ஐபிஎல் அணிகளின் முழு அலசல்

ஒவ்வொரு அணியின் வடிவமைப்பு 

எல்லா வருஷமும் இந்நேரம் ஐபிஎல் நடந்துட்டு இருக்கும், இந்தியா டீ20 ரசிகர்களு ஒரு பெரிய விருந்தே இருந்திருக்கும். இந்த வருஷம் கூட மார்ச் 29ம் தேதி அன்னிக்கி ஐபிஎல் ஆரம்பிக்கிறதா இருந்துச்சு. அதுக்கு ஏத்த மாறி ஐபிஎல் ஏலம் நடந்து டீம் எல்லாம் ரெடி ஆகி சில டீம்ஸ் அவங்களோட பயிற்சியையும் தொடங்கிட்டாங்க. ஆனா சீனா வுஹான்'ல இருந்து மத்த எல்லா நாடுகளுக்கும் கொரோனா'னு ஒரு மருந்தே இல்லாத வியாதி உலகம் முழுக்க பரவ ஆரம்பிச்சிடுச்சு. இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்தால், அந்நோய் பரவும். அந்த நோயினால நிறையா பேர் இறந்து போயிட்டாங்க. இந்தியா'லயும் கொஞ்சம் கொஞ்சமா பரவ ஆரம்பிச்சிடுச்சு. எங்க அது பெருசா ஆகுறதுக்கு முன்னாடி, மொத்த நாட்டையும் முடக்கி வீட்ல இருக்க சொல்லிட்டாங்க. அது காரணமா ஐபிஎல் மட்டும் இல்ல, இருக்குற எல்லா ஸ்போர்ட்ஸ் டோர்னமெண்ட்டுகளையும் ஒத்தி வெச்சிட்டாங்க. 

சரி, இந்த போஸ்ட் எதுக்குன்னா, அடுத்த கொஞ்சம் நாளுக்கு, ஐபிஎல்'ல இருக்குற ஒவ்வொரு டீமோட வரலாறு, அப்பறோம் அவங்க ஏலத்துல பயன்படுத்துற யுக்தி, அதுனால அவங்களுக்கு கிடைச்ச பலன், மற்றும் இதுக்கு அப்ரோம் அவங்க யுக்தி எப்படி இருக்கும்னு ஒரு பதிவு போடலாம்னு. 

1) டெல்லி கேபிட்டல்ஸ்:

                                   இந்தியாவோட தலைநகரம் டெல்லி. அதுனால முதல்'ல தலைநகரத்தோட ஆரம்பிக்கலாம்னும் அப்ரோம் எனக்கு சில புடிச்ச, பெருசா வரணும்'னு ஆசை பட்ட டீம்'னால இந்த டீம் பத்தி பதிவு போடறேன். இந்த டீம் ரொம்ப வருஷமா ராசியே இல்லாத டீம் னு மக்கள் மத்தியில ஒரு பேச்சு போய்ட்டு இருந்துச்சு. அது மட்டும் இல்லாம சோஷியல் மீடியாவு'ல "என்னிக்காவது உங்களுக்கு வாழ்க்கையில வொர்த் இல்லனு நினைச்சீங்க'னா, அப்போ ஒரு வாட்டி ஐபிஎல்'ல டெல்லி டேர்டெவில்ஸ் டீம பத்தி நினைச்சு பாருங்க" அப்டினு நிறைய விமர்சனத்துக்கு உள்ளடங்கின டீம் இது. முதல்ல இந்த டீம் பெயர் டெல்லி டேர்டெவில்ஸ் அப்ரோம் ஓனர்ஷிப் மாறினது நால டெல்லி கேபிட்டல்ஸ்'னு பெயர மாத்திட்டாங்க.

இந்த டீம ரெண்டு பகுதியா பிரிக்கலாம். 2008 - 2014, இது ஒரு பகுதி, அப்ரோம் 2015 - இப்போ. 

  *2008 - 2014( முதல் பகுதி ):

                                                               2008, 2009 மற்றும் 2010, இந்த முதல் மூணு வருஷத்துல ரொம்பவே பலம் வாய்ந்த டீமா இருந்தாங்க. 2008'ல சேவாக் தலைமையில கவுதம் கம்பீர், டீ வில்லியர்ஸ், டேனியல் வெட்டோரி, ஷிகார் தவான், தினேஷ் கார்த்திக், டில்லகராதனே தில்ஷான் அப்டி'னு ஒரு பயங்கர ஸ்ட்ராங்கான டீம் ரெடி பண்ணாங்க. அது மட்டும் இல்லாம லோக்கல் வீரர்கள் சில பேரையும் எடுத்தாங்க, அந்த வருஷம் 4வது எடத்துல முடிச்சாங்க. 2009'ல ஏறக்குறைய அதே பிளேயர்ஸ் தான், ஆனா கூடவே டேவிட் வார்னர், ஆஷிஷ் நெஹ்ரா, ஃபர்வீஸ் மஹரூஃப் அப்டினு இன்னும் பலத்த கூடறாங்க. அந்த வருஷம் லீக் போட்டிகள்'ல முதலாவது எடத்துல முடிக்குறாங்க, ஆனா செமி ஃபைனல் மேல தகுதி பெற முடில. 2010 கம்பீர் கிட்ட கேப்டன்'ஸி கொடுக்குறாங்க. அந்த வருஷம் 14 போட்டிகள்'ல 7 ஜெயிச்சு 7 தோத்து, 5வது எடத்துல முடிக்கிறாங்க. அதுக்கு அடுத்த நாலு வருஷத்துல 2012ல மட்டும் தான் பிளே - ஆஃப் வரைக்கும் போறாங்க. மத்த மூணு வருஷமுமே லீக் டேபிள்'ல கடைசி, கீழ் எடத்துல முடிக்குறாங்க. இதுல 2012 அவங்க அணி அவ்வளவு பலமா இருந்துச்சு. 2014'ல பெரிய ஏலம் நடந்துச்சு. அதுல அவங்க டீம் கோர் பிளேயர்ஸ இழந்தாங்க. அதுனால அந்த வருஷம் 2 போட்டி மட்டுமே ஜெயிக்க முடிஞ்சுது. இது வரைக்கும் ஸ்ட்ராங்கான டீம் எதுன்னு தேடி தேடி எடுத்தாங்க, ஆனா அந்த டீம் நல்ல ஃபார்ம்'ல இருக்காங்களான்னு பாக்கல, அது நாலா சரிய ஆரம்பிச்சிது.

  *2015 -  இப்போ :

                                       ஆனா 2015'ல இருந்து அவங்க ரிசல்ட் பத்தி கவலை படாம ஒரு தொலைநோக்கு பார்வையோட ரொம்ப வருஷத்துக்கு ஒரு டீம் வரணும்னு ரெடி பன்றாங்க. உள்ள கேரி கிரிஸ்டன், பாடி அப்டன், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, ரிக்கி போன்டிங் அப்டினு நெறய ஜாம்பவான் கொச், டீம் ஸ்ஃடாப்ஸ் னு கொண்டு வராங்க. 2015'ல அவங்க கடைசில முடிச்சாங்க, ஆனா ஷ்ரேயஸ் ஐயர்'னு ஒரு இளம் வீரன உருவாக்குறாங்க. 2016'ல ஜாஹீர் கான் தலைமையில, சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், கருண் நாயர், பவன் நேகி, முஹம்மத் ஷமி, கிறிஸ் மோரிஸ், சாம் பில்லிங்ஸ், ஷபாஸ் நதீம், ப்ராதவெய்ட், மயங்க் அகர்வால்'னு ரொம்ப இளம் பட்டாளத்த எடுத்தாங்க. நெறய பேர் கலாய்ச்சாங்க. ஆனா இந்த 2016'ல கிட்டத்தட்ட பிளே - ஆஃப் கு போயிருப்பாங்க. 5வது எடத்துல முடிச்சாங்க. 2017'லயும் சிறப்பா விளையாடினாங்க. ரிஷப் பண்ட் சரமாரியா பௌலர்க'ள அடிச்சாரு. அதுக்கு ஆயுத வருஷம் பெரிய ஏலம் நடக்குது. ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் மோரிஸ், இவங்க மூணு பேரையும் ரீடைன் பன்றாங்க. ரொம்ப இளம் டீம் எடுக்குறாங்க. கம்பீர் கிட்ட தலைமை பொறுப்பு கொடுக்குறாங்க. ஆனா அவர் தலைமையில டெல்லி அணி முதல் 7 போட்டியில 1 வெற்றி மட்டுமே வாங்க முடிஞ்சுது. இத்தனைக்கும் கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிய சிறப்ப வழிநடத்தி ரெண்டு ஐபிஎல் கோப்பையை ஜெயிச்சு கொடுத்தாரு. 8வது போட்டியில 23 வயசு சின்ன பையன் ஷ்ரேயஸ் ஐயர் கிட்ட தலைமை பொறுப்பு கொடுக்குறாங்க. அப்போவே மூணு வருஷம் எதுக்கு யூங்ஸ்டர்ஸை ரெடி பண்ணாங்க'னு புரிஞ்சிக்கிட்டாங்க. அவர் தலைமை'ல அடுத்த 7 போட்டியில 4 போட்டி வெற்றி பெற்றாங்க. பிளே - ஆஃப்'கு போகல, ஆனா அடுத்த வருஷமும் அவர் மேல நம்பிக்கை வெச்சு கேப்டன் பொறுப்பை கொடுக்குறாங்க. 2019'ல தவான டீம் குள்ள கொண்டு வராங்க. 2019 டெல்லி அணியோட தொலைநோக்கு பார்வை எவ்வளவு செரியா வேல செஞ்சுருக்கு'னு எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்க. ஷ்ரேயஸ் ஐயர் தலைமை'ல 7 வருஷத்துக்கு பிறகு 
பிளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றாங்க. கிட்டத்தட்ட ரொம்ப வருஷம் கழிச்சு ஹோம் கிரவுண்ட்'ல வெற்றி சதவீதம் அதிகம் வெச்சாங்க. ஒரு சின்ன பையன் தன்னை வளர்த்த டீம நல்லா பல இளன் சிறுத்தைகளை வெச்சு வழிநடத்தினான். கிட்டத்தட்ட குவாலிஃபையர் 2 வரைக்கும் வந்தாங்க. அங்க சென்னை அணிகிட்ட தோத்தாங்க. ஆனா அங்க டெல்லி ஜெயிச்சிருந்தா ஐபிஎல் கப் ஜெயிச்சிருக்க நிறைய வாய்ப்பு இருந்திருக்கும். ஏன்னா அவ்வளவு புரிஞ்சிக்க முடியாத, பலம் வாய்ந்த டீமா இருந்துச்சு. அடுத்த வருஷம் கண்டிப்பா கப் அடிக்கவோ, இல்ல கப்'கு இன்னும் பக்கத்துல கூட வரலாம். ஐபிஎல் இளங்கன்றுகளுக்கு ஒரு பெரிய அடித்தளமா அமைஞ்சிருக்கு. அதுல டெல்லி மாறி டீம் கிட்டத்தட்ட நம்ம இந்தியா அணியோட பிற்காலத்துக்கும் சேர்த்து பிளேயர்ஸ் கொண்டு வராங்க. நான் தனிப்பட்ட முறையில இந்த டீம் எப்போ விளையாடினாலும், நீங்க கப் அடிக்கணும், ஜெயிக்கணும்'னு ரொம்ப ஏக்க பட்டு பாப்பேன். இனி வரும் காலங்களில் பாப்போம், என்ன மாயம் செய்றாங்க'னு.


                             

       

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?