RCB vs CSK | RR vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. ரெண்டுலயுமே, இந்த முறை chasing teams தான் ஜெயிச்சாங்க. இதுல ஒரு பக்கம், result பெருசா play-off'அ பாதிக்காதுன்னாலும், இன்னொரு matchல வர்ற result, நிச்சயமா impact பண்ணும். அதே மாதிரி, impact பண்ணவும் பண்ணுச்சி. இதுல இன்னொரு கூத்து, ரெண்டுமே one sided game'அ அமைஞ்சுது. இந்த ரெண்டு matchesல இருக்குற முக்கியமான turning point என்னன்னு இந்த blogல நாம பார்க்கலாம்.
முதல்ல பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையில match நடக்குது. Toss ஜெயிக்கிற பெங்களூரு முதல்ல batting choose பன்றாங்க. ஆனா, நெனச்ச அளவுக்கு runs வரவே இல்ல. Wicket slowங்கிற காரணத்தை நாம முன்னாடி எடுத்து வெச்சாலும், இந்த காரணத்தை தாண்டி, நெறய எடத்துல chance எடுக்காம இருந்தாங்க. கடைசில, நெறய wickets விட்டதுனாலயும், boundaries வராததுனாலயும், வெறும் 145/6 தான் அடிச்சாங்க. அதை திரும்ப chase பண்ண CSK, Ruturaj Gaikwadஓட அசத்தலான batting காரணமா, கொஞ்சம் easyயா chase பண்ணிட்டாங்க. கடைசியா, ஒரு youngster spot ஆகியிருக்கான்.
இந்த match'ஓட Post Match Analysis videoவ Cric_Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க, அப்டியே subscribe'உம் பண்ணுங்க !
இந்த match'ஓட turning pointனு நாம பாத்தோம்னா, ரெண்டு விஷயம். எல்லாரும் Ruturaj Gaikwad அவர்கள் தான் காரணம்னு சொல்லுவாங்க. அது முக்கியமான reason தான் ஆனா அதையும் தாண்டி உண்மையான reason, CSKவோட fielding தான். Usualலா CSKகு அது தான் பெரிய தலைவலியா இருந்திருக்கு, அது கூடவே Virat Kohli மற்றும் Ab de Villiers இடையே இருக்குற running between the wickets ரொம்ப நல்லா இருக்கும். ஆனா, இன்னிக்கி அந்த running between the wicketsகு முட்டுக்கட்டைய போட்டுட்டாங்க. அதுகூடவே, வழக்கம் போல Faf'ஓட fielding, இனிக்கும் தரமா இருந்துச்சு. அது தான் சென்னைக்கு இந்த match'அ ஜெயிச்சு கொடுத்துச்சு.
இதுக்கு அடுத்து, மும்பைக்கும் ராஜஸ்தானுக்கு இடையில match நடக்குது, Toss ஜெயிக்கிற மும்பை அணி முதல்ல batting choose பன்றாங்க. Rajpoot போட்ட full toss காரணமா, Hardik Pandya பொளக்குறாரு. அந்த அடியினால, MI 195/5னு பெரிய score அடிக்குறாங்க. Abu Dhabiல இந்த scoreலாம் அடிக்கவே முடியாது. இருந்தும் உள்ள வர்றாங்க RR batsmen. Stokes, வந்த முதல் ballல இருந்து, காட்டுத்தனமா அடிக்குறாரு. அவருக்கூட துணையா யாரு ஆடப்போறாங்கன்னு எல்லாரும் எதிர்பார்த்தது இருக்கும்போது, Sanju Samson உள்ள வந்து, நான் இருக்கேன்னு கூட நிக்குறாரு, ரெண்டு பெரும் சம்பவம் பண்ணுறாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவையும் Cric_Muhan Youtube channelல post பண்ணியிருக்கேன். RCB vs CSK match videoவோட சேர்த்து, இந்த videoவையும் பாருங்க !.
இங்க Stokesஓட planning தான், ராஜஸ்தான்ன ஜெயிக்க வெச்சுது. முதல்ல, இந்த spin duo ஆன Rahul Chahar மற்றும் Krunal Pandyaவ settle ஆகவே விடல. எல்லா teamsஉம், பெரிய scoreர chase பண்ணும்போது, middleல கொஞ்சம் தள்ளி தள்ளி, deathல அடிக்கலாம்ன்னு plan பண்ணுவாங்க. சில பேர் எல்லா ballsஅயும் அடிச்சு ஆடணும்ன்னு, சுத்து சுத்துன்னு சுத்துவாங்க. ஆனா, இது ரெண்டையும் பண்ணாம, யாரை குறிவெக்கணுமோ அதை மொதல்ல செஞ்சாங்க. அதுக்கு அடுத்து, வர்ற pacer ஒவ்வொருத்தரையும், கொஞ்சம் கொஞ்சமா அடிக்க ஆரம்பிச்சு கடைசில எல்லாரையும் மிதிச்சி நசுக்கிட்டாங்க. இன்னும் RRகு playoff chance இருக்குது.
Comments
Post a Comment