பிறந்த நாள் வாழ்துக்கள் கண்ணூர் லோகேஷ் ராகுல்

இன்று 28 வருடங்களுக்கு முன், கர்நாடகாவை சேர்ந்த மங்களூரில் பிறக்கிறார். வலது கை பேட்ஸ்மேனாக திகழும் இவர், 2014ம் ஆண்டில்  இந்தியா சர்வதேச டெஸ்ட் அணியில் இடம் பெறுகிறார், ஆஸ்திரேலியா எதிரே. இத்தொடரில் அவர் விளையாடின கடைசி போட்டியில் சதத்தை பதிவு செய்தார். 2016ம் ஆண்டில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் சர்வதேச இந்திய அணியில் அறிமுகமாகினார். அவ்வாண்டில் முதல் ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே எதிரே சதத்தினை பதிவு செய்கிறார். அதே ஆண்டில் மேற்கு இந்திய தீவுகள் எதிராக 20 ஓவர் போட்டியில் வெறும் 46 பந்துகளில் சதத்தினை பதிவு செய்தார்( ஒட்டுமொத்தமாக 2வது வேகமான சதம், இந்திய வீரர்களுள் முதலாவது வேகமான சதம்). அதே ஆண்டின் இறுதியில், சென்னை நடந்த இங்கிலாந்து எதிரே விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் 199 ரன்கள் அடித்து விக்கெட்டினை பறிகொடுத்தார். 

ஆனால் இவையினை கூறினாலும், அவருடைய பேட்டிங் அழகினை ரசிக்காமல் எவரும் இல்லை. எலிகன்ஸ் என்கிற வார்த்தையின் முழு உருவமாய் திகழ்கின்றவர் லோகேஷ் ராகுல். தன்னால் கிரிக்கெட்டில் மரபாக விளையாடி வரும் ஷாட்டுகளையும் அடிக்க முடியும், மரபின்றி உள்ள ஷாட்டுகளையும் மிக நேர்த்தியாக விளையாட முடியும். தன்னுடைய கவர் டிரைவ், சதுர சுட், புல் ஷாட், ஃபிலிக் ஷாட் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது. அதனைத்தாண்டி, ஒரு கிரிக்கெட்டர் தன்னுடைய ஆட்டத்தில் செய்கின்ற தவற்றினை உடனே திருத்திக்கொண்டு அடுத்த ஆட்டத்தில் சரியான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும். அதை இவர் செய்துள்ளார். 

2018ம் ஆண்டில், ஐபிஎல் தொடரினை தவிர்த்து, லோகேஷ் ராகுலுக்கு அவ்வாண்டு சரியாக அமையவில்லை. ஐபிஎல் தொடரில், 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். ஆனால் சர்வதேச போட்டிகளில், மிகவும் சரிவில் இருந்தது அவருடைய ஆட்டம். இங்கிலாந்து'கு எதிராக விளையாடிய தொடரில் கடைசி போட்டியில், கடைசி இன்னிங்சில் ஒரு சதத்தினை பதிவிட்டார். அதைத்தாண்டி சொல்லுகின்ற அளவுக்கு ஒன்னும் செய்யவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா எதிரே விளையாடிய தொடரில், ஒரு அரை சதம் கூட அடிக்காமல், இறுதி இரண்டு டெஸ்டுகளில் சிங்கள் டிஜிட்டில் விக்கெட்டினை பறிகொடுத்து சென்றார். அவர் தலை நேராக இல்லாமல், தன்னுடைய உடல் மிகவும் நேர்த்தியின்றி காணப்பட்டதால், தனக்கான ஷாட்டுகளை அடிக்க முடியாமல், விக்கெட்டினை பறிகொடுத்தார். இதில் 2019ம் ஆண்டில் காஃபி வித் கரண், எனும் இந்தியாவின் மிக பெரிய ரியாலிட்டி ஷோவில், தானும் தன்னுடைய மற்றோரு அணியின் வீரரான ஹர்திக் பாண்டியவுடன் சேர்ந்து பேசிய வார்த்தைகள் சர்ச்சையின் உள்ளதனால், இந்தியா அணியில் ஒழுக்கம் காரணமாக ஒரு தொடரில் நீக்கப்பட்டார். ஆனால், அந்நேரத்தினை வீணடிக்காமல், ராகுல் ட்ராவிட்டிடம் தான் சென்று தன்னுடைய குறைகளை கேட்டறிந்து அதை திருத்திக்கொள்ள பயிற்சி மேற்கொண்டார். அதனால் தன்னுடைய பழைய ஆட்டத்தினை வெளிப்படுத்த முடிந்தது. பின், இந்தியாவின் 2019 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றார்.


2019 உலகக்கோப்பையில், தவான் காயம் காரணமாக விலக, இவருக்கு ஒப்பனராக வாய்ப்பு கிடைத்தது. ஐவரும் ரோஹித் ஷர்மாவும் சேர்ந்து வெளிப்படுத்திய ஆட்டம், மிகவும் அற்புதமாக இருந்தது. 9 போட்டிகளில் 361 ரன்கள் அடித்து, அதில் ஸ்ரீலங்கா எதிராக தன்னுடைய முதல் உலகக்கோப்பை சதத்தினை பதிவிட்டார். பின், முழுவதும் வெற்றி தான். ஒப்பனராக ஜொலித்தார், மேற்கு இந்திய தீவுகள் எதிராக 20 ஓவரில் 2 அரை சதங்கள் மற்றும் ஒரு நாள் தொடரில் 1 சதம் மற்றும் 1 அரை சதம். பின் ஆஸ்திரேலியா எதிராக முதல் போட்டியில் அரை சாதம் அடித்தார், இரண்டாம் போட்டியில் அவரை 5வது இடத்தில விளையாட அனுப்பினார். அவ்விடத்தில் கூட ஜொலித்தார். ஒரு பினிஷெர் கிடைத்து விட்டார் என்பது ஆயிற்று. இது ஒரு போட்டியில் மட்டும் அல்ல, நியூஸிலாந்து எதிராக நடந்த வெளிநாட்டு தொடரில், 20 ஓவரில் தொடர் நாயகன் விருதை பெற்றார். ஒரு நாள் தொடரில் மறுபடியும் பேட்டிங்கில் கீழ் இடத்தில வந்து, அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இப்பொழுது உள்ள கிரிக்கெட் வீரர்களுள், தன்னுடைய ஆட்டத்தின் காரணமால் சிறந்து விளங்கி கொண்டு இருக்கிறார். பேட்டிங்கை தாண்டி, விக்கெட் கீப்பிங்கும் நன்றாக செய்துள்ளார். பல நாள் கழித்து இந்திய அணியில் ஒரு வீரர், எவ்விடத்தில் பேட்டிங் வந்தாலும் தன்னால் ஜொலிக்க முடிங்கிற அளவில் தன்னுடைய ஆட்டத்தினை வைத்துள்ளார். மீண்டும் பல சிறப்பான ஆட்டத்தினை இவரிடம் இருந்து காணவுள்ளோம் !!!! 

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt