அடுத்த ஐபிஎல் அணி

ஐபிஎல் எனும் வாழ்க்கையில், ஒரு கூட்டத்தை சேர்ந்த 8 நண்பர்களுள், ஒரு நண்பன், ஒரு தத்தளித்தும் உள்ளனர்மனிதனைப்பற்றி தான் நாம் பார்க்கவுள்ளோம். அந்நண்பனைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால், பல ஆண்டுகளாக கடினப்பட்டு, சிக்கி, அவமானம் பட்டு, கடைசி ஒரு படியில் வெற்றியை தவறவிட்டு, சோக்கர்கள் என்கிற பட்ட பெயருடன், புதிய, வெற்றிபெற்ற தொழிலை மேற்கொள்ள நேர்ந்து, அத்தொழிலினால் இவன் மற்றும் நஷ்டப்பட்டு,  ஊடகங்களில் கடும் எதிராக விமர்சிக்கபட்டும், இதற்கு இடையில் தன்னால் முடிந்த வரை மற்றவர்களை சந்தோஷப்படுத்துகின்றான். அவனுக்கு என ஒரு கூட்டம் அவனை  தட்டிக்கொடுத்து கொண்டிருக்க, அந்த ஒரு கூட்டத்திற்காக அவன் தன்னம்பிக்கை குறையாமல், மீண்டும் மீண்டும் வெற்றியினை நோக்கி முயல்கின்றான். 

அந்த மனிதர் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அத்தொழில் வேறுயெதுவுமில்லை அவர்கள் எடுத்த கிரிக்கெட் வீரர்கள். அக்கூட்டம் அவர்கள் பின்னால் நின்று இன்னும் அவர்களை விட்டுக்கொடுக்காமல், ஆலமரம் விழுது போல தாங்கி நிற்கின்ற அவ்வணியின் ரசிகர்கள். இந்த ஐபிஎல் தொடர் தொடக்கத்திலிருந்து, மூன்று முறை இறுதிபோட்டியினை அடைந்து, அங்கிருந்து மிக அருகில் இருக்கின்ற கோப்பையினை தவறினார்கள். சில ஆண்டுகளில், அணிகளின் பட்டியலில், அடி மட்டத்தில் தத்தளித்தும் உள்ளனர். சில ஆண்டுகளில் அவர்களுடைய ஆட்டத்தினை கண்டு ரசிக்காத மனிதர் எவரும் இல்லை. ஆனால் அவ்வாண்டுகளில் இறுதியில் உதை வாங்கி கோப்பையினை தவறவிட்டனர். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டு இருக்கின்றனர்.

இவர்களின் மனநிலை, எப்போதும் சிறந்த வீரர்கள் கிடைப்பார்கள் எனவும், உலகில் உள்ள சிறந்த வீரர்களை வாங்க வேண்டும் என்வும் ஏலத்தில் அவர்கள் எண்ணம் இருக்கும். ஆனால் அவ்வணியினை வைத்து என்ன செய்ய முடியும், எவ்வளவு சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்த முடியும் மற்றும் கிடைத்த அணியினை வைத்து எவ்வாறு செயல்படுத்த முடியும் எனவும் ஒரு தெளிவான திட்டம் இல்லாததால், இவ்வளவு பலம் வாய்ந்த அணியாக காகிதத்தில் தெரிந்தாலும், விளையாட்டில் வெளிப்படுத்த முடியவில்லை. அத்திட்டம் மற்றும் சிந்தனையினை வலுப்படுத்த வேண்டும்.இறுதி போட்டியிற்குள் நுழைவதற்கு முன், நல்ல திட்டம் செயல்பாடு, அதற்கு ஏற்ற ஓர் திருப்புதல் நடைமுறை செய்து பார்க்க வேண்டும். அதுவும் இப்பொழுது உள்ள அணி விராட் மற்றும் டீ வில்லியர்ஸை நம்பியே இருக்கு. அது மட்டுமின்றி அணியின் அணிவகுப்பு மேலாண்மை சரியாக செயல்படாததும் தங்கள் தோல்விகளின் ஓர் முக்கியம் காரணம்.

ஆனால் இச்சிறு தவற்றினை புறந்தள்ளினால், அவ்வணி எல்லா ஆண்டுகளிலும் ஐபிஎல் ரசிகர்களை சந்தோஷப்படுத்தாமல் போனதே இல்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு தரத்தினை கொண்டு வந்துள்ளனர். எல்லா ஆண்டுகளிலும் மரங்களை வளர்க்க வேண்டும் என்கிற விழுப்புணர்வினை ஊட்டுவதற்காக, பெங்களூரில் நடக்கும் இறுதி மாலை நேர போட்டியில், பச்சை நிற ஜெர்சியினை உடுத்தி எதிரணியின் கேப்டனிடம் மரச்செடியினை கொடுப்பர். மக்கள் மனதில் இயற்கை பாதுகாத்தலை இக்கிரிக்கெட் வாயிலாக விதைக்கின்றனர்.

இத்தவறுகளை சரி செய்தால், கண்டிப்பாக கோப்பையினை கைப்பற்ற இயலும். வரும் காலங்களில் இதை சரி செய்வார்கள் என நம்பலாம். அதற்கு அணியின் பயிற்சியாளர்கள், அணியின் தலைவன் மற்றும் துணை பயிற்சியாளர்கள் இனைந்து, ஆராய்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக ஏலத்தில் எடுக்கும் வீரர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தொடரின் சில வாரங்களுக்கு முன் திருப்புதல் செய்து  கொள்ள வேண்டும்.

              

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt