ஹைதராபாதின் சின்ன ஸ்கோர் சம்பவம்
பொதுவாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி என்றாலே விக்ரம் வேதா படத்தில், மாதவன் கூறும் பாணியில் கூறினால் "உங்கள மாறி அணிகளுக்கலாம் ஒரே கதை தான். நான் சின்ன ஸ்கோர் அடிச்சேன், நல்ல பௌலிங் அட்டாக் இருந்தது காரணமா நான் அத டிஃபென்ட் பண்ணேன், அந்த கதை தான?", என வரையறை கொடுத்து விடலாம். ஆனால், இதை சிறப்பாக செய்து காட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல. மும்பை வானகடே மைதானத்தில், பொதுவாக பந்துவீச்சிற்கு அவ்வளவு துணை புரியாது. பேட்டிங் எளிதாக செய்வதற்கு ஏற்ப இருக்கும். அவ்வாறு இருக்கின்ற பிட்சில், முதலில் பேட்டிங் செய்து 119 ரன்களுக்கு ஜோலி முடிந்தது. சரி, மும்பை அணி எளிதாக அவ்விலக்கினை அடைந்து விடுவார்கள் என்று எண்ணியபோது, ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் பௌண்டரி காப்பாளர்கள், அருமையாக செயல்பட்டு, மும்பை அணியினை வெறும் 87 ரன்களுக்கு சுருட்டியது. இதுவே அவ்வணியின், பலம்வாய்ந்த பந்துவீச்சினை குறிக்கும்.
ஏப்ரல் 26, 2018 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப், ஹைதராபாதில் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி, மிகவும் மோசமாக தங்களின் பேட்டிங்கை தொடங்கியது. பவர்பிளே ஓவர்களினுள் 3 விக்கெட்டுகளை இழந்தது வெறும் 37 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்கள். அதுவும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களான அன்கிட் ராஜ்புட், அம்மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, எதிரணியினை பின் சீட்டில் நிறுத்தினார். ஆனால், அதற்கு பின் பிட்சின் செயலினை புரிந்துக்கொண்டு, மனிஷ் பாண்டே மற்றும் ஷாகிப், இருவருமே குருவி கூடினை சேர்ப்பது போல், ரன்களை சேர்த்தார்கள். குறிப்பாக மனிஷ் பாண்டே, அவ்வளவு தெளிவுடன் இன்னிங்க்ஸை நகர்த்தினார். ஆனால், கடைசி 4 ஓவர்களில், மீண்டும் அன்கிட் ராஜ்புட் ருத்ர தாண்டவம் ஆடினார். வெறும் 14 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், பந்துவீச்சாளர்களுக்கு எதிராணியினை ரன் அடிக்காமல் தடுத்துநிறுத்துவதற்கு, தேவையான ஸ்கோரினை அடித்தார் மனிஷ் பாண்டே. 54 ரன்கள் அடித்தார். அதனால், 132/6 என்கிற சிறிய ஸ்கோரினை அடித்தார்கள். பஞ்சாப் அணி " ஏதேனும் ஒரு முறை அதிர்ஷ்டம் காரணமாக, சின்ன இலக்கினை தடுத்து நிறுத்தினார்கள், அனைத்து முறையும் அது நடக்காது" என கண்டுக்கொள்ளாமல் விட்டார்கள்.
ஹைதராபாத் அணியினை போன்று இல்லாமல், மிகவும் சிறப்பான தொடக்கத்தினை வழங்கினர் கெயில் மற்றும் லோகேஷ் ராகுல். " இவர்கள் மிக எளிதாக வென்று விடுவார்களோ ?" என்று ரசிகர்கள் மனதினுள் டிக்-டாக், டிக் - டாக் வெடிகுண்டு. ஆனால், அந்த வெடிகுண்டினை அணைக்க, கேன் வில்லியம்சன், ரஷீத் கான், என்கிற வெடிகுண்டு சிறப்பதிகாரியை உள்ளிறக்குகின்றார். ராகுல் தனது விக்கெட்டினை, அவருடைய சுழற்பந்தில் இழக்கின்றார். ஓப்பனிங் கட்டிடம் உடைந்தது. பின், பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில், மாற்றி மாற்றி பந்தினை கொடுத்து, விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். தேவையற்ற ரன்களை வழங்காமல், ஃபீல்டிங்கிலும் தீயாக இருந்தார்கள். இறுதியில் சிறிதளவு முஜீப் ஊர் ரஹ்மான், இரண்டு பௌண்டரிகளை அடித்து, போட்டி இன்றும் முடியவில்லை என சத்தமின்றி அறிவுறுத்த. மற்ற புறத்தில் உள்ள பந்துவீச்சாளரின், விக்கெட்டினை பறித்து, "போடா அங்குட்டு" என்று தலையில் கொட்டி அனுப்பினர், சன்ரைசர்ஸ் அணி. ஹைதராபாத் அணியின் வெற்றியினை சர்கார் படத்தின் பாணியில் "நான் சின்ன ஸ்கோர டிஃபெண்ட பண்றதுல தான் ஸ்பெஷலிஸ்டு "
ஆட்ட நாயகன் விருதை பெற்றார் - அன்கிட் ராஜ்புட் (தனது சிறப்பான 5 விக்கெட்டுகளுக்காக ) , ஆனால் ஆட்ட நாயகன் விருதை விட, ஆட்டத்தின் நாயகனாக செயல்படும் அணியின் வெற்றி தான் முக்கியம், ஐபிஎல் தொடரில் மிகவும் அவசியம் .

Comments
Post a Comment