அதிரடி மற்றும் உணர்வுகள் கலந்த திரில்லர் போட்டி
இன்று கெய்ரோன் போலார்டின் பிறந்த நாள் என்கிற செய்தி அனைவரும் அறிந்திருப்பீர். ஆனால், இதே நாளில் தான் மும்பை அணி தங்களின் நான்காவது ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. ஆனால், இப்போட்டி கடைசி பந்து திரில்லராக முடிய, ரசிகர்களுக்கு உற்சாகமும் அதிர்ச்சியும் கலந்த சிறப்பான போட்டியாக அமைந்தது. மும்பை அணி மோதியது தங்களின் பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ். மும்பை அணி மிகவும் வலுவுடன் காண, மறுபுறத்தில் சென்னை அணி சில குழப்பங்களுடன் இருந்தது. சென்னை பந்துவீச்சு சிறப்பாக திகழ்ந்தாலும், தங்களின் பேட்டிங் அணியின் தலைவனான தோனியை சார்ந்ததாக இருந்தது. ஆனால், இது நாள் வரை இருந்தது போதும், இனி இப்போட்டியை வெல்ல வேண்டும் என்பது தான் இரண்டு அணிகளின் வேதவாக்கு.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பவர்பிளே ஓவர்களில் மிக சிறப்பாக பௌண்டரிகளுடன் தொடங்கினாலும், பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் இரண்டு ஒப்பனர்களையும் வீழ்த்தி இறுதி போட்டியின் அழுத்தத்தை மும்பை அணியின் தலையில் செலுத்தியது. அந்த இரண்டு விக்கெட்டுகள் காரணமாக 6 ஓவர்களில் முடிவில் 45/2 என்று ஸ்கோர் இருந்தது. இதில் இன்னோர் செய்தி, 6வது ஓவர் விக்கெட் மெய்டன் ஓவராக முடிந்தது. சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் உள்ளிறங்கினார்கள். அங்கிருந்து ஹர்பஜன் சிங் மற்றும் பிராவோ இடையில் உள்ள சில ஓவர்களில் ரன்களை வழங்காமல் பந்துவீச, தோனி அதற்கு ஏற்ப ஃபீல்டர்களை நிறுத்தினார். அதன் காரணமாக 10 ஓவர்களின் முடிவில் 70/2 என ஸ்கோர் இருக்க, சூர்யகுமார் யாதவ் ஹர்பஜன் சிங் வீசிய ஓவரை பௌண்டரிகள் அடிக்க தொடங்கினார். தோனி, உடனடியாக சென்னை அணியின் சிறப்பு சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரிடம் ஓவர் கொடுத்தார். அவருடைய கணக்கு தவறவில்லை. சூர்யகுமார் குமார் தர்ட் மேன் திசையில் பந்தினை அடிக்க முயன்று கூகுலியை கணிக்காமல் பேட்டின் பின் பகுதியில் பட்டு, ஸ்டம்ப்பை அடித்தது. பின்னர் அங்கிருந்து சரிவு தான். அதற்கு அடுத்த ஓவரில் க்ருனால் பாண்டியவும் தனது விக்கெட்டை இழந்தார். அனைவரும் இப்போட்டியிற்கு முன், தாகூரை கிழித்தார்கள். ஆனால், அன்று அவர் செய்யவேண்டிய வேலையினை சிறப்பாக செய்தார். முதலில் டீ கோக், அடுத்து க்ருனால். மறுபுறத்தில் பொறுமையாக விளையாடி வந்த இஷான் கிஷான், பொறுமையிழந்து தாஹிர் வீசிய பந்தில், சிக்ஸர் அடிக்க முயன்று பாயிண்ட் திசையில் இருந்த ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்தார். இடையில் ஹர்திக் பாண்டியா சில பௌண்டரிகளை அடித்து அச்சுறுத்த, தீபக் சாஹர் அவரின் விக்கெட்டையும் கைப்பற்ற, அந்நாளில் தனது 3வது விக்கெட்டை எடுத்தார். இறுதியில் பொல்லார்ட் சிறிது நின்று, தெளிவாக 41 ரன்களை அடித்த காரணத்தினால் 149/8 என்கிற குறைந்த ஆனால் எதிரணியை நிறுத்தக்கூடிய ஓர் ஸ்கோரை அடித்தார்கள். பிறந்த நாள் அன்று மட்டை ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், சென்னை அணி பந்துவீச்சு மற்றும் ரன்களை கட்டுப்படுத்தல், இரண்டிலும் வேகம் கூடி செயல்பட்டார்கள்.
புதுப்பேட்டை படத்தின் பாணியில் "இன்னிக்கி ஒரு ராத்திரி தாண்டிட்ட, நீ வீரன் டா " என்று சாயலுடன் தொடங்கியது சென்னை அணியின் பேட்டிங். சென்னை அணி மும்பை அணியினை விட மிகவும் சிறப்பாக தொடங்கியது. வாட்சன் ஒரு புறம் நிதாரணமாக விளையாடி, அடிக்க வேண்டிய பந்துகளை மட்டுமே அடிக்க, மறுபுறத்தில் டூ ப்ளஸிஸ் பௌண்டரிகளை குவித்தார். ஆனால், பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் அவரின் விக்கெட்டை கைப்பற்றியது மும்பை அணி. 53/1 என்று பவர்பிளே முடிவில் இருந்தது. மத்தவற்றை விட்டுவிட்டு இன்று அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். வாட்சன் கொடுத்த மூன்று கேட்சுகளை மும்பை விட்டது. பீலடிங்கை பொறுத்த வரை சென்னை அணி அன்று மும்பை அணியினை விட பெரிதாக மதிப்பீடு பெற்றது. ரெய்னா, அவ்வண்டின் ஐபிஎல் தொடரில் இருந்த சுமாரான ஆட்டம், அன்றும் இருந்தது. 8 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர், உள்ளே வந்த ராயுடுவும் அடுத்த ஓவரிலேயே வீழ்த்தப்பட்டு ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. வாட்சன் மற்றும் டோனி களத்தில் இருந்தார்கள். தோனி அவ்வாண்டில் சென்னை அணியின் சிறப்பு பேட்ஸ்மேனாக செயல்பட்டார். அன்று, மிகவும் பொறுமையாக தொடங்க, இவர் இருக்கின்றார் கவலை இல்லை என்று சென்னை அணியின் ரசிகர்கள் நினைத்த நேரத்தில், இவர் நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் ரன் ஓட முயன்று இஷான் கிஷான் ரன் அவுட் அடிக்க, ஸ்டும்ப்பில் பந்து பட்டது. அதற்கு தீர்வு கொடுக்க, அதிக நேரம் நடுவர் எடுத்துக்கொண்டார். காரணம், பந்து ஸ்டம்ப்பை அடிக்கின்ற நேரமும், அவர் தனது மட்டையை கோட்டினுள் வைத்த நேரமும் ஒன்றாக இருந்தது. ஆனால், இறுதியில் மும்பை அணியின் சார்பாக நடுவர் தீர்வளிக்க, தோனி 2 ரன்களுக்கு பெவிலியனை நோக்கி நடந்தார். அத்தீர்வு பல சர்ச்சையினை ஏற்படுத்தியது. அங்கிருந்து சென்னை தோற்றுவிடும் என்று அனைவரும் நினைக்க, வாட்சன் வாசன் விளம்பரத்தில் வரும் வாசகத்தைப்போல் "நாங்க இருக்கோம்" என்று தனி ஒருவராக ரன்களை அடித்து அருகாமையில் அழைத்துச்சென்றார். அரைசதம் அடித்தார். முக்கியமான அரைசதம். கடைசி ஓவர் வரை அழைத்து சென்றார்.
கடைசி ஓவர் வீச வருவது மலிங்கா. தேவை 9 ரன்கள் 6 பந்துகளில். உள்ளிருந்து வாட்சன் மற்றும் ஜடேஜா. கையில் இல்லை இருந்தது 5 விக்கெட்டுகள். முதல் பந்து, யார்க்கர், கிடைத்தது ஒரு ரன் மட்டுமே. ஜடேஜாவிற்கு ஸ்ட்ரைக் கிடைத்தது. இரண்டாவது பந்து, லோ ஃபுல் டாஸ், மறுபடியும் கிடைத்தது ஒரு ரன் தான். வாட்ஸனிடம் ஸ்ட்ரைக் கிடைத்தது. இம்முறை இரண்டு ரன்களை எடுத்தார். தேவை 5 ரன்கள் மூன்று பந்துகளில். ஸ்டம்ப்பை விட்டு வெளியே யார்க்கர் பந்து வீச, அதை ஒரு ரன் எடுத்து மீண்டும் இரண்டாவது ரன்னை எடுக்க முயன்று வாட்சன் ரன் அவுட் ஆனார். 80 ரன்களை போராடி குவித்து அவுட் 4 ரன்கள் 2 பந்துகளில். தாகூர் உள்ளே வந்தார். அவரிடம் தான் ஸ்ட்ரைக் இருந்தது. இரண்டு ரன்களை எடுக்க, கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை சென்னை அணியிற்கு வெற்றி பெறுவதற்கு. அனைவர் முகத்திலும் படபடப்பு மற்றும் பரபரப்பு நிலவியது. மலிங்க பந்து வீச, மெதுவான யார்க்கர் பந்து. தாகூர் அதை விட்டார். ரன் ஓடிஏ துவங்கினார். மலிங்கா எல் பி டபிள் யு கோரிக்கையை நடுவரிடம் கேக்க, அவர் பதட்டமின்றி அவுட் கொடுத்தார், சென்னை அணி அத்தேர்ப்பை ரிவியூ செய்ய, தெளிவாக ஸ்டம்ப்பை பந்து அடித்தது. மும்பை அணி ஒரு ரன்னில் வென்றது. தங்களின் நான்காவது கோப்பையை வென்று, ஐபிஎலின் தலைசிறந்த அணியாக உருமாறியது. ஆட்ட நாயகன் : பும்ரா(2/14). பொல்லார்ட் தனது பிறந்த நாள் அன்று, தன்னுடைய அணி கோப்பையை அடித்தது மீண்டும் சிறப்பான செய்தி.
இரண்டு நாட்களுக்கு பின், ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டா பதிவில் வாட்ஸனின் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் தான் தெரிந்தது. தனது கால் முட்டியில் அடிபட்டதால், ரத்தம் வழிந்தது. அந்த ரத்த வழிதலை சிறிதும் மதிக்காமல், போராடி ஆட்டத்தை கடைசி வரை கொண்டுச்சென்றார். இறுதியில் அந்த ரன் அவுட் நேராமல் இருந்திருந்தால், சென்னை கோப்பையினை வென்றிருக்கும்.
"செத்தாலும் நம்ம சண்டை செஞ்சுட்டு தான் சார் சாவணும், பயந்து கால்ல விழுந்து லாம் சாவக்கூடாது".

Comments
Post a Comment