அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே தலைவன் - மஹேந்திர சிங் தோனி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள், எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில், 7 வருடங்களுக்கு முன், இதே நாளில் மோதியது. அப்போட்டி, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதி போட்டி ஆகும். ஒரு புறம் தோல்வியின்றி, இறுதி போட்டியினை அடைந்த இந்திய அணி. மறுபுறம், இத்தொடரின் தொகுப்பாளரான இங்கிலாந்து அணி. தொடரின் தொகையுப்பாளர்களை அவர்களின் ஊரில் வைத்து வெற்றிபெறுவது என்பது மிகவும் கடினம். குறிப்பாக, இறுதிப்போட்டி என்றால், அதிலுள்ள அழுத்தத்தின் அளவு மிக மிக அதிகம்.
இதற்கு முன், 2002ம் ஆண்டில், இந்திய அணி இறுதிவரை சென்றது. ஆனால், அப்போட்டி மழையின் காரணமாக தடைப்பட்டதால், கோப்பையை இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் பகிர்ந்தனர். இம்முறை, இந்திய அணி, தங்களுக்கென ஓர் கோப்பையை தட்டி செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்க, மழை பொழிந்தது. இம்முறையும் பகிர்ந்தளிப்பர் என அனைவரும் நினைக்கும் தருணத்தில், மழை நின்றது. போட்டியை, 20 ஓவர்களுக்கு குறைத்தார்கள்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில், ரோஹித் ஷர்மா, தனது விக்கெட்டை இழந்தார். ஷிகர் தவான், சிறிது தன்னம்பிக்கையுடன் விளையாட, ஸ்கோர் உயர்ந்தது. இத்தொடரில், அதிக ரன்களை குவித்த வீரர், ஷிகர் தவான். அதிலும், அன்று அவர் தர்ட் மேன் திசையில், ஸ்குவையர் கட் ஷாட்டின் வாயிலாக சிக்ஸர் அடிப்பது மிகவும் அருமையாக திகழும். ஆனால், அவர் 31 ரன்களுக்கு, பொபாரா சற்று வேகத்தை குறைத்து வீசப்பட்ட பந்தில், தவறான கணிப்பில், ஷார்ட் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். அங்கிருந்து 3 விக்கெட்டுகள், உடனுக்குடன் சரிந்தது. அதன் காரணமாக, 14 ஓவர்களில் முடிவில் 67/5 என ஸ்கோர் இருந்தது. உள்ளே இருந்தது விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா. இங்கிருந்து, விக்கெட்டுகளை இழந்தால் ஆபத்து இந்திய அனியிற்கே என புரிந்துக்கொண்டு, தெளிவுடன் விளையாடினர் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா. அத்தொடரில் கோலியின் ஆட்டம் பெரிதளவில் இல்லாமல் இல்லாமல் இருக்க, இறுதி போட்டியில், இந்திய அணியை காக்கும் தெய்வமாக நின்றார். 34 பந்துகளில் 43 ரன்களை அடித்தார். மறுபுறம் ஜடேஜா, சற்று குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட, இறுதி இரண்டு ஓவர்களில், தனது ஆட்டத்தின் போக்கினை மாற்றி, சிறிது விரைவாக ரன்களை குவித்தார். அதன் காரணமாக, 129/7 என ஸ்கோர் வந்தது. குறைந்த ஸ்கோராக இருப்பினும், சற்று நம்பிக்கை கொடுக்கும் ஸ்கோராக அமைந்தது. ஜடேஜா ஆட்டமிழக்காமல், 25 பந்துகளில் 33 ரன்களை அடித்தார். கோலி, 34 பந்துகளில் 43 ரன்களை அடித்தார். இங்கிலாந்து அணியின் சார்பாக, பொப்பாரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. 9 ஓவர்களில், 46/4 என ஸ்கோர் இருந்தது. தோனியின் வழிநடத்துதல் மிகவும் அருமையாக இருந்தது. ரூட் அவர்களுக்கு, ஸ்லிப் திசையில் ஓர் ஃபீல்டரும், லெக் ஸ்லிப் திசையில் ஒரு ஃபீல்டரும் மற்றும் ஷார்ட் லெக் திசையில் ஒரு ஃபீல்டரையும் நிற்க வைத்தார். அவர் நெருக்கடியின் காரணத்தினால், தவற ஷாட் ஒன்று அடித்து, ஃபைன் லெக் திசையில் நின்றிருந்த இஷாந்த் ஷர்மா'விடம் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில், கண்டிப்பாக ஸ்லிப் திசையில் ஒரு ஃபீல்டரும், லெக் ஸ்லிப் திசையில் ஒரு ஃபீல்டரும் நிற்க வைத்தார். அதன் பலனாக, பலியானவர்கள் இயன் பெல், ஜொனாதன் ட்ரொட் மற்றும் ஜோ ரூட். அலாஸ்டர் குக்கின் விக்கெட்டையும் முதல் ஓவரில் உமேஷ் யாதவிடம் பந்தை ஒப்படைத்து இரண்டு ஸ்லிப் ஃபீல்டர்களை நிற்க வைத்தார். ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார் அவர். ஆனால், அன்று, மோர்கன் மற்றும் பொப்பாரா சிறிது அச்சுறுத்தல் கொடுத்தனர். இருவரும் இனைந்து 64 ரன்கள் கூற்றாக அமைத்தனர். 46/4 என்கிற நிலையிலிருந்து, 17வது ஓவரின் முடிவில் 102/4 என ஸ்கோர் இருந்தது. தேவை 28 ரன்கள் 18 பந்துகளில். 6 விக்கெட்டுகள் மீதம் உள்ள நிலையில், அவர்களிடமே போட்டி இருந்தது. தோனி, இஷாந்த் ஷர்மாவிடம் பந்தை ஒப்படைத்தார். இதற்கு முன்னால் அவர் வீசிய ஓவரில், ரன்களின் மழை பொழிந்தது. ஆனால், அதனை மீறி, இவரிடம் கொடுப்பது என்றால், ஏதேனும் திட்டம் இருக்க வேண்டும் என்றும், இவர் மீது நம்பிக்கை உள்ளது என்பதே அர்த்தம். இஷாந்த் ஷர்மா, தோனியின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. பொப்பாரா மற்றும் மோர்கன், இருவரின் விக்கட்டுகளையும் கைப்பற்றினார். ஆட்டம் சூடுபிடித்தது. கடைசி இரண்டு ஓவர்களையும், சுழற்பந்து வீச்சாளர்களிடம் வழங்கினார். மிகவும் துணிச்சலான முடிவு. ஆனால், பலனளித்தது. 19வது ஓவரில் ஜடேஜா பட்லரின் விக்கெட்டையும் கைப்பற்றினார், அதற்கு இணையாக, ப்ரெஸ்னனின் ரன் அவுட்டையும் நிகழ்த்தினார். இறுதி ஓவரில், 15 ரன்கள் தேவை என்று இருக்க, அஷ்வினிடம் பந்தை ஒப்படைத்தார். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் இருக்க, இரண்டாம் பந்தில் 4 ரன்களுக்கு சென்றது. தேவை 11 ரன்கள் 4 பந்துகளில். அடுத்த பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்த 2 பந்துகளில் இரண்டு இரண்டு ரன்களாக எடுத்தனர். இறுதி பந்து, தேவை 6 ரன்கள். அஸ்வின் பந்து வீச, ட்ரெட்வெல் அதனை சிக்ஸர் அடிக்க முயன்று முழுவதுமாக தவற விட்டார். இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மிகவும் விறுவிறுப்பான போட்டி.
இவ்வெற்றியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில், ஐசிசி'யின் அணைத்து வித கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் ஆனார், மகேந்திர சிங் தோனி. 7 ஆண்டுகளில் செய்த சாதனை இது. மற்றும், இந்திய அணி தனக்கென கைப்பற்றிய முதல் சாம்பியன்ஸ் கோப்பை இதுவே ஆகும்.
ஆட்ட நாயகன் விருதை பெற்றது - ரவீந்திர ஜடேஜா (தனது 33*(25) மற்றும் தான் கைப்பற்றிய 2 விக்கெட்டுகளின்) காரணமாக.
தொடர் நாயகன் விருதை வென்றது - ஷிகர் தவான்( தான் அடித்த 331 ரன்களினால் )

Comments
Post a Comment