கோலியின் 12 வைர ஆண்டுகள்
இன்று, 2008ம் ஆண்டு, இந்தியா மற்றும் இலங்கை அணிகள், கொழும்பு'வில், 5 ஒரு நாள் போட்டிகளுள், முதல் போட்டியாக மோதிக்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி, எவ்வித எண்ணங்களுமின்றி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அன்று, இந்திய அணியின் தலைவரான, தோனி அவர்கள், ஓர் கத்துக்குட்டியை களத்தில் அறிமுகப்படுத்துகின்றார்.
அந்த கத்துக்குட்டியோ, இப்போட்டிக்கு முன், அவ்வாண்டில் நடைபெற்ற 19 வயதிற்கும் கீழ் உள்ளோரின், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று, அதில் இந்திய அணியை வழிநடத்தி, கோப்பையை கைப்பற்றினார். மிகவும், நேர்த்தியான வலது கை வீரராக களமிறங்கும் இவர் தான், பிற்காலத்தில் உள்ள கிரிக்கெட் உலகினையே ஆளும் அரசனாக வலம்வரவுள்ளேன் என அன்று எவரும் அறியாததே.
முதல் போட்டியில், ஒப்பனராக களமிறக்கப்படுகின்றார். அந்த இளம் வீரன், முதற் போட்டியில், 12 ரன்கள் மட்டுமே அடித்தவாறு, விக்கெட்டை பறிக்கொடுத்து செல்கின்றான். அன்று, இந்திய தோல்வியடைகின்றது. ஆனால், தோனி அவர்களோ, அச்சிறுவனுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் அளிக்க, அவன் ஜொலிக்க துவங்கினான். பல சாதனைகளை படைக்கின்றான். உலகையே வெல்கின்றான்.
யார் அவன் ? என பலர் புரியாமல் வினவலாம். ஆனால், சிலரோ, யாரென்று கண்டறிந்து, இந்நேரம் இன்பமுற்று கொள்வர். தெரியாதோருக்கு மட்டுமே எனது பதில்களை பதிக்கிறேன்.
நான் கூறுகின்ற, வரலாற்று சிறப்பு பெற்ற வீரர், அன்றைய போட்டியில் இளங்கன்றாக களமிறங்கும், விராட் கோலி. இளங்கன்று, முரட்டு காளையாக மாறிய கதையே, இதுவாகும். ஆனால், கோலி அவர்களுக்கு, இன்னும் பல ஆண்டுகள் கிரிக்கெட்டில் மிச்சம் உள்ளது.
இவரை, அடுத்த டெண்டுல்கர் என்றும் பலர் கூறுவர். அதற்கு முக்கிய காரணம், இவர் அடிக்கும் சதங்கள் மட்டுமே. ஆனால், இவரை அடுத்த டெண்டுல்கர் என்று அழைப்பதை தவிர்த்து விடவேண்டும். டெண்டுல்கர் ஒரு துருவம் என்றால், கோலி வேறு ஒரு துருவம் ஆவார். கோலியின் ஆட்டத்தை, டெண்டுல்கரின் ஆட்டத்துடன் ஒப்பிட்டு, ஓர் கட்டுக்குள் அமைத்து விட வேண்டாம். வட்டத்தை கடந்து, சாதனைப்படைக்கும் வீரரே, இவர்.
" வட்டம் போட்டு வாழ்வதற்கு, வாழ்க்கை என்ன கணிதமா
எல்லை தாண்டி, நீ ஆடிப்பாரு, எதுவும் இல்லை புனிதமாய் "
உலகத்தரத்தில், தற்போது 70 சதங்களை, தனது பெயரின் கீழ் வைத்துள்ளார். அதில், 7 இரட்டை சதங்களும் உள்ளது. இது மட்டுமல்லாது, ஓர் தலைவனாக, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து நாடுகளில், தனது வெற்றிகளை படைத்துள்ளார்.
இவ்வரியை படித்தவுடன், பலர் வந்து வினவலாம். நியூஸிலாந்திலும் இங்கிலாந்திலும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவினாரே, நீங்கள் எவ்வாறு, வெற்றி தடங்களை பதித்தார் என பதிவிடலாம் ?. அதற்கு என் பதில், வெளிநாடுகளில், குறிப்பாக இந்நான்கு நாடுகளில், வெற்றிபெறுவது என்பதே இயற்கைக்கு அசாத்தியமான காரியம் ஆகும். அதில், இவருடைய தலைமையில், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து நாடுகளில், 20 ஓவர் தொடரை வென்றுள்ளது இந்திய அணி . முக்கியமாக, நியூஸிலாந்து நாட்டில், ஐந்து 20 ஓவர் போட்டிகளில், ஐவற்றையும் வென்றுள்ளது, இந்திய அணி.
ஒரு பேட்ஸ்மேனாக, கோலியின் ஆட்டம், மிக அழகாகவும், மிக நேர்த்தியாகவும் காணப்படும். எப்பெயர்பெற்ற வீரனாக இருந்தாலும், 3 வகை கிரிக்கெட்டிலும் வெற்றிபெறுவது என்பது கடினமாகும். அவ்வாறு உள்ள நிலையில், இவரோ அதை, கனகச்சிதமாக செய்து வருகின்றார்.
பந்துவீச்சாளர்களிடம் " வெட்ட இது வேட்ட, வேங்கையோட கோட்ட
மாத்திக்கோ நீ ரூட்டை, எல்லை தாண்ட மாட்ட" என்று கோலி அவர்கள் மிகவும் சத்தமாக உரைத்துக் கொண்டு வருகின்றார்.
ஆனால், மகிழ்ச்சி யாதென்றால், கிரிக்கெட்டில், இவருடைய செய்கைகளை காண்பதற்கு, மேலும் பல ஆண்டுகள் மிச்சம் உள்ளது என்பது தான்.
ஆதலால் " சிறப்பான தரமான சம்பவங்கள, இனிமே தான் நாம பாக்க போறோம் ".
Comments
Post a Comment