சென்னை அணியின் வருகை
ஏப்ரல் 7, 2018
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி 2 வருடங்களுக்கு பெட்டிங் மற்றும் சூதாட்டம் காரணமாக தடை செஞ்சாங்க. அது நால 2016 மற்றும் 2017, இந்த ரெண்டு வருஷம் ஐபிஎல் போட்டிகள்'ல விளையாட முடில. 2018 ஐபிஎல் போட்டியில ரெண்டு டீமும் உள்ள வருது . ஐபிஎல் ஏலம் நடத்தினாங்க . அதுல சென்னை அணி ரொம்ப வயசான பிளேயர்ஸ் எடுத்தாங்க. சராசரி டீம் பிளேயரோட வயசு 31. எல்லாரும் இவங்கள டாடி'ஸ் ஆரமி னு சோஷியல் மீடியாலயும் மற்றும் எக்ஸ்பெர்ட்ஸ் நாலயும் பெயர் வாங்கினாங்க.
ஐபிஎல் ஷெட்டியுள் விட்டாங்க. முதல் போட்டியே சென்னை அணியோட எதிர் அணியான மும்பை அணி கூட அதுவும் அவங்க ஊர்'ல உள்ள வான்கடே ஸ்டேடியம் 'ல . முதல்'ல டாஸ் ஜெயிச்ச சென்னை அணி பௌலிங் சூஸ் பண்ணாங்க . தீபக் சாஹர் பௌலிங்'ல ரோஹித் ஷர்மா மற்றும் ஏவின் லீவிஸ் , ரெண்டு பேரும் அவரோட ஸ்விங்'க கணிக்க முடியாம தடுமாறிட்டு இருந்தாங்க . அதே மாறி தீபக் சாஹர் ஏவின் லீவிஸ்'ஸ LBW எடுக்குறாரு. சீக்கிரம் கொஞ்சம் நேரத்துலயே ரொம்ப தடுமாறிட்டு இருந்த ரோஹித் ஷர்மா வாட்சன் பௌலிங்'ல அவரோட விக்கெட்'ட பறிகொடுக்குறாரு. ஆனா அதுக்கு அப்பறோம் இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ரெண்டு பேரும் நல்லா அடிச்சு ஆடினாங்க. அவங்க ரெண்டு பெரும் அவுட் ஆனதுக்கு அப்ரோம் க்ருனால் மற்றும் ஹர்திக் ரெண்டு பெரும் ஃபினிஷிங் பண்ணும்போது கடைசி ஓவர்ல பிராவோ நல்லா பௌலிங் பண்ணினது நால மும்பை அணி 166/4 னு ஸ்கோர் அடிச்சாங்க.
167 டார்கெட்'னு வாட்சன் மற்றும் ராயுடு ஓப்பனிங் பண்ண உள்ள வராங்க. ரெண்டு பெரும் நல்ல தொடக்கத்தை கொடுக்குறாங்க. ஆனா ஹர்திக் பந்துல வாட்சன் மற்றும் ரெய்னா விக்கெட்டுக'ள எழக்குறாங்க. அன்னிக்கி மயங்க் மார்கண்டே, தன்னோட முதல் மேட்ச் விளையாடுற 19 வயசு சிறுவன் சிறப்பா பௌலிங் பன்றாரு. அவரோட பந்து வீச்சு காரணமா தோனி, ராயுடு ரெண்டு விக்கெட்டுகளையும் எடுக்குறாரு. கொஞ்சம் நேரத்துலயே ஜடேஜாவும் தன்னோட விக்கெட்'ட முஸ்தபிஸுர் கிட்ட எழக்குறாரு. உள்ள வராரு பிராவோ. ஸ்கோர் 60/5. இந்த நெலமையி'ல இருந்து எந்த டீமா இருந்தாலும் மீண்டு வர்றது ரொம்ப கஷ்டம். கிட்டத்தட்ட எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க சென்னை அணி தோத்துட்டாங்க'னு. அதுக்கு எத மாறி ஜாதவ் கால்'ல அடிப்பட்டு பெவிலியன் குள்ள போறாரு. அதுக்கு அடுத்த பந்துல தீபக் சாஹர் அவுட் ஆகுறாரு. கொஞ்சம் நேரத்துல ஹர்பாஜன் மற்றும் மார்க் வுட் ரெண்டு பெரும் அவுட் ஆகுறாங்க. இப்போ இருக்குறது கடைசி விக்கெட். ஏற்கனவே பிராவோ ஒரு பக்கம் தனியா அடிச்சிட்டு இருந்தாரு. கடைசி மூணு ஓவர்'ல 47 ரன்கள் தேவை. ஆனா அன்னிக்கி யாரும் எதிர்பாக்காதது பிராவோ அப்படிங்கிற ஒரு ஆயுதம். சர மாரியா தாக்குறாரு கிட்டத்தட்ட கைய விட்டு போன மேட்ச்'ச திரும்ப நம்ப பக்கம் கொண்டு வந்தாரு. "இல்லாத ஒரு வாய்ப்ப உருவாக்கவும் தெரியும், அந்த வாய்ப்பு கைய விட்டு போச்சுன்னா இழுத்து தக்க வெச்சுக்கவும் தெரியும்" அப்டி சொல்ல சொன்னாரு பிராவோ. 7 பந்துல 7 ரன்கள் தேவை'னு கொண்டு வந்தாரு பிராவோ. அப்போ பிராவோ கேட்ச் குடுத்தது 68 ரங்களுக்கு அவுட் ஆகுறாரு. ஆத்தி எல்லா விக்கெட்டும் போயிடுச்சுனு நினைக்கும் போது ஜாதவ் அடிபட்ட கால்'லோட உள்ள வராரு. கடைசி ஓவர், தேவை 7 ரன்கள், ஸ்ட்ரைக்'ல இருக்குறது பிராவோ இன்னொரு பக்கம் இம்ரான் தாஹிர். முதல் மூணு பந்து டாட் பால் ஆகுது. எல்லார் மனசுலயும் ஒரு படபடப்பு. நான்காவது பந்துல ஜாதவ் முட்டிபோட்டு ஃபைன்லெக் நோக்கி சிக்ஸ் அடிக்குறாரு. போட்டி சமன். இன்னும் 2 பந்துல 1 ரன் தேவை. கவர் டிரைவ் ஆடுறாரு, 4 ருண்களுக்கு பந்து சீறிக்கிட்டு போகுது. சென்னை போட்டி'ய ஜெய்க்குது. மும்பை ரசிகர்களுக்கு ஒண்ணுமே புரில. ஆட்ட நாயகன் - பிராவோ. ஹர்ஷா போக்லே ஏற்கனவே தன்னோட ஒரு இண்டெர்வியூ'ல சொன்னாரு" 37 ஓவர்கள் மத்த டீம் கைல இருந்தாலும், கடைசி மூணு ஓவர்ல போட்டி சென்னை கையுக்கு வந்துரும்", அதுக்கு ஏத்த மாறி சென்னை அணி அன்னிக்கி விளையாடிச்சு. இந்த வெற்றியோட அவங்களோட வருகை'யா சென்னை அணி தெரிவிச்சாங்க.
Comments
Post a Comment