மூன்றாவது ஐபிஎல் அணி

அடுத்த ஐபிஎல் அணியினை பற்றி பேசுவதற்கு முன், இவ்வணியினை பற்றி ஓர் சின்ன குறிப்பு. இந்த அணி 2008ம் ஆண்டில், மிகவும் குறைந்த விலையில் தங்கள் அணியின் வீரர்களை தேர்வு செய்தனர். வெறும் 20 கோடி மதிப்பில் எடுக்கப்பட்ட அணி இது. இந்த அணி, தங்கள் இளம் வீரர்களை வளர்ப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். பல அணிகள் இடையிலிருந்து இவ்வேலையினை தொடங்கினாலும், இந்த ஒரு அணி மட்டும் தங்கள் முதல் தொடரிலிருந்தே இப்பணியினை மேற்கொண்டுள்ளனர். அவ்வணி தங்களின் இளமையான வீரர்களை வைத்து முதல் ஐபிஎல் தொடரின் கோப்பையை கைப்பற்றினர். 

அவ்வணி வேறு எதுவும் இல்லை ராஜஸ்தான் ராயல்ஸ். தங்களின் முதல் ஐபிஎல் தொடரில் கோப்பையினை கைப்பற்றியது. ஷேன் வார்ன் தலைமையில், சிறுத்தைக்குட்டிகளை வைத்து முதல் சுற்றில், 14 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் தூவி அடைந்து, 11 போட்டிகளை வென்று, முதலிடத்தில் இருந்தது. பிறகு இறுதி போட்டியில், கடைசி பந்தில் நான்கு அடித்து கோப்பையினை வென்றது. ஆனால், அவ்வணி அதற்கு பின், 3 முறை மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடிந்தது. அதுக்கு ஓர் முக்கிய காரணம், அந்த அணியில் உள்ள ஒவ்வாத விளையாட்டு. அவர்களின் விளையாட்டினை, யாராலும் புரிந்துக்கொள்ள முடியவில்லை. சில போட்டிகளில் 190 ரன்கள் இலக்காக வைத்தாலும், அதை மிகவும் எளிதாக அடித்து முடிப்பர், அதுவே சில போட்டிகளில் 140 ரன்கள் மட்டுமே இலக்காக வைத்தாலும், அதை அடிக்க தடுமாறுவர். இத்தடுமாற்றம், கடந்த 12 ஆண்டுகளாக உள்ளது( 2013ம் ஆண்டினை தவிர்த்து )...........

அந்த அணியின் கணக்கு, எப்போதுமே சிறிய வீரர்களை ஊக்கப்படுத்தி பெரிதாக மாற்றுவதே. அஜிங்கியா ரஹானே, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா ( முதல் 3 ஆண்டுகள் ), ஷ்ரேயஸ் கோபால், முனாஃப் படேல்(முதல் 3 ஆண்டுகள் ), யூசுஃப் பதான்( முதல் 3 ஆண்டுகள் ), போன்ற பல இந்திய வீரர்கள் இளங்கன்றுகளாக இவ்வணியில் ஆடியவர்கள் தான். அது மட்டுமின்றி, இச்சிறுவர்களை வழிநடத்த வெளிநாட்டு அனுபவம் வாய்ந்த வீரர்களை வாங்குவர். இப்பொழுது, தவறு எங்கே என்று உங்களுக்கு புரிந்திருக்கும். ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை வாங்கும்போது, அவர்கள் கணக்கில் தவறி வீரர்களை வாங்கியாவதால் இக்குழப்பம் ஏற்படுகின்றது. இந்தியாவில் விளையாடும் திறம் வாய்ந்தவர்களா என்று அவர்கள் பார்த்து வீரர்களை வாங்கியிருந்தால், இக்குழப்பம் ஏற்பட்டிருக்காது. ஆனால், இவ்வளவு குழப்பத்தில் அவர்களை பாராட்ட வேண்டிய ஓர் செய்தி உள்ளது. அது அவர்கள் சிறுவர்களை கண்டறிந்து, வளர்ப்பது மட்டுமே. ஷேன் வார்ன், ராகுல் டிராவிட், கிரேம் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித், ஜஸ்டின் லாங்கர், ஷோயப் தன்வீர் போன்ற வலராற்று சிறப்புமிக்க வீரர்கள் விளையாடிய அணி, வரும் காலங்களில் இந்த இன்னலை சரிசெய்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றுவர் என நம்பி அவர்கள் விளையாட்டை ரசிப்போம்......       

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?