும்.

ஆட்ட நாயகன் விருதை வென்றது - ரோஹித் ஷர்மா 

ஆஸ்திரேலியா - தென் ஆஃப்ரிக்கா, மான்செஸ்டர் 

மான்செஸ்டர் மைதானத்தில், ஒரு நாள், மதியம் இரவு போட்டியில், ஆஸ்திரேலியா அணி மற்றும் தென் ஆஃப்ரிக்கா அணிகள் மோதியது. அரையிறுதி சுற்றை அடைந்த முதல் அணி என்கிற பெயரை பெற்றது ஆஸ்திரேலியா அணி. ஆனால், மறுபுறம், சிறப்பான ஆட்டத்தை வெளியிடவில்லை தென் ஆஃப்ரிக்கா அணி. இலங்கை அணியின் வெற்றிகளில், சில அற்புத சம்பவங்கள் இருப்பினும், தென் ஆஃப்ரிக்கா அணியின் வெற்றிகளில், நினைக்கும் அளவிற்கு அழுத்தமின்றி கிடைக்கப்பட்ட வெற்றிகள் என கூறலாம். இருப்பினும், தங்கள் அணியின் மரியாதை அவசியம்.

டாஸ் வென்ற தென் ஆஃப்ரிக்கா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. வழக்கத்திற்கு மாறாக இரு ஒப்பனர்களும் நன்கு தொடக்கம் வழங்கினர். டீ காக்கும் மார்க்ரமும் மிக அதிரடியான தொடக்கங்களை வழங்கினர். மார்க்ரம் அரை சதத்தை தவற விட்டார். ஆனால், டீ காக் அரை சதத்தை கைப்பற்றினர். ஆனால், சதம் அடிக்கும் வாய்ப்பினை தவறிய பின், களமிறங்கினர்டூ ப்ளஸிஸ் மற்றும் வண்டெர் டஸ்ஸன். இருவரும் மிக மிக அருமையாக விளையாடினர். இவ்விருவரிடம் இருந்த கூற்று, அணியினை நன்கு வழிநடத்தியது. ஆஸ்திரேலியா அணியிற்கு ஆட்டம் கண்டது. டு ப்ளஸிஸ் சதம் அடித்தார். வண்டெர் டஸ்ஸான் 95 ரன்களுக்கு, இறுதி பந்தில் கேட்ச் கொடுத்து விட்டு களத்தை  விட்டு வெளியேறினார். 325/6 என ஓர் இமாலய இலக்கு, ஆனால் ஆஸ்திரேலியா அணியிற்கு எதிராக சற்று குறைந்த இலக்கை அடித்தார்கள்.

ஆனால், சம்பவம் அன்று காத்திருந்தது. எவ்வணியிற்கு என நீங்கள் இனி வரும் எழுத்துகளில் காண்பீர்கள். டேவிட் வார்னர் மற்றும் ஃபின்ச் களமிறங்கினர். தாஹிரின் சுழற்பந்து வீச்சில் விழுந்தார் ஃபின்ச். அதற்கு ஷார்ட் கவர் திசையில், மிகவும் தந்திரமாக ஃபீல்டரை நிறுத்தி வைத்தார் டூ ப்ளஸிஸ். அன்று கவாஜா அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் ஸ்டீவ் ஸ்மித்தும் சொதப்பினார். ஆனால், வார்னர் தனியொருவராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தென் ஆஃப்ரிக்கா அணி பேட்டிங்கில் சிறப்பாக செய்தது, அவர்களிடம் இருந்த பார்ட்னெர்ஷிப். ஆனால் இங்கு ஆஸ்திரேலியா அணியிடம் அது நிற்கவில்லை. வார்னர் சதம் அடித்தார். கேரி, அதிரடியாக பௌண்டரிகளை குவித்து எதிராணியிற்கு பயம் காட்ட, போட்டி விறுவிறுப்பாக சென்றது. கேரியும் அரை சதம் அடித்தார். மிகவும் போராடினர், ஆஸ்திரேலியா அணி. ஆனால், இறுதியில் 315 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. 45ம் ஓவரில் கேரியின் விக்கெட் வீழ்த்தப்பட்ட பின், ஆஸ்திரேலியா அணியின் வாய்ப்புகளும் மங்கியது. தென் ஆஃப்ரிக்கா அணி, ஓர் மாயத்தை நிகழ்த்தினார்கள். தொடரின் முழுவதிலும் அடிவாங்கிய அணி, இறுதி போட்டியில், அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணியிற்கு எதிரான போட்டியில், அவர்களை சுருட்டி வெற்றி பெற்றது அவர்களுக்கு மீண்டும் ஓர் ஊக்கம் அளிக்கும் எனவும், இத்தோல்வியை ஆஸ்திரேலியா அணி எப்போதும் மறக்கமாட்டார்கள்.

ஆட்ட நாயகன் விருதை வென்றது - டூ பிளெஸ்ஸிஸ் 

                       

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt