KKR vs SRH | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, கொல்கத்தா VS ஹைதராபாத் போட்டி நடந்துச்சு. இந்த matchஉம் தொடர்ச்சியா, மூணாவது matchஅ, one sidedல முடியுது. ஆனா, tossல எடுக்குற decision, இந்த tournamentல முதல் முறையா மாறுது. ஆமாம், toss ஜெயிச்ச SRH அணி, முதல்'ல batting choose பன்றாங்க. ஆனா, tossல எடுத்த decisionகு நிகரா அவங்க batting சுத்தமா இல்ல. வெறும் 142/4 தான் அடிச்சாங்க. அதே நேரத்துல, KKR team, மொத்தம் 7 bowling optionsஓட எறங்குனாங்க. போன match அவங்க பண்ண தப்பெல்லாம் திருத்திக்கிட்டு, சும்மா sceneஅ sketch போட்டு செஞ்சாங்க. Bowlingலயும், fieldingலயும் வேலைய correctஅ செஞ்சதுக்கு அப்புறம், battingல செய்யாம இருந்த எப்படி ? Gill அந்த வேலைய கனக்கச்சிதமா செஞ்சு குடுத்தாரு. Hyderabad அணிக்கோ, battingல சின்ன score அடிச்சதுனால, அதை வெச்சுட்டு defend பண்ணவும் முடியாம, சரி wickets எடுத்துடலாம்னு பாத்தா அதுக்கும் Kolkata சுத்தமா chance குடுக்காம, ரொம்பவே அல்லாடிட்டு இருந்தாங்க. இந்த match பத்தி, தெளிவா புரிஞ்சிக்கனும்னா இந்த linkஅ click பண்ணுங்க. https://www.youtube.com/watch?v=Q7XldBVRze4
ஆனா, இந்த தள்ளாடலுக்கு நடுவுல, ஏதாவது ஒரு முக்கியமான காரணம் இருக்க வேண்டும். அந்த காரணம், இந்த matchஓட turning pointஅ கூட இருக்கலாம். அது என்ன, turning pointனு இந்த திருப்புமுனை segmentல நாம பாக்கபோறோம்.
ஹைதராபாத் பொறுத்த வரைக்கும், மொதல்ல நல்லாவே start பண்ணாங்க. வார்னரும், தெளிவா strike rotate பண்ணி ஆடிட்டு இருந்தாரு. அதுக்கு, equalஅ மனிஷ் பாண்டேவும், ரொம்ப quickஅ ஓடிட்டு இருந்தாரு. இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு நல்ல புரிதல் இருந்துச்சு. ஆனா, வருண் சக்ரவர்த்தி'னு ஒரு தமிழ்நாட்டை சேர்ந்த spinner, 10வது overல, ஒரு நல்ல topspinner delivery மூலமா, David Warner'ஓட wicket'அ எடுக்குறாரு. அந்த ஒரு moment'உம், அதுக்கு அடுத்து சாஹா ஆடுன ஆட்டமும் தான், இந்த matchஓட உண்மையான turning point.
ஒருவேளை இவங்க, David Warner'ஓட விக்கெட்டை எடுக்காம விட்டிருந்தா, அவ்ளோ தான். அவரு ஒரு ஆளு, கிட்டத்தட்ட 170கு கொண்டு போயிருப்பார். அதுக்கு அப்புறம், அதை chase பண்ணுறதுக்கு toughஅ இருந்திருக்கும். அதுகூடவே, சஹாவும் ரொம்ப தடுமாறிட்டு இருந்தாரு. நெறய வாட்டி சுத்து சுத்து'னு சுத்தினாலும், ball சுத்தமா மாட்டவே இல்ல. அங்கேயே, 142குள்ள score முடிஞ்சிடுச்சு.
Comments
Post a Comment