போராடியும் தோல்வி - துவண்டது இந்தியா

சென்ற ஆண்டு, இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றில் எதிர்கொண்டது. மழையின் காரணத்தினால், இரு நாட்களுக்கு இப்போட்டி நடைபெற்றது (ஜூலை 9 மற்றும் 10). இவ்விரு நாட்களில் ரசிகர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள், ஏராளம்.

இந்தியா'விற்கும் நியூஸிலாந்'திற்கும் இடையே மாஞ்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்புற்று காணப்பட்டது. கேன் வில்லியம்சன், ரோஸ் டைலரின் அரை சதங்கள், நியூஸிலாந்து அணியை காப்பாற்றி, கரை சேர்த்தது. புவனேஷ்வர் மற்றும் பும்ரா, இருவருமே நன்றாக பந்துவீசினர். விக்கெட்டில், வேகப்பந்து வீச்சிற்கு நன்கு எடுத்துக்கொடுத்தது. அதுமட்டுமில்லாமல், மழையின் காரணத்தினால், பேட்டிங் மிக மிக கடினமாய் இருக்கும். அதில், பேட்டிங்கை மேற்கொண்டு, 239/8 என்கிற ஸ்கோரில் முடித்தது.

இந்திய அணியின் ரசிகர்களின் மனதில், இப்போட்டியை நாம் நிச்சயம் வென்றுவிடலாம், இலக்கு மிகவும் குறைவே என நம்பிக்கை கொள்ள, நியூஸிலாந்து அணி அவையனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அணியின் சிறப்பு ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டுகளை இழந்தார்கள். மூவரின் ஆட்டங்களால், பேட்டிங்கில் எவ்வித சொதப்பல்களும் இன்றி, இந்திய அணி அரையிறுதி சுற்றை அடைந்தது. ஆனால், அன்று சிறப்பான வீரர்கள் , சிறப்பின்றி செயல்பட்டதால், அரையிறுதி போட்டியின் அழுத்தம் அதிகரித்தது. 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. அங்கிருந்து மீண்டெழுந்தார்களா ? என நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு இப்போதும் என்னிடம் உள்ள பதில், " இல்லை ".தினேஷ் கார்த்திக், 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, ஸ்கோர் 24/4 என இருந்தது. அதாகப்பட்டது, இப்போட்டியின் முன் வரை, மேல் தளத்தில் உள்ள வீரர்கள் நன்றாக விளையாடி, பரிசளித்த வெற்றி. ஆனால், இப்போட்டியில், இடைத்தளத்தில் உள்ளோர் செயல்பட வேண்டிய நிலை. உள்ளே இருந்தது ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா. இருவரின் குணங்களும், அதிரடி ஆட்டம் மட்டுமே. இவர்கள் எவ்வாறு, ரன்களை சேர்ப்பார்கள் என்கிற குழப்பமும், தோனியை ஏன் இவர்களுக்கு முன் களமிறக்கப்படவில்லை என்கிற கேள்வியும் மனதில் இருந்தது. இவர்கள் இருவரும், நேரம் கடைபிடித்து சற்று சிறிது சிறிதாக ரன்களை சேர்த்தனர். ஆனால், அதனை பெரிதாக மாற்ற இயலாமல், பொறுமையின்றி தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கூறியவாறு, இருவருமே 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 30 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், அத்தருணத்தில் உள்ள ஸ்கோர் 92/6. களமிறங்கியது ஜடேஜா. களத்தில் இருந்தது, தோனி. இருவரிடம் உள்ள புரிதலை பற்றி நாம் நன்கு அறிந்திருப்போம். அதுமட்டுமில்லாமல், இருவரும் இங்கிலாந்து மைதானங்களில் விளையாடும் ஆட்டங்களை பாட்டியும் நாம் அறிந்திருப்போம். என்ன செய்ய உள்ளார்கள் என காத்துக்கொண்டிருந்த நேரத்தில், ஜடேஜா சிக்ஸர் அடித்தார். அதிரடி ஆட்டமும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டார். மறுபுறத்தில், தோனி, சற்று நிதானத்துடன், ஜடேஜா'விடம் ஸ்ட்ரைக் கொடுத்தார். அங்கு தோனி நினைத்திருந்தால், அவரும் சிக்சர் அடிக்க முயன்றிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்தால், விக்கெட்டுகள் விழும் என்கிற காரணத்திலும், ஜடேஜா'வின் ஆட்டத்தில் இருந்த தெளிவும் கண்ணியமும், தோனியை பொறுத்து கொள்ள வைத்தது. ஜடேஜா, மிகவும் சிறப்பாக விளையாடினார். சற்று இறங்கி அடித்தார். மிகவும் விரைவாக அரை சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணியின் ரன்களும் விரைவாக வர தொடங்கியது. அடையவுள்ள இலக்கு, இப்போது சற்று அருகில் இருக்கும் தருணத்தில், ஜடேஜா தனது விக்கெட்டை இழந்தார். மிகவும் அற்புதமாக அணியை மீட்டெடுத்து, 59 பந்துகளில் 77 ரன்களை குவித்து, வெளியேறினார். 2017ம் ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதி போட்டியில் தான் செய்த தவற்றை, இங்கு சரி செய்தார். " துண்டு ஒரு தடவ தான் தவறும்" என ஜடேஜா அனைத்து ரசிகர்களிடமும் கூறுகின்றார். 

இப்போது, போட்டியை முடித்து வெற்றிபெற வேண்டிய பொறுப்பு தோனியை நாடியது. பல ஆண்டுகாலங்களாக, அவர் வல்லவராக செய்த செயலை இன்று மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டிய நிலை. ஜடேஜா சென்ற பின், தோனி அவர்கள், தனது வேகத்தை அதிகரித்தார். 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவை. ஸ்ட்ரைக்கில் இருந்தது தோனி மற்றும் மறுபுறத்தில் களமிறங்கியிருந்தது புவனேஷவர் குமார். அரைகுழி பந்தாக முதற்பந்து வீசப்பட்டது. அதனை, பேக்வார்ட் பாயிண்ட் திசையில் சிக்ஸர் அடித்தார் தோனி. 25 ரன்கள் 11 பந்துகளில் எடுக்க வேண்டும். அடுத்த பந்தினை, மீண்டும் அடிக்க முயன்றார். மட்டையின் ஓரத்தில் அடித்தது. மூன்றாம் பந்தினை வீசினார், ஃபெர்குசன். இம்முறை, சற்று வேகத்தை கூட்டியவாறு, உடலின் நோக்கி வீசப்பட்ட அறைக்குழிப்பந்து. மிக தடுமாற்றத்துடன் அதனை, ஃபைன் லெக் திசையில் அடித்து, ஓடத்தொடங்கினார். இவ்வாறு இடையில் கிடைக்கும் ரன்கள் மிகவும் முக்கியம் என்று. முதல் ரன்னை ஓடிய பின், இரண்டாம் ரன்னையும் ஓடத்தொடங்கினார். அவ்விடத்தில் நின்ற கப்டில், பந்தினை மிகவும் அழகாக கைப்பற்றி, தோனி அவர்கள் ஓடுகின்ற திசையில் உள்ள ஸ்டம்ப்பை அடித்தார். தோனியும் நெருங்க பந்தும் ஸ்டம்ப்பை நெருங்கியது. வெளியிலிருந்து காணும்போது ஒரே தருணத்தில் இருவரும் அடைய, மறுபரிசோதனையில், வெறும் 2 இன்ச் இடைவெளியில், தோனி அவர்கள், கிரீஸ் கோட்டை தவறினால். வெறும் 2 இன்ச் இடைவெளியில், சற்று விரைவாக, ஸ்டம்பினை பந்து அடித்தது. வெறும் 2 இன்ச் இடைவெளியில், இந்திய அணி, இறுதிபூதியை அடையும் வாய்ப்பு பறிக்கப்பட்டது. வழக்கமாய், உணர்வுகளை வெளிக்காட்டாத தோனி, அன்று மிகவும் மனம் தளர்ந்தார். நியூஸிலாந்து அணியில் இருந்த இன்பமே தனி. அந்த ஓர் விக்கெட்டின் மதிப்பை, இவ்வொரு நிகழ்வை கடந்து வேறு எங்கும் கூற இயலாது. இறுதியில், இந்திய அணி 221 ரன்களுக்கு, அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 18 ரன்கள் வித்தியாசத்தில், போட்டியை வென்றது, நியூஸிலாந்து அணி.

அத்தோல்வியின் பாதிப்பு இன்றும் நிலவிக்கொண்டிருக்கின்றது. கப்டில், ஏன் அவ்வாறு சிறப்பாக பந்தினை வீசி ரன் அவுட் செய்தார் என்றும், தோனி அவர்கள், டைவ் அடித்திருக்கலாமே எனவும் பலரின் மனதில் கேள்விகள் எழும்ப, இன்றும் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது. ஆனால், கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு, கடந்து சென்றால் மட்டுமே, இதற்கு பிறகு நடக்கும் அதிசயங்களை நாம் கண்டு ரசிக்க இயலும். என்ன ஒன்று, தோனி களத்தில் இருக்க மாட்டார். யாவராக இருப்பினும், ஒரு நாள் ஓய்வு அறிவித்து, வெளியேறும் நிலை நிச்சயமாக வரும். கிரிக்கெட்டை பொறுத்த வரை, இவையனைத்தும் நடக்கும். எதற்கும் தயாராய் இருத்தல் வேண்டும். ஆனால், தனிபட்ட வகையில், தோனியின் ரசிகனாய், எனக்கு ஓர் ஆசை. கடைசியாக ஒரு முறை, தோனி அவர்களை களத்தில் பார்க்க வேண்டும் என்று தான் !.

ஆட்ட நாயகன் விருதை பெற்றது - மாட் ஹென்றி                  

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt