மட்டைப்பந்து போட்டியில் கால்பந்து - ஐபிஎல் வரலாற்றில் இன்று

உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், 7 ஆண்டுகளுக்கு முன்பு புனே வாரியர்ஸ் இந்தியா என்ற ஓர் ஐபிஎல் அணியும் விளையாடியதும், மற்றும் அவர்கள் 3 வருடங்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார்கள் என்பதும், மற்றும் 2013ம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட்டை விட்டு விளக்கப்பட்டது. அதன் காரணமாக, அவ்வணியிற்கு ஓர் ட்ரிபூட் செலுத்தும்படி இப்பதிவினை நான் எழுதுகின்றேன். ஆனால், அதை மட்டும் வைத்து எழுதாமல், கிரிக்கெட்டில் சில மறக்கவியலாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதில் ஒன்று இப்போட்டியில் நடந்தது. அதையும் மனதில் வைத்து நான் எழுதுகின்றேன். கொல்கத்தா அணியினை பொறுத்த வரை இதற்குமுன் விளையாடிய 14 போட்டிகளில் 8 போட்டிகளை காவு கொடுத்து, 6 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளனர். அடுத்த இரண்டு போட்டிகளை வென்றால் மட்டுமே, அடுத்த சுற்றினை அடைவதற்கு ஓர் மெலிதான வாய்ப்பு இருக்கும். மறுபுறத்தில், புனே அணி விளையாடிய 14 போட்டிகளில் 2 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளனர். அடுத்த சுற்றினை நிச்சயம் அடைய முடியாது. அதுமட்டுமின்றி, இவர்கள் விளையாடிய 3 ஆண்டுகளிலும் நிலை இது தான். அதனால், தங்களின் புகழிற்காக விளையாடுவதாகும். 

இடம் - ராஞ்சி. நேரம் - மாலை.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. கடைசி இரண்டு போட்டிகளில் தங்களுடைய பந்துவீச்சு மிகவும் மேம்படுத்தி காணப்பட்டது.அதன் மீது மீண்டும் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால், சிறப்பான தரமான சம்பவம் அன்று நடைபெற்றது. மிகவும் அருமையான தொடக்கத்தை தொகுத்தது புனே அணி. ரன் ரேட்டில் சிறிதும் குறைய வில்லை. ஃபின்ச்  பந்துகளையும் பௌண்டரிகளாக மாற்றியமைத்தார். இடையில் சில விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், பின்ச் தனது ஆட்டத்தில் தெளிவாக காணப்பட்டார். அவருடன், 3வது இடத்தில் களம் இறங்கிய மனிஷ் பாண்டே, மிகவும் அழகாக பௌண்டரிகளை சேர்த்தார். பின்னர் அவரை 48 ரன்களுக்கு வீழ்த்தியும், பின் வாங்காமல், தங்களின் ஆட்டத்தை விளையாடினர். குறிப்பாக மனிஷ் பாண்டே, சிறப்பாக விளையாடி அரை சதத்தை கடந்தார். கடைசி ஓவரில், அவர் அடித்த இரு பௌண்டரிகள், அவரின் அன்றைய தெளிவினை விளக்கும். ஆஃப் சுடும்பினை நோக்கி  பந்தினை சற்று அருகில் நகர்ந்து, ஃபைன் லெக் மற்றும் ஸ்குவையர் லெக் திசையில் நின்னிருந்த இருவருக்கும் நடுவில் பந்தினை அடித்தார். இறுதியில் 170/4 என்கிற நல்ல இலக்கை தொட்டது புனே அணி. அதில் மனிஷ் பாண்டே 66 ரன்கள் குவித்திருந்தார்.

நான் கூறியது தான், இப்பொட்டியை வென்றால் மட்டுமே கொல்கத்தா அணியிற்கு ஓர் வாய்ப்பு. அதை மனதில் கொண்டு விளையாட வேண்டும். ஆனால், தொடக்கத்தில் முதல் மூன்று விக்கெட்டுகளை 29 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டது. அதில், குறிப்பாக வெய்ன் பார்னெல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார், முக்கியமாக காலிஸின் விக்கெர்ட்டை வீழ்த்துவதற்கு அவர் வீசிய யார்க்கர் பந்து, கண்களுக்கு இனியதாக திகழ்ந்தது. வெகு விரைவாக, அவர் அடிக்க முயன்ற ட்ரைவ் ஷாட்டை மீறி ஸ்டும்பினை அடித்தது. அதன் காரணமாக 33/3 என்று பவர்பிளே ஓவர்களில் முடிவில் ஸ்கோர் இருந்தது. ஆனால், யூசுப் பதான் மற்றும் டெண்டஸ்காட்டே அங்கிருந்து மிகவும் சிறப்பாக ஆட்டத்தை நகர்த்தினார்கள். குறிப்பாக, யூசுப் பதான், தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 7 விக்கெட்டுகள் கையில் வைத்து 44 ரன்கள் 27 பந்துகளில் அடிக்க வேண்டும் என்று கணக்கு இருந்தால், ஆட்டத்தின் போக்கினை எவ்வாறு மாற்றியுள்ளார்கள் என்று புரிந்துக்கொள்ள வேண்டும். அங்கிருந்து வெற்றி அருகில் தான் உள்ளது என்று நினைக்கும் நேரத்தில் சரிவு ஏற்பட்டது. முதலில் டெண்டஸ்காட்டே, குழப்பத்தில் ரன் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் மனோஜ் திவாரியும் தனது விக்கெட்டை இழந்தார். ஆட்டம் சூடேறியது. தேவை 37 ரன்கள் 18 பந்துகளில். அரை சதத்தினை எட்டிய யூசுப் பதான் உள்ளே இருக்கின்றார், அவர் பார்த்துக்கொள்வார் என்று அனைவரும் நினைத்தார்கள்.அவரும், 18வது ஓவரில், முதல் மூன்று பந்துகளில் 14 ரன்களை அடித்தார். ஆனால், அதே ஓவரின் ஐந்தாவது பந்தில், நடந்தது தான் மறக்கவியலாத ஓர் சம்பவம். பார்னெல் பந்தினை வீச, யூசுப் பதான் அப்பந்தினை பார்னெல் அருகிலேயே அடித்துவிட்டு, அவர் அப்பந்தினை கைப்பற்றி யூசுப் பதானை ரன் அவுட் செய்ய நேரும்போது, ஓடிக்கொண்டிருந்த யூசுப் பதான், தனது கால்களால் அப்பந்தினை உடைத்து விட்டு ஓடும்போது அது தெரியாமல் நடந்தது போன்று காண்பிக்க, மறுமுறை அதை பார்க்க, உண்மை தெரிந்தது. ஃபீல்டர்களை தங்கள் வெளியை செய்ய விடாமல் தடுத்தது என்று கூறி அவருக்கு அவுட் கொடுத்தார். "லெட்ஸ் ஃபுட்பால்" என்கிற ஐ.எஸ்.எல் பாட்டு மனதில் வந்தது. அங்கிருந்து சரிவு தான். இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி ஆட்டத்தை வென்றது. "
புனே அணியிற்கு கொண்டாட்டம், கொல்கத்தா அணியிற்கு திண்டாட்டம்"

ஆட்ட நாயகன் விருதை பெற்றது மனிஷ் பாண்டே.            

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?