கோலியிடம் 18வது ஓவர் கொடுத்த காரணம் என்ன ???

வரலாற்றில் இன்று - சென்னை vs பெங்களூரு போட்டி, சென்னை

8 வருசத்துக்கு முன்னாடி, சென்னைக்கும் பெங்களூருக்கும் நடுல ஒரு திரில்லர் போட்டி நடந்துச்சு. சென்னை அணியோட ரசிகர்களை பொறுத்த வரைக்கும், இன்னிக்கி வரைக்கும் கொண்டாடப்பட வேண்டிய போட்டியா அமைஞ்சுடுச்சு, அது ஏத்தாப்ல கொண்டாடிட்டும் இருக்காங்க. ஆனா பெங்களூரு அணியோட ரசிகர்களை பொறுத்த வரைக்கும், குறிப்பா கோலியோட ரசிகர்களுக்கு, ஒரு கெட்ட கனவா, மறக்க வேண்டிய போட்டியா அமைஞ்சுடுச்சு. சரி இந்த மேட்ச்ச பத்தி இப்போ பாக்கலாம்.

முதல்ல டாஸ் வென்ற பெங்களூரு அணி, பேட்டிங் தேர்ந்தெடுத்தாங்க. கிறிஸ் கெயில் அதிரடியா ஆடினாரு. மயாங்க் அகர்வாலும் சுறுசுறுப்பான 45 ருங்கள் அடிச்சாரு, கோலியும் நல்ல அரைசதம் அடிச்சாரு. முதல் 16 ஓவர்'ல 162/2 னு ஸ்கோர் இருந்துச்சு, அப்போ கிறிஸ் கெயில் 68 ரங்களுக்கு அவுட் ஆனாரு. அடுத்து சீக்கிரமாவே டீ வில்லியர்ஸும் அவுட் ஆனார். ஆனா கோலி , திவாரி இருக்காங்க, எப்படியும் 210கு மேல அடிக்க போறாங்கன்னு நெனச்சிட்டு இருந்தப்போ, திவாரி அவுட் ஆனாரு. 19 ஓவர்கள்'ல ஸ்கோர் 198/4. உள்ள இருந்தது கோலி மற்றும் சின்ன பையன் பட்கல், பௌலிங் போடா வர்றது பொலிஞ்சர். ஆனா அந்த ஓவர் சென்னை அணி ரசிகர்கள் இன்னிக்கி வரைக்கும் கொண்டாடிட்டு இருங்காங்க. முதல் பந்து , கோலி அவுட் ! லாங் ஆன் கிட்ட கேட்ச் !!. இரண்டாவது பந்து, புஜாரா ஸ்ட்ரைக்'ல இருந்தாரு. அவுட் ! புஜாரா பவுல்டு !!, இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் !!. மூன்றாவது பந்து, ஸ்ட்ரைக்கில் இருந்தது வெட்டோரி. சிங்கிள் எடுத்து குடுத்தாரு. நான்காவது பந்து, வெட்டோரி ஸ்ட்ரைக்ல இருக்காரு. விக்கெட் ! வெட்டோரி ரன் அவுட் !!. நான்கு பந்துகளில் மூன்று விக்கெட்டுகள். ஐந்தாவது பந்து, பட்கள் ஸ்ட்ரைக்ல இருக்காரு. மறுபடியும் விக்கெட் ! மிட் - ஆஃப் கிட்ட கேட்ச் !!. ஐந்து பந்துகளில் 4 விக்கெட்டுகள். கடைசி பந்து, வினய் குமார் ஸ்ட்ரைக்கில். சிக்ஸர் !! ஸ்கோர் 205/8. அந்த அஞ்சு பந்துல நாலு விக்கெட் விழும்னு எவனும் எதிர்பாத்துக்க மாட்டான். ஆனா சென்னை அணிக்கு இலக்கு 206 தேவை 

சென்னை அணி பேட்டிங்'கு வந்தாங்க. பெங்களூரு அணியை ஒப்பிடும் போது சென்னை அணியோட தொடக்கம் கொஞ்சம் பொறுமையா தான் இருந்துச்சு. ஆனா டூ ப்ளஸிஸ் சிறப்பா பேட்டிங் பண்ணாரு. முரளி விஜய் விஜய் 11 ரங்களுக்கு அவுட் ஆனாரு. அடுத்த 3 ஓவருக்குள்ள ரெய்னாவும் அவுட் ஆனாரு. தோனி கூட சேர்ந்து டு ப்ளஸிஸ் அற்புதமா விளையாடினார். டு ப்ளஸிஸ் 71 ருண்களுக்கு அவுட் ஆனாரு, தோனியும் 40 ரங்களுக்கு அவுட் ஆனாரு. டு ப்ளஸிஸ், முரளி விஜய் மற்றும் சுரேஷ் ரெய்னா மூணு பேரோட விக்கெட்டையுமே எடுத்தது முரளிதரன். அன்னிக்கி அவர் சிறப்ப பந்து வீசினாரு. நல்லா விளையாடினாலும், அந்த போட்டியில பெருசா ஒன்னும் சென்னை அணிக்கு தேவப்பட்டுச்சு. அது சரியாய் சொல்லனும்னா 18வது ஓவர்ல வந்துச்சு. கோலி பந்து வீச வந்தாரு, ஸ்ட்ரைக்கில் ஆல்பி மோர்கல். தேவைப்பட்டது ரெண்டு ஓவர்ல 43 ரன்கள். முதல் பந்து, ஃபோர் !. இரண்டாவது பந்து வீச வரார் கோலி, சிக்ஸர் !!. முதல் இரண்டு பந்துல பத்து ரன்கள் எடுத்துட்டாங்க. மூணாவது பந்து வீச வராரு, டென்ஷனான கோலி. மறுபடியும் ஃபோர் !!. நான்காவது பந்து, சிக்ஸர் !!!. இந்த நாலு பந்துல இருவது ரன்கள் எடுத்துட்டாங்க. இப்போ தேவை 8 பந்துல, 23 ரன்கள். கொஞ்சம் சாத்தியமானது. ஐந்தாவது பந்த வீச வராரு, இரண்டு ரன்கள் . கடைசி பந்து, சிக்ஸர் !!!. ஒரே ஓவரில் 28 ரன்கள் அடிச்சு போட்டியா சென்னை பக்கம் கொண்டு வந்துட்டாங்க. கோலி மூஞ்சே சிவந்து போச்சு. அதுக்கு அடுத்த ஓவர்ல, வினய் குமார் பந்து வீச வராரு, தேவை 15 ரன்கள். முதல் ரெண்டு பந்துகள்'ல வெறும் 1 ரன் மட்டுமே குடுத்து, மோர்கேல்லோட விக்கெட்டையும் எடுத்தாரு. மூணாவது பந்து, பிராவோ ஸ்ட்ரைக்கில் , நோ பால்  !! ஃபோர் !!!. நான்கு பந்துகள்'ல 9 ரன்கள் தேவை, ஃபிரீ பந்து வீச வராரு, சிக்ஸர் !!. ரெண்டு பந்துகள்'ல 3 ரன்கள். சிங்கிள் எடுத்தாரு பிராவோ. கடைசி பந்து இரண்டு ரன்கள் தேவை. ஜடேஜா ஸ்ட்ரைக்கில், ஃபோர். சென்னை அணி அற்புதமா ஜெயிச்சுது. ஆட்ட நாயகன் சந்தேகமே இல்லாத வகையில டு ப்ளஸிஸ்.

இப்போ தலைப்புக்கு வருவோம். அன்னிக்கி ராத்திரி கோலியை மொத்த ஊடகமுமே வெச்சு செஞ்சுது. அந்த ஓவர் காரணமா தான் பெங்களூரு அணி தோதுச்சுன்னு இன்னிக்கி வரைக்கும் எல்லாரும் சொல்லிட்டு இருக்காங்க. நெறய பேர் கோலி எதுக்கு அந்த ஓவர் போட்டாருனு கேட்டுட்டு இருந்தாங்க. அந்த வருஷம், பெங்களூரு அணியோட பந்து வீச்சாளர்கள் அவ்வளவு சிறப்பானவங்களா இல்லை. முக்கியமா பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் கம்மி'னு கூட சொல்லலாம். அதோட எதிரொலி தான் அன்னிக்கி நடந்துச்சு. அணிகிக்கி சிறப்பா பந்து வீசின ஜாஹீர் கான், முரளிதரன், வெட்டோரி மூணு பேருமே அவங்களோட ஓவர்கள்'ல முழுசா முடிச்சிட்டாங்க. வினை குமார் ஒருத்தர், பட்கல் ஒருத்தர் மற்றும் கோலி, இவங்க மட்டும் தான் இருந்தாங்க. கெயில் கூட பௌலிங் போடுவார், ஆனா 18வது ஓவர்'ல அவர்கிட்ட பந்து கொடுத்தா அவ்வளவு தான். வினய் குமார் 18 வது ஓவர் போட்டுட்டா, கடைசி ஓவர் போடுறதுக்கு, கோலி  இல்ல பட்கல் தான் இருந்தாங்க. அது சுத்தமா சரிப்பட்டு வராது. பட்கல் ஏற்கனவே அவர் போட ரெண்டு ஓவர்'ல 35 ரன்கள் குடுத்துட்டாரு, அதே நேரத்துல கோலி 1 ஓவர்ல 8 ரன் மட்டுமே குடுத்தாரு. சரி இவர விட்டா வேற யாருமே இல்லை, அது நால அவர் கிட்ட குடுத்தாரு அப்போதைய கேப்டன் டேனியல் வெட்டோரி. அது காரணமா கோலி அடி வாங்குனாரு. அந்த வருஷம் முழுசாவே, சரியான பந்து வீச்சாளர்கள் இல்லாததுனால, கடைசி ஓவர்கள்'ல கோலி, கையில் போன்ற பேட்ஸ்மேன்கள் பந்துத்வ வீசுவதை பாத்திருப்போம். அதோட விளைவு தான், அந்த வருஷம் கடைசியில அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமையே வெளில போனாங்க. இதுல கோலியை, நம்மளால ஒண்ணுமே சொல்ல முடியாது. அவர் கேப்டன் சொன்னதை தான் செஞ்சாரு. ஆனா, இதோட முழு காரணம் டேனியல் வெட்டோரி தான் சேரும். நிறைய போட்டிகள்'ல நடுல உள்ள சில ஓவர்கள்'ல இவங்கள பயன்படுத்தி இருக்கலாம். கடைசி ஓவரில் பயன்படுத்துவாரு, மத்த பௌலர்களை பயன்படுத்தி இருக்கக்கூடாது. ஏலத்துல டீம் ஓனர்கள், பந்து வீச்சாளர்கள் மேல கவனம் செலுத்தி இருக்கலாம்.......                                        

 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?