ஐபிஎல் திரில்லர் போட்டிகளுள் ஒன்று
5 வருடங்களுக்கு முன்பு, ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பையில் மோதியது. மும்பை இந்தியன்ஸ் அணியினை பொறுத்த வரை இதற்கு முன் விளையாடிய 7 போட்டிகளில் இரண்டினை மட்டுமே வென்றுள்ளனர், ஆதலால் போட்டியை வெல்ல வேண்டும் என்கிற நிலை. மறுபுறத்தில் 9 போட்டிகளை விளையாடியுள்ளார்கள் ராஜஸ்தான் அணி. அதில் முதல் 5 போட்டிகளையும் வென்றுள்ளனர், ஆனால் அடுத்த நான்கு போட்டிகளில் 2 போட்டிகள் மழையின் காரணமாக தடைபட்டு, மீதமுள்ள இரு போட்டிகளில் தோல்வி அடைந்தார்கள். ஆதலால், மனதளவில் தங்கள் அணியினை ஊக்குவிக்க, இப்போட்டியினை வென்றே ஆகவேண்டிய நிலை. இரு அணிகளுக்கும் தேவை உள்ளது. ஆனால்,"தேவை இருந்தால் மட்டும் போதாது, அதை அடையும் யுக்தியும் மனதில் இருத்தல் வேண்டும்". நாம் இப்போது அப்போட்டியில் என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம்.
மும்பை பேட்டிங் பிட்சில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணி பெரிய ஸ்கோர் ஒன்றை அடித்தால் தான், போட்டியினை வெல்ல முடியும், காரணம் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பட்டியலின் ஆழம் அதிகம், அது மட்டுமில்லாமல் மும்பையின் பிட்ச் பந்துவீச்சாளர்களை துணை புரியாது. அதற்கு ஏற்ப மும்பை அணி நல்ல தொடக்கத்தை வழங்கினார்கள். ஆனால் நல்ல தொடக்கத்தை கொடுத்தும், அதை மிகப்பெரிய ஸ்கோராக மாற்றாமல் தங்களின் விக்கெட்டுகளை சிம்மன்ஸ், பார்திவ் படேல் மற்றும் உன்முக்த் இழந்தார்கள். மும்பை அணியின் மிகமுக்கியமான இன்னல், அவ்வர்களின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், ஆழமானது அல்ல. அதனால், ரோஹித் மற்றும் ராயுடு அணியின் நிலையில் சரியாக மாற்றி, பெரிய ஸ்கோரினை அடித்தாகவேண்டும். அடித்தார்கள், ராயுடுவும் ரோஹித்தும் சேர்ந்து அடித்தார்கள். ரோஹித் தனது விக்கெட்டினை இழந்த பிறகு ராயுடுவும் பொல்லார்டும் சேர்ந்து, விக்கெட் இழந்தாலும் பெட்டிங்கின் வேகத்தினை குறையாது அடித்தார்கள். இறுதி ஓவரில் பொல்லார்ட் தனது விக்கெட்டினை இழந்தார், ஆனாலும் ராயுடுவின் அதிரடி ஆட்டத்தினால் 187/5 என்கிற, கட்டுப்படுத்தக்கூடிய ஓர் ஸ்கோரினை மும்பை அணி அடித்தார்கள். ராயுடு இறுதியில் 27 பந்துகளில் 53 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
" ஒரு அணியிற்கு மனதின் தேய்வை முறியடிக்க வேண்டும், மற்றோரு அணியிற்கு தங்களின் ஆட்டத்தினை பரிசோதனையிடும் ஓர் விஷப்பரீட்சை. இவ்விரு அணிகளும் மோதிக் கொண்டால்...............!"
ராஜஸ்தான் அணியின் இரு ஒப்பனர்களும், இலக்கினை அடைய உள்ளிறங்கினர். தொடக்கத்தில் ரஹானேவின் விக்கெட்டை இழந்தாலும், வாட்சன் மற்றும் சஞ்சு சாம்சன் அதனை சரிசெய்யுமாறு விளையாடி, பவர்பிளே ஓவர்களின் முடிவில் 55/1 என்கிற நிலையான அடித்தளத்தை அமைத்தார்கள். பின்னர், வாட்சன் தனது விக்கெட்டை இழந்தார். ஆனால், சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இனைந்து ரன்களை சேர்த்தார்கள். அன்று , சஞ்சு சாம்சனின் தினம் தான். 20 ஓவர் கிரிக்கெட்டில், வருகின்ற அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று வீரர்கள் விளையாடும் இக்காலத்தில், கிரிக்கெட்டில் காண்பதற்கு அழகாக உள்ள சில ஷாட்களை அடித்தார். குறிப்பாக இரண்டிலிருந்து மூன்று முறை, கிட்டத்தட்ட கீப்பரின் கையிலிருந்து பந்தினை பௌண்டரியை நோக்கி லேட் கட் ஷாட் அடித்தார். அதுவும் நான்கு ரங்களுக்கு சென்றது. 20 வயது சிறுவனுக்கு அவ்வளவு பக்குவம். இப்படியும் 20 ஓவர் கிரிக்கெட்டை விளையாடலாம் என பார்க்கின்றவர்களுக்கு உணர்த்தினார்.
அரை சதத்தினை அடித்தார். அதோடு நிற்கவில்லை, வரும் பந்துகளை பௌண்டரிகளுக்கு அடித்து மும்பை அணியிற்கு தலைவலியினை தொடர்ச்சியாக வழங்கினார். ஆனால், 76 ரங்களுக்கு அவர் தவர் செய்து தனது விக்கெட்டை இழக்க, போட்டியின் மிக முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. அவர் சென்றவுடன் தேவையாக இருந்தது 14 பந்துகளில் 26 ரன்கள். நான் ஏற்கனவே கூறினேன், ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பட்டியல் மிக ஆழமானது, என. அது மும்பை அணியின் மனதில் கண்டிப்பாக ஓர் உறுத்தலாக இருந்திருக்கும். ஆனால், நான் கூற தவறிய ஓர் செய்தி, ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஆழமாக இருந்தாலும், அனுபவமின்றி இருந்தது. ஓர் அனுபவமுள்ள, பௌண்டரிகளை எளிதாக அடிக்க முடியும் வீரர் ஒருவர் இருந்திருந்தால், கவலையின்றி இருந்திருக்கலாம். சரி, அங்கிருந்து விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்தார்கள். ஓசையாக கேட்கும் ஒரு பாட்டில், திடீரென ஓர் ஓசையின்றி மாறுபட்டு கேட்டால், மனதினுள் அவ்வளவு தேய்வு ஏற்படும். அதே தான், அங்கு நடந்தது. மலிங்கா மற்றும் மெக்லேனகன் தெளிவாக பந்தினை வீசி எதிரணியினை படபடப்பில் வைத்தார்கள். அதன் காரணமாக, கிடைத்த சிறிய வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி, 179/7 என ராஜஸ்தான் அணியினை தடுத்து நிறுத்தி, போட்டியினை 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கொடுத்தார்கள். ஆட்ட நாயகன் விருதினை பெற்றது - அம்பத்தி ராயுடு.
ஆனால், என்னை பொறுத்த வரை, சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டினை இழந்த அந்நேரத்திலேயே போட்டியினையும் இழந்தார்கள் ராஜஸ்தான் அணி.

Vara level thala
ReplyDeletenanri thala
Delete