இரு விறுவிறுப்பான போட்டிகள் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

இரண்டு வருடங்களுக்கு முன், இதே நாளில், இரு போட்டிகள் நடந்தது. இரண்டுமே விறுவிறுப்பான போட்டிகளாக அமைந்தது. ஏப்ரல் 22, 2018 ம் ஆண்டு, இவ்விரு போட்டிகள் நடந்தது. அவ்வாண்டில் நடந்த பல போட்டிகள் விறுவிறுப்பான கடைசி ஓவரில் முடிவடைங்கிற போட்டியாகவே அமைந்தது. ( நாங்கள் பாவமடா, எங்களை விட்டுவிடுங்கள், இவ்வளவு படபடப்பு கொடுக்கும் போட்டிகளை நாங்கள் பார்த்தால், எண்களின் இருதயம் தாங்காது) என்று பார்வையாளர்கள் நினைக்கும் அளவில் அவ்வளவு உயர் தரத்தில், எவ்வணியும் எவ்விடத்திலும் தங்களின் ஆட்டத்தினை விட்டுக்கொடுக்காமல் இருந்தது.

முதல் போட்டி - சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடந்த போட்டி. இடம், ஹைதராபாத்.  மாலை நேரப்போட்டி. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சினை தேர்வு செய்தது. சென்னை அணி முதல் பவர்ப்பிளே ஓவர்களில் வெறும் 27 ரன்கள் மட்டுமே அடித்தார்கள். இரு ஒப்பனர்களான வாட்சன் மற்றும் டூ ப்ளஸிஸ், சொற்ப ரங்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் நோக்கி திரும்பினர். ரெய்னா ஒரு புறத்தில் பொறுமையாக விளையாட, மறுபுறத்தில் மண்ணின் மைந்தனாக ராயுடு காலத்தினுள் இறங்கினார். முதல் பத்து ஓவர்களில் 55/2 என்கிற மிகவும் குறைந்த ரன்களை எடுத்து இருந்தார்கள். அனைவரும், சென்னை இன்று கண்டிப்பா 140 ரங்களுக்கு சுருண்டு விடுவார்கள், ஹைதராபாத் அணி இப்போட்டியினை எளிதாக வென்று விடும் என்று நினைத்து இருந்தார்கள். ஆனால் ராயுடு( இது என் ஊர், இங்கு பந்து எவ்வாறு திரும்பும், பிட்ச் எவ்வாறு வேலை செய்யும் என்று எனக்கு தெரியும்) என்று சொல்லி சொல்லி வருகினற பந்துகளை பௌண்டரிகளை நோக்கி அடித்தார். ஹைதெராபாத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிரபல திரைப்பட இயக்குனரான எஸ் எஸ் ராஜமௌலி அவர்கள் எழுந்து நின்று கைதட்டினார் ராயுடுவின் பேட்டிங்கை பார்த்து. இதை ஏன் அவ்வளவு பெரிய செய்தாக நீ சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. என்ன செய்வது இப்பதிவின் நீளத்தினை இன்னும் உயர்த்த ஓர் முயற்சி மற்றும் சினிமா ரசிகர்களுக்காக ஓர் படையல் என்று கூறலாம்

சரி, சில வெட்டி விட்டு விடுவோம். ராயுடு மிக சிறப்பாக விளையாடினார். மாரு புறத்தில் ரெய்னா நிதானமாக ஓர் அரை சாதத்தினை பதிவு செய்தார். பின் இறுதியில், டோனியின் சிந்தனை கேமியோ இன்னிங்ஸ்சான 25*(12), இறுதியில் சென்னை அணியின் ஸ்கோரை 182/3 என உயர்த்தியது. ராயுடு வெறும் 37 பந்துகளில் 79 ரன்களை குவித்தார். ரெய்னா 43 பந்துகளில் 54 குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஹைதராபாத் அணி பேட்டிங்கை மேற்கொள்ள உள்ளே வந்தது. தீபக் சஹார் பந்தினை இரு பக்கமும் ஸ்விங் செய்தார். அதன் காரணமாக 3 விக்கெட்டுகளை ஆரம்பத்திலே கைப்பற்றி ஹைதராபாத் அணியின் மூக்கினை உடைத்தார். மூக்கினை உடைத்தாலும் முதுகெலும்பு இருக்கும்வரை வாழ்வுண்டு. அவ்வாறு முதுகெலும்பாக கேன் வில்லியம்சன் மிகவும் சிறப்பாக ஆட்டத்தினை நகர்த்தினார். அவருடன் இனைந்து ஷகிப் மற்றும் யூசுஃப் பதான் நன்கு வலுகொடுக்க, ஹைதராபாத் அணி இலக்கினை நோக்கி நகரத்தொடங்கினர். சென்னை அணியினை போன்று இவர்களும் முதல் 10 ஓவர்களுக்கு பின் நன்றாக பந்துவீச்சாளர்களை தாக்கினர். ஆனால்,  வில்லியம்சன் விக்கெட்டினை கைப்பற்றியது சென்னை அணி. ஆனால் யூசுஃப் பதான் அங்கு சென்னை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பயம் காட்டுகின்றார். கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்கிர நிலை. பந்து வீச வருகிறார் ஷார்துல் தாகூர். அவரின் பந்துகளை பௌண்டரிகளை நோக்கி மிக எளிதாக அடித்தாலும் அவர் அவ்வோவரில் செய்த ஓர் நல்ல காரியம், யூசுஃப் பாதானின்  விக்கெட்டினை எடுத்தது தான். ( உன் வாழ்வில் உன்னை எவ்வளவு நாங்கள் திட்டினாலும், நீ செய்த இம்முக்கிய காரியத்தினை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்) என்று அணைத்து ரசிகர்களும் எண்ணிக்கொண்டிருக்க, அடுத்த பந்தில் ரஷித் சிக்ஸர் அடிக்க,  அதற்கு தாகூர்( என்னை அவ்வளவு விரைவில் நம்பி கொண்டாடிவிட்டிர்களே ?). அவ்வோவரில் 14 ரன்கள் கொடுத்து விட்டு கடைசி ஓவரில் 19 ரங்கள் தேவை என்று கணக்கு இருந்தது.

முதல் 3 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டும் எடுத்தார்கள். சென்னை அணியின் ரசிகர்கள், ( நல்ல வேலை இப்போட்டி படபடப்பிலிருந்து  வெளிப்பட்டு நிம்மதியாக வென்று விட்டார்கள்) என்று பெரும் மூச்சு விடும் நேரத்தில் அடுத்த ரெண்டு பந்துகளில் ரஷித் கான் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரியினை அடிக்க (அதற்குள்ளேயே போட்டி முடிந்துவிட்டது என்று நினைத்தால் எப்படி ? ) என்று மீண்டும் படபடப்பினை கொடுத்தார். ஆனால் கடைசி பந்தில் பிராவோ வெற்றியாக யார்காரினை வீசி, ஒரு றன் மட்டுமே வழங்கி போட்டியினை வென்று கொடுத்தார். ஆட்ட நாயகன் விருதினை வென்றார் அம்பத்தி ராயுடு .



அடுத்த போட்டி - மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே அன்றே நடந்த இரவு நேரப்போட்டி. இப்போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. டாஸ் வென்ற மும்பை அணி முதலிலே பேட்டிங்கை தேர்வு செய்தது. அவ்வாண்டில், இதற்கு முன் மும்பை விளையாடிய 4 போட்டிகளில் வெறும் 1 போட்டியினை மட்டும் வென்று, மீதி மூன்று போட்டிகள் இறுதி வரை சென்று அடிவாங்கினார்கள். சென்னை அணி எவ்வாறு இறுதியில் வெல்கிறார்களோ, இவ்வணி இறுதியில் மிகவும் பரிதாபமாக அடிவாங்குகிறது. அதே நேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்கு முன் 5 போட்டிகளை விளையாடி 2 போட்டிகளை வென்றுள்ளனர். ஆதலால், மும்பை வென்றே ஆகவேண்டும் என்கிற நிலை.

முதலில் அற்புதமாக தொடங்கின மும்பை அணி, பின் மிகப்பெரிய சரிவு. அவர்கள் தொடங்கிய விதத்தில், எப்படியும் 200 ரன்களை அடித்து, ராஜஸ்தான் அணியிற்கு தலைவலியினை கொடுப்பார்கள் என எண்ணியபோது, ராஜஸ்தான் அணியிற்காக முதல் போட்டியினை விளையாடுகின்ற ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒரே ஓவரில் முக்கிய அடியாட்களான (சிக்ஸர் அடிப்பவர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளன) க்ருனால், ஹர்திக் மற்றும் பந்துவீச்சாளரான மெக்லேனகன், மூவரையும் வீழ்த்தினார். ( தெரிந்த எதிரியினை விட தெரியாத எதிரிக்கு தான் பயம் அதிகமாக இருக்கும்). ஆனால் எப்படியோ 167/7 என்கிற, தாக்குப்புடிக்க முடிய ஓர் ஸ்கோரினை அடித்துள்ளார் மும்பை அணி. அதுவும் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் அடித்த இரு அரைசதங்களின் காரணமாக வந்தது.

ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்நுழைந்தது. அவர்கள் தொடக்கத்திலேயே அணியின் தலைவன் ரஹானே மற்றும் திரிபாதி இருவரையுமே இழந்தார்கள். ஆனால் சஞ்சு சாம்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ், இருவருமே மிக அழகாக போட்டியினை நகர்த்தி, மும்பை அணியின் கைகளிலிருந்து போட்டியினை கைப்பற்றினார்கள். மிகவும் எளிதாக ஜெயித்து விடுவார்கள் என நான் சொல்லி முடிப்பதற்குள், இருவருமே தங்களின் விக்கெட்டுகளை இழந்தனர். போதாது, பட்லர் மற்றும் க்ளாஸென் தங்களின் விக்கெட்டுகளை இழந்து 125/6 என்கிற நடுநிலையில் இருந்தது. மும்பை அணியின் கையில் தான் இப்போது போட்டி. உள்ளிருந்தது கிருஷ்ணப்பா கெளதம் மற்றும் அன்றய தினத்தில் சிறப்பாக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர்களையும் துரத்திவிட்டு நமது இரண்டாவது வெற்றியினை பெற்றுவிடலாம் என கனவு மும்பை அணியின் மனதுள் இருந்தது. மீண்டும் குறிப்பிடுகின்றேன் "கனவு". 

இருவரும் சேர்ந்து ரன் ரேட் குறையாமல்  தக்கவைத்து கொண்டே இருந்தனர். கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவை என்று இருந்ததது. உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளரான பும்ரா பந்து வீச வருகிறார். இப்போதும் மும்பை அணி தான் ஜெயிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளது என நினைத்தார்கள். ஆனால் அவ்வோவரில் 18 ரன்களை குவித்து அதிர்ச்சியினை வழங்கினர் கெளதம் மற்றும் ஆர்ச்சர். முதல் முறையாக பும்ராவின் பந்துவீச்சில் தேய்வு ஏற்பட்டது என கூறினாலும் அவர்கள் இவ்வாண்டின் ஐபிஎல் தொடரில் தோல்வியினை கண்ட மூன்று போட்டிகளிலும் அவர் பந்துகளை எதிரணியின் பேட்ஸ்மேன்கள் பொலந்தார்கள். ஆனால், கீழ் தளத்தில் உள்ள வீரரும் பொலப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கடைசி ஓவரில், ஹர்திக் பாண்டியா, முதல் பந்தில் ஆர்ச்சரின் விக்கெட்டினை வீழ்த்தி தலைவலியினை கொடுக்க, கௌதமோ அடுத்த மூன்று பந்துகளில் அழகாக ஓர் சிக்ஸர் மாற்று ஓர் பௌண்டரியினை அடித்து அதிர்ச்சியளித்தனர். ( உங்களுக்கு கடைசி வரை எமனாக இருப்பது, இக்கடைசி ஓவர் போட்டிகள் தான்). இப்போதும் கூறுகின்றேன், இருந்தது கனவு. கனவுகள் பலிக்கலாம் , பலிக்காமல் கனவாகவே மறந்தும் போகலாம். ஆட்ட நாயகன் விருதினை பெற்றது ஜோஃப்ரா ஆர்ச்சர் (தெரியாத எதிரி), தன்னுடைய 3 விக்கெட்டுகள் மட்டும் தேவையான 10 ரன்கள்                 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?