அடுத்த ஐபிஎல் அணி
இவ்வணி ஓர் தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டு. அவர்களின் ஆட்டத்தினை புரிந்து கொள்வதற்கு ஓர் தனி அறிவு வேண்டும். நான்கு கோப்பைகளை வென்ற ஒரே அணி. ஐபிஎல் தனக்கென ஓர் தனி முத்திரையினை பதித்துள்ளார்கள். ஏதோ ஒரு கிராம்மத்திலிருந்து இவ்வணியினை அடையும் வீரர், ஒரே தொடரில் மிகவும் தரம் வாய்ந்த வீரராக மாறி, தங்கள் வாழ்க்கை மிகவும் நல்ல நிலையில் மாறுபடும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, பும்ரா, இப்போது மயங்க் மார்கண்டே, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் என்று கூறிக்கொண்டே செல்லலாம். அவர்கள் தட்டிக்கொடுப்பது அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக, மும்பையினை சேர்ந்த வீரர்களை கவனம் அதிகம் கொண்டு ஏலத்தில் வாங்குகின்றனர்.
இவ்வணியின் சிறப்பு, நாக்கவுட் போட்டிகளில் எளிமையாக விளையாடி எவ்வித கடினமின்றி வெல்வார். அதுவும் எப்பொழுதும் அவர்கள் அணியின் விளையாடும் 11 வீரர்களையும், அவரவர் இடங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள மிகவும் எளிமையாக முடியும். அதிலும், அவ்வணியில் உள்ள 11 வீரர்கள் அனைவருமே, ஒருவரை ஒருவர் சாராது, ஒவ்வொருவரும் ஏதேனும் போட்டியில் ஜொலிப்பர். அதுவும் நான்கு கோப்பைகளை வெல்லுதல் என்பது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. ஆனால் அதை மிகவும் எளிதாக செய்துள்ளனர். ரோஹித் ஷர்மா தலைமையில் மிகவும் சிறப்பான அணியாக உருமாறியது.
ஆனால் இந்நான்கு கோப்பைகளை விட, 2014ம் ஆண்டில் இவர்கள் வெளிப்படுத்திய ஆட்டம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்திருந்தது. அவ்வாண்டில், ஒரு பாகம் UAE யில் நடந்தது, மற்றோர் பாகம் இந்தியாவில் நடந்தது. இதில் முதல் ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியும் இல்லாமல் இருந்தது. இந்நிலையிலிருந்து அடுத்த சுற்றினை அடைவது மிகவும் கடினம். ஆனால், இந்தியாவினை அடைந்த பின், அடுத்த 9 போட்டிகளில் 7 போட்டிகளை வென்றனர் !!! அதிலும் குறிப்பாக கடைசி போட்டியில் 14.3 ஓவர்களில் 190 ரன்களை அடித்தால் தான் அடுத்த சுற்றினை இயலும். அனைவரும் மும்பை அணி தோற்றுவிடும் என்று முடிவில் ஏற்கனவே இருந்தார்கள். ஆனால் அவ்விலக்கினை கூறிய ஓவர்களுள் அடித்து அசத்தினார். அதற்கு பின் எலிமினேட்டர் போட்டியில் தோற்றார்கள். ஆனால், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் எதுவும் சாத்தியம் என்று காட்டினர். இன்னோர் குறிப்பு - அவ்வாண்டில் பஞ்சாப் அணி லீக் போட்டிகளில் மூன்று முறை மட்டுமே தோல்வியினை தழுவியது. அம்மூன்று தோல்விகளில் இரண்டு தோல்வியினை பரிசளித்தது மும்பை அணி. இதுவே, இவ்வணியின் ஆட்டத்தினை காட்டியுள்ளது. நான் மிகவும் மும்பை அணியினை ரசித்த ஓர் ஆண்டு 2014. இதற்கு பின் மீதி நான்கு கோப்பைகளும் தான்.
Comments
Post a Comment