ஐபிஎல் திரில்லர் போட்டி - வரலாற்றில் இன்று

சரியாக 6 வருடங்களுக்கு முன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பெங்களூரில் மோதியது. இரு அணிகளுக்கும் வெற்றி தேவை. ஒரு புறம் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஹைதராபாத் அணி. மறு புறம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, இரண்டிலும் தெளிவின்றி காணப்படும் பெங்களூரு அணி. தேவை இருக்கும் இடத்தில் எதிர்ப்பும் அதிகமாய் இருக்கும். நாம் போட்டியினைப்பற்றி காண்போம்.

டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரின் பிட்ச் அதிக ரன்களை குவிக்கும் பாணியில் அமைத்திருந்தாலும், பெங்களூரு அணியின் பேட்டிங் மிகவும் ஆழமின்றி இருந்தது. எந்த அளவிற்கு ஆழம் குன்றியது என்றால், மிட்சேல் ஸ்டார்க் 7ம் இடத்தில் உள்ளே இறங்குவார். ஆனால், அவ்வணியிற்கு தன்னம்பிக்கை அதிகமாகவே இருந்தது.

ஹைதராபாத் அணியில் தொடக்கத்திலேயே, ஸ்டார்ச் வீசிய திடீர் விரைவான பௌன்சரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ஆரோன் ஃபின்ச். உள்ளே இறங்கிய லோகேஷ் ராகுல் ஸ்லிப்பிடடம் கேட்ச் கொடுத்து விட்டு, வந்த வேகத்திலேயே பெவிலியனை நோக்கி நடையை கட்டினார். ஆனால் டேவிட் வார்னர் மற்றும் ஷிகர் தவான் சிறிது சிறிதாக, கவனத்துடன் ஸ்கோரினை உயர்த்தினார்கள். திரும்பி அவர்கள் இயல்பான பேட்டிங்கிற்கு திரும்பினோம் என நினைக்கும் நேரத்தில் ஷிகர் தவான் தனது விக்கெட்டினை இழந்தார். அவ்வளவுதான், அங்கிருந்து விக்கெட்டுகள் சிறிது விரைவாக சரிந்தது. ஆனால், டேவிட் வார்னர் ஒருவராக, அரை சதத்தினை சேர்த்தார். பின்னர், டேவிட் வார்னர் இறுதியிலுள்ள குறிப்பிட்ட ஓர் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். ஆனால், கடைசி ஓவரிலும் பௌண்டரிகளை குவிப்பார் என நினைத்திருக்கும் நேரத்தில், ஸ்டார்ச் வீசிய யார்க்கர் பந்தில், விக்கெட்டை இழந்தார். ஆனால், செய்ய வேண்டிய வேலையினை சரியாக செய்து முடித்தார். இறுதியில் 155/6 என்கிற ஸ்கோருடன் முடித்தது ஹைதராபாத் அணி. டேவிட் வார்னர் 61(49) பந்துகளில் அடித்தார். இது நடுநிலை ஸ்கோராகவே இருந்தாலும், பெங்களூரு அணியினை பொறுத்த வரை இது ஓர் இமாலய இலக்கு. மாற்றுக்கருத்து என் முன்னாள் வைக்கலாம், அது தான் கெயில், கோலி, யுவராஜ், டீ வில்லியர்ஸ் இவர்களெல்லாம் உள்ளார்களே அப்போது ஏன் இவ்வணியின் பேட்டிங் ஆழமின்றி உள்ளது என் ஏன் சொன்னீர்கள் ? என கேட்கலாம். அதற்கு நான் கூறுவது, கெயில் மற்றும் கோலி இருவருமே தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை இவ்வாண்டில் வெளியிடவே இல்லை. யுவராஜ் சிங்கின் நிலையும் அது தான். மீதமுள்ளவர்களின் ஆட்டம் சீரற்று இருந்தது. 

156 என்கிற இலக்கை அடைய உள்ளிறங்கினர் பார்த்திவ் படேல் மற்றும் கிறிஸ் கெயில். இரண்டாவது ஓவரிலேயே பார்த்திவ் மற்றும் கோலியின் விக்கெட்டை கைப்பற்றினார் புவனேஷ்வர் குமார். கிறிஸ் கெயில் சிறிது பௌண்டரிகளை அடிக்க, தலைவன் பழைய ஆட்டத்திற்கு வந்து விட்டான், இனி பெங்களூர் அணியிற்கு சிறப்பு தான், என நினைக்க, அவருடைய விக்கெட்டை கைப்பற்றி, பெங்களூரு அணியிற்கு வேகதடையினை வைத்து ஹைதராபாத் அணி. பின், சிறிது நேரத்திற்குள் ரில்லீ ரோசௌவ்  தூக்கினார்கள். அப்பொழுது அணியின் நிலை 10.1 ஓவர் 5முடிவில் 9/4 என இருந்தது. உள்ளிருந்து டீ வில்லியர்ஸ் மற்றும் யுவராஜ் சிங். தேவை 97 ரன்கள். அனைவரும் ஹைதராபாத் அணியிற்கு மீண்டும் ஓர் வெற்றி என்று. ஆனால் அனைவரும் கவனிக்க தவறிய ஓர் மனிதன், டீ வில்லியர்ஸ். அவருடைய திட்டம் தெளிவாக இருந்தது. ஓவருக்கு ஒரு பௌண்டரி அல்லது ஒரு சிக்ஸராவது அடிக்க வேண்டும், என்கிற ஓர் சிறிய கணக்கு. அதன்படி அவர் ரன்களை சேர்த்தார். ஆனால், மறுபுறத்தில் 13.4 ஓவரில், யுவராஜ் தனது விக்கெட்டை இழந்தார். உள்ளிறங்கியது மிட்சேல் ஸ்டார்க். டீ வில்லியர்ஸ் அவரிடம் முடிந்த வரை ஸ்ட்ரைக் கொடுக்காமல், ரன்களை சிறிது சிறிதாக சேர்த்தார். அனுபவமிக்க ஆட்டமாக இருந்தது. கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவை, என்கிற நிலையில் டேல் ஸ்டெயின் பந்து வீச வருகிறார். ஒரே நாட்டை சேர்ந்த இரு வீரர்கள். ஒருவர் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர், மற்றோர் உலகின் தலைசிறந்த ஃபினிஷர்களுள் ஒருவர். இவ்விருவர்கள் நேர் கொண்டால் !!!.....


டீ வில்லியர்ஸ் முதல் இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்களை குவித்தார். 16 ரன்கள் 10 ;பந்துகளில் என கணக்கு குறைந்தது. பின் இரண்டு ரன்களை அடுத்த 2 பந்துகளில் எடுத்தார்கள்.  அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு பௌண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார் டீ வில்லியர்ஸ். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் 24 ரன்களை வழங்கினார். அதிலும் கடைசி பந்தில், யார்க்கர் வீச, அதை பின்புறம் சிக்ஸர் அடித்தார். அதற்கு பின், கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவை, விரைவாக முடிப்பார்கள் என எண்ணிய நேரம், ஸ்டார்க்  ஆனார். ஆனால், தலைவலியின்றி பௌண்டரியுடன் போட்டியினை முடித்து வெற்றியை வழங்கினார் டீ வில்லியர்ஸ். ஆட்ட நாயகன் சந்தேகமின்றி டே வில்லியர்ஸ் 89*(41).                      

டீ வில்லியர்ஸ் ஹைதராபாத் அணியிடம் "வேங்கைமவன் ஒத்தையில நிக்க, தில்லிருந்தா மொத்தமா வாங்க லே" என மறைமுகமாக செய்தியை கூறி, வதம் செய்த நாள் இன்று !!!!       

Comments

Popular posts from this blog

இந்தியாவின் வெற்றி பயணம் - இந்தியா பாகிஸ்தான் போட்டி

வருகிறது இந்தியா - இங்கிலாந்து தொடர் !

கோலியின் 12 வைர ஆண்டுகள்