ஐபிஎல் அணி எண் - 7
இன்று நான் வேறொரு அணியினை பற்றி பதிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், தமிழ் புத்தாண்டு என்பதும் மற்றும் நான் பதிவிடவுள்ள அணி எண் : 7. ஆதலால், நான் இவ்வணியினை பற்றி கூரவுள்ளேன். இப்பொழுதே பல கிரிக்கெட் ரசிகர்கள், நான் எந்த அணியினைப்பற்றி கூரவுள்ளேன் என்பதை ஏற்கனவே புரிந்துகொண்டிருப்பீர். புரியாதோரிடம், நான் அதன் வரலாற்றினை பதிவிடுகிறேன்.
ஐபிஎல் தொடரில், மிகவும் சீரான, மாறுபடாத, அணைத்து தொடரிலும் அடுத்த சுற்றினை ( Playoffs ) அடைந்துள்ளனர். அதில் மூன்று முறை ஐபிஎல் கோப்பையினை தட்டிச்சென்றனர், அதுவும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஐபிஎல் கோப்பையினை ஜெயித்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள், ஐபிஎல் தொடரில் விளையாட தடை செய்யப்பட்டது. தடை காலம் முடிந்த பின், 2018ம் ஆண்டில் அவர் ஏலத்தில் எடுத்த வீரர்களை கண்டு, டாடி'ஸ் ஆரமி என்று அணைத்து வலைத்தளங்களிலும் கலாய்த்தார்கள். ஆனால், அவ்வாண்டில், தங்களின் மூன்றாவது கோப்பையினை கைப்பற்றியது.
இப்பொழுது நீங்கள் நினைத்தபடி, நான் பதிவிடுகின்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.
மிகவும் சீரான போட்டியினை வெளிப்படுத்தும் அணி. தோனியின் தலைமையில், ஒரு ஆண்டு கூட அடுத்த சூட்டினை தவறவிட்டதில்லை. அனைவரும் 2018ம் ஆண்டில், சென்னை அணி மிகவும் வயதானவர்களை தேர்ந்தெடுத்தனர் என்று கூறினர். சென்னை ஆரம்பத்திலிருந்தே, அனுபவம் வாய்ந்த வீரர்களை கவனம் கொண்டு எடுத்தார்கள். அதற்கு எடுத்துக்காட்டு, ஹெய்டன், மைக்கேல் ஹஸி, முத்தையா முரளிதரன், மகாயா ன்டினி,ஸ்காட் ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம் பின் பிரண்டன் மெக்கல்லம் (எடுத்தபோது வயது 32), டுவெயின் ஸ்மித்( வயது 31), ஆஷிஷ் நெஹ்ரா. இப்பொழுது ஷேன் வாட்சன், பியுஷ் சாவ்லா, அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், கரண் ஷர்மா. ஆனால் இவ்வனைத்து அனுபவம் வாய்ந்த வீரர்களும், 20 ஓவர் போட்டியில் ஜொலிப்பவர்களே. அதுவும் இவர்களால் சென்னை அணியில் இளம் வீரர்களை வளர்க்க மாட்டார்கள் என்கிற பெயரும் உண்டு. அதையும் நான் பொய் என்று கூறுவேன். சென்னை அணியிலிருந்து தான், முரளி விஜய் ( 8 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய ஒப்பனராக விளையாடியுள்ளார்), பத்ரிநாத்( இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது, அவரின் விளையாட்டு அவ்வளவு ஈர்ப்பு இல்லை), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, மோஹித் ஷர்மா இப்பொழுது பார்த்தால் தீபக் சஹார், ஷரதுள் தாகூர் என கூறிக்கொண்டே போகலாம். அது மட்டுமின்றி விளையாடும் அனுபவம் வாய்ந்த, ஏற்கனவே இந்திய அணியில் விளையாடியவர்கள், திரும்பவும் இந்தியா அணியினுள் வந்திருக்கார்கள். அதற்கு எடுத்துக்காட்டு ராயுடு, கேதார் ஜாதவ், ஆஷிஷ் நெஹ்ரா.
இவ்வணி பல ஆண்டுகளாக 20 ஓவர் போட்டியில் என்ன செய்தால், பலன் ஈர்க்க முடியும் என்று அழகாக புரிந்து கொண்டு, அதை சரியாக செய்து வருகின்றனர். இன்னோர் செய்தி, இந்த core (அடித்தளம் ) அணி, என்று அணைத்து அணிகளும் கூறி உருவாக்குகின்றனர். ஆனால் இதன் விதையினை விதைத்தது சென்னை அணி தான். 2012ம் ஆண்டில் தோனி, பின் இளம் வீரர்களான ரெய்னா, ஜடேஜா, அஷ்வின், பிராவோ, டூ ப்ளஸிஸ், ஹஸி என்கிற ஓர் மாறாத அணியினை தயாராக்கினார். அந்த அணியில் ஹஸி இப்பொழுது அவ்வணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணிபுரிகிறார், அஷ்வின் மட்டுமே மத்த அணியினில் இப்பொழுது விளையாடுகின்றார். மத அனைவரும் வயதானாலும் சென்னை அணியில் தான் விளையாடுகிறார்கள். மிகவும் அணியினையும், இத்தொடரையும் புரிந்தவர்கள். அதுவும் சென்னை அணியின் கணக்கு எப்போதுமே அனுபவம் வாய்ந்த ஒரு ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன், முதல் தலத்தில் விளையாடுவார், எடுத்துக்காட்டு ஹெய்டன், ஹஸி இப்போது வாட்சன். இன்னோர் செய்தி, இவ்வணியில் 7ம் விக்கெட்டில் வரும் வீரரும் பேட்டிங் செய்யும் படி வருவார், அவ்வளவு ஆழமான பேட்டிங் மற்றும் அவ்வளவு பலம்வாய்ந்த பேட்டிங். அதனால் தான் எல்லா ஆண்டுகளிலும் சிறந்த ஆட்டத்தினை, உலக தரத்தில் வெளிப்படுத்துகின்றனர். சில சமயங்களில் ஜெயிக்கவே முடியாத நிலையிலிருந்து வென்றுள்ளனர். இவ்வணியின் ரசிகர் கூட்டம் இன்னும் உலகில் ஒரு அணியிக்காக இருக்கின்ற மிக சிறந்த ரசிகர் கூட்டம் என்றே கூறலாம். 2 ஆண்டுகள் தாடையில், மற்ற அணியாக இருந்தால் வேறு அணியின் பக்கம் சென்றிப்பார்கள், ஆனால் சென்னை அணியின் ரசிகர் கூட்டம் இன்னும் பெருகியுள்ளது என்றே கூறலாம். ஆனால் இவ்வனைத்தும் டோனி என்கிற ஓர் கிரிக்கெட் ஜாம்பவான் இருப்பதால் மட்டுமே சாத்தியம். சென்னை ரசிகர்கள் அவரை தங்கள் தத்து மகனாகவே ஏற்றுக்கொண்டனர். சென்னை அணியின் ரசிகர் கூட்டத்துக்காக மிகவும் பல செயல்களை செய்திருக்கின்றனர், பயிற்சி போட்டியினை பார்ப்பதற்காக இலவசமாகவே ரசிகர்களை மைதானத்தினுள் அனுமதித்து, அதையும் மைதானம் முழுவதுமாக நிரம்பி காணப்பட்டது.
ஆனால் இவ்வணி இனிமேல் ஓர் புது அடித்தளம் உடைய அணியினை மீண்டும் உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. இளம் வீரர்களை வைத்து, அவர்களை வளர்த்து, அவர்களுடன் ஓர் அனுபவம் வாய்ந்த வீரர் ஒருவர் நின்று கூட்டிச்செல்ல வேண்டும், ஏனெனில் ( தோனி இன்னும் 1 ஆண்டு மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் அவர் வயது 40ஐ தொடப்போகிறது மற்றும் இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்கு இவர்களையே வைத்து 3 வருட ஒப்பந்தத்தில் வீரர்களை எடுப்பார்கள்). இப்பொழுது இளம் வீரர்கள் மற்றும் தமிழகத்தினை சேர்ந்த சில வீரர்களை வைத்து அணியினை வளர்க்க வேண்டும். பின் வரும் காலங்களில் அது நடக்கும்.
ஐபிஎல் தொடரில், மிகவும் சீரான, மாறுபடாத, அணைத்து தொடரிலும் அடுத்த சுற்றினை ( Playoffs ) அடைந்துள்ளனர். அதில் மூன்று முறை ஐபிஎல் கோப்பையினை தட்டிச்சென்றனர், அதுவும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஐபிஎல் கோப்பையினை ஜெயித்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள், ஐபிஎல் தொடரில் விளையாட தடை செய்யப்பட்டது. தடை காலம் முடிந்த பின், 2018ம் ஆண்டில் அவர் ஏலத்தில் எடுத்த வீரர்களை கண்டு, டாடி'ஸ் ஆரமி என்று அணைத்து வலைத்தளங்களிலும் கலாய்த்தார்கள். ஆனால், அவ்வாண்டில், தங்களின் மூன்றாவது கோப்பையினை கைப்பற்றியது.
இப்பொழுது நீங்கள் நினைத்தபடி, நான் பதிவிடுகின்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.
இவ்வணி பல ஆண்டுகளாக 20 ஓவர் போட்டியில் என்ன செய்தால், பலன் ஈர்க்க முடியும் என்று அழகாக புரிந்து கொண்டு, அதை சரியாக செய்து வருகின்றனர். இன்னோர் செய்தி, இந்த core (அடித்தளம் ) அணி, என்று அணைத்து அணிகளும் கூறி உருவாக்குகின்றனர். ஆனால் இதன் விதையினை விதைத்தது சென்னை அணி தான். 2012ம் ஆண்டில் தோனி, பின் இளம் வீரர்களான ரெய்னா, ஜடேஜா, அஷ்வின், பிராவோ, டூ ப்ளஸிஸ், ஹஸி என்கிற ஓர் மாறாத அணியினை தயாராக்கினார். அந்த அணியில் ஹஸி இப்பொழுது அவ்வணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணிபுரிகிறார், அஷ்வின் மட்டுமே மத்த அணியினில் இப்பொழுது விளையாடுகின்றார். மத அனைவரும் வயதானாலும் சென்னை அணியில் தான் விளையாடுகிறார்கள். மிகவும் அணியினையும், இத்தொடரையும் புரிந்தவர்கள். அதுவும் சென்னை அணியின் கணக்கு எப்போதுமே அனுபவம் வாய்ந்த ஒரு ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன், முதல் தலத்தில் விளையாடுவார், எடுத்துக்காட்டு ஹெய்டன், ஹஸி இப்போது வாட்சன். இன்னோர் செய்தி, இவ்வணியில் 7ம் விக்கெட்டில் வரும் வீரரும் பேட்டிங் செய்யும் படி வருவார், அவ்வளவு ஆழமான பேட்டிங் மற்றும் அவ்வளவு பலம்வாய்ந்த பேட்டிங். அதனால் தான் எல்லா ஆண்டுகளிலும் சிறந்த ஆட்டத்தினை, உலக தரத்தில் வெளிப்படுத்துகின்றனர். சில சமயங்களில் ஜெயிக்கவே முடியாத நிலையிலிருந்து வென்றுள்ளனர். இவ்வணியின் ரசிகர் கூட்டம் இன்னும் உலகில் ஒரு அணியிக்காக இருக்கின்ற மிக சிறந்த ரசிகர் கூட்டம் என்றே கூறலாம். 2 ஆண்டுகள் தாடையில், மற்ற அணியாக இருந்தால் வேறு அணியின் பக்கம் சென்றிப்பார்கள், ஆனால் சென்னை அணியின் ரசிகர் கூட்டம் இன்னும் பெருகியுள்ளது என்றே கூறலாம். ஆனால் இவ்வனைத்தும் டோனி என்கிற ஓர் கிரிக்கெட் ஜாம்பவான் இருப்பதால் மட்டுமே சாத்தியம். சென்னை ரசிகர்கள் அவரை தங்கள் தத்து மகனாகவே ஏற்றுக்கொண்டனர். சென்னை அணியின் ரசிகர் கூட்டத்துக்காக மிகவும் பல செயல்களை செய்திருக்கின்றனர், பயிற்சி போட்டியினை பார்ப்பதற்காக இலவசமாகவே ரசிகர்களை மைதானத்தினுள் அனுமதித்து, அதையும் மைதானம் முழுவதுமாக நிரம்பி காணப்பட்டது.
ஆனால் இவ்வணி இனிமேல் ஓர் புது அடித்தளம் உடைய அணியினை மீண்டும் உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. இளம் வீரர்களை வைத்து, அவர்களை வளர்த்து, அவர்களுடன் ஓர் அனுபவம் வாய்ந்த வீரர் ஒருவர் நின்று கூட்டிச்செல்ல வேண்டும், ஏனெனில் ( தோனி இன்னும் 1 ஆண்டு மட்டுமே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் அவர் வயது 40ஐ தொடப்போகிறது மற்றும் இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்கு இவர்களையே வைத்து 3 வருட ஒப்பந்தத்தில் வீரர்களை எடுப்பார்கள்). இப்பொழுது இளம் வீரர்கள் மற்றும் தமிழகத்தினை சேர்ந்த சில வீரர்களை வைத்து அணியினை வளர்க்க வேண்டும். பின் வரும் காலங்களில் அது நடக்கும்.
Comments
Post a Comment