ரெண்டு முக்கியமான சம்பவங்கள் - வரலாற்றில் இன்று

        வரலாற்றில் இன்று 

மார்ச் 27,1994

நம்ம எல்லாருக்கும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்'ல எவ்ளோ பெரிய ஜாம்பவான், ஓப்பனிங்'ல பெஸ்ட் பேட்ஸ்மேன்'னு தெரியும்.  ஆனா, இந்த நாள் 1994ம் ஆண்டு, அன்னிக்கி நியூஸிலாந்து அணி கு எதிரே முதன் முதல்'ல ஓப்பனிங் பன்னார்'கிற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் ? .

1994ம் ஆண்டு 27வது மார்ச்,ஆக்லாந்து'ல நியூஸிலாந்து எதிரா முதல் முறையா ஒரு நாள் போட்டியி'ல ஓப்பனிங் எறங்குனாரு.  டெண்டுல்கர் தன்னோட ஓப்பனிங் பேட்டிங்'க, அப்போ இருந்த இந்தியா கேப்டன் அஜாருதின் மற்றும் டீம் மேனேஜர் அஜித் வடேகர் , ரெண்டு பேர்கிட்டயும் கேட்டு வாங்கினாரு. அஜாருதினே அவரோட ஒரு இன்டெர்வியூ'ல சொன்னது
'"டெண்டுல்கர் ஒரு நல்ல பேட்ஸ்மேன், அவர் No.5,6 ல தன்னோட டேலேண்ட் வேஸ்ட் ஆகிட்டு இருக்கு, நானே அவர ஓப்பனிங் இறக்கலாம்'னு இருந்தேன்". சரி, அப்போ எறங்குனவரு தான், அன்னிக்கே 49 பந்துகள்'ல 82 அடிச்சு விளாசினாரு. அதோட நிக்கல, டெண்டுல்கர் ஒபென்னேர்'அ மட்டுமே 344 ODI ஆடிருக்காரு அதுல 15,310 ரன்கள் அடிச்சிருக்காரு 45 செண்ட்டரிகளோட. 

மார்ச் 27, 2016

20-20 வேர்ல்ட்கப், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டி, ரெண்டு அணிக்கும் இந்த போட்டி'ய ஜெயிச்சாதான் செமி ஃபைனல் போட்டிக்கு தகுதி பெற முடியும். முதல்'ல பேட்டிங் பண்ண ஆஸ்திரேலியா 160/6'னு ஒரு மீடியம் ஸ்கோர் அடிச்சாங்க.ஆனா, இந்த டௌர்ன்மெண்ட்'ல இது வரைக்கும் 150'கு மேல இந்தியா ஒரு ஸ்கோரும் அடிக்கல.அதுவும் அன்னிக்கி பயந்த மாதிரி 7.4 ஓவர்கள்'ல 49/3 னு இந்தியா தடுமாறிட்டு இருந்துச்சு. கோலி மற்றும் யுவராஜ் சேர்ந்து கொஞ்சம் ரங்கள்'ல சேர்த்துட்டு இருந்தாங்க.ஆனா அதுவும் ரொம்ப நேரம் நிக்கல.யுவராஜ் 21 ரங்களுக்கு அவுட் ஆகிட்டு போகும் போது 94/4னு இந்தியா ஸ்கோர் இருந்துச்சு.தோனி உள்ள வந்தாரு.மீதி 6 ஓவர்'ல 67 ரன்கள் தேவை'னு இருந்துச்சு.கோலி கொஞ்சம் கொஞ்சம் ஸ்கோர் ஏத்திட்டு கடைசி மூணு ஓவர்'ல 39 ரன்கள் வேணும் னு இருக்கும்போது அடிக்க ஆரம்பிச்சாரு. வர்ற பௌலர்ஸ் எல்லாரையும் நாலா பக்கமும் பௌண்டரிகள்'ல செதறடிச்சிட்டு இருந்தாரு.அது மட்டும் இல்லாம,தோனி - கோலி  ரெண்டு பேருக்கும் நடுல இருந்த ரன்னிங் பேட்வீன் தி விக்கெட்ஸ் ரொம்ப அருமையா இருந்துச்சு. ஒன்ன ரெண்டாவும் ரெண்ட மூனாகவும் ஓடிக்கிட்டே இருந்தாங்க. கோலியோட பேட்டிங் கிட்டத்தட்ட "நா சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவேன், இப்போ நீ வேற காட்டு காட்டு'ங்கிரியா காட்டாமயா இருப்பேன்" அப்டினு சொல்ற மாதிரி இருந்துச்சு. சொல்ல போனா 2015 செமிஃபைனல் போட்டியில தோத்ததுக்கு பழி வாங்கினதா கூட சொல்லலாம். 82 ரன்கள் 51 பந்துகள்'ல அடிச்சு, 5 பந்துகள் மிச்சம் வெச்சு, போட்டியை இந்தியா'கு ஜெயிச்சு குடுத்துட்டாரு விராட் கோலி. நம்ம செமிஃபைனல்கு தகுதி பெற்றாச்சு.
    
 

Comments

Post a Comment

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?