மீண்டும் சென்னை மும்பை திரில்லர் போட்டி
நான் மீண்டும் கூறுகின்றேன், ஐபிஎல் கிரிக்கெட்டின் வெள்ளி மகுடங்களாக கருதப்படும் அணிகள், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். இவர்கள் இருவரும் விளையாடுகின்றார்கள், என்றே செய்தி மட்டுமே கிடைத்தால் போதும், வலைத்தளங்களில் ஓர் யுத்தமே நடக்கும்.
ஏலத்தில் விலை கொடுத்து இரு அணிகளும் வாங்குகின்ற வீரர்களை வைத்து ஓர் ஒப்பீடு செய்து, அதில் யார் வலுவானவர் என்று சண்டை நடக்கும். அவ்வாறு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு, போற்றப்படும் இரு அணிகள். இவ்விறுகள் பல திரில்லர் போட்டிகளில் ஈடுபட்டுள்ளது. அதில் ஒன்று தன் இப்போது நாம் காணவுள்ள போட்டி.
தேதி: மே 10, 2014 ஆண்டு
இடம் : வான்கடே மைதானம், மும்பை.
இப்போட்டியினை விளையாடுவதற்கு முன் இரு அணிகளுக்கும் இருந்த சூழலை நான் இப்போது விவரிக்கின்றேன். சென்னை அணி விளையாடும் 9வது போட்டி இது. இதற்கு முன் விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளை வென்றுள்ளனர். ஆனால், அதை வைத்து இவர்கள் நல்ல நிலையில் உள்ளார்கள், போட்டியில் அவ்வளவு நெருக்கடி இல்லை என்று நினைக்காதீர். காரணம், இதற்கு முன் விளையாடிய 2 போட்டிகளில், பந்துவீச்சு மிகவும் அடி வாங்கியது. அதிலும், சென்ற போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியின் பந்துவீச்சை வறுத்தெடுத்தனர். அதன் காரணமாக, பந்து வீச்சு இன்று தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும். மறுபுறத்தில், மும்பை அணி விளையாடும் 8வது போட்டி இது. இதற்கு முன் விளையாடிய 7 போட்டிகளில் 2ஐ மற்றுமே வென்று 5 போட்டிகளை தோல்வி அடைந்தனர். அதிலும், கடைசி 2 போட்டிகளில் தான் தொடர் வெற்றியை கண்டுள்ளார்கள். ஆதலால், அவர்களுக்கு இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானவையே. தோல்வி அடைந்தால், அரை இறுதி சுற்றை அடையும் வாய்ப்புகள், குறைந்து கொண்டே இருக்கும். ஆனால், நற்செய்தி, இம்மைதானத்தில் சென்ற 10 போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடையவில்லை.
டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹில்ஃபென்ஹாஸிற்கு பதிலாக சாமுயெல் பத்ரீ களம் இறங்க, மாற்று முயற்சி பரிசளித்தது. பவர்பிளே ஓவர்களுள் அவர் கவுதம் விக்கெட்டினை கைப்பற்றினார். ஆனால், அது முழுவதுமாக பலனளிக்கவில்லை என்றே தான் கூறவேண்டும். காரணம் 3 ஓவர்களில் 26 ரன்கள் வழங்கியுள்ளார். அதனால், பவர்பிளே ஓவர்களின் முடிவில் மும்பை அணி 42/1 என்று இருந்தது. ஆனால், அங்கிருந்து மிகவும் பொறுமையாக ரன்களை சேர்த்தார்கள் காரணம், சென்னை அணியின் சுழற்பந்துவீச்சு அன்று சிறப்பாக செயல்பட்டது. 10 ஓவர்களில் முடிவில் 57/1 என்று பரிதாப நிலையில் இருந்தது மும்பை அணி. அதற்கும் மேல் விடாமல், நெருக்கடி ஏற்படுத்தி, ஓர் கட்டத்தில் பொறுமையிழந்த சிம்மன்ஸ், இறங்கி வந்து சிக்ஸர் ஒன்றை அடிக்க முயன்று, லாங் ஆஃப் திசையில் நின்றிருந்த டு ப்ளஸிஸின் கைகளில் கேட்ச் கொடுத்து பாவிலியனை நோக்கி நடந்தார். "ஆட்டத்தின் அழுத்தம் அநியாயமாக ஒரு விக்கெட்டை காவு வாங்கியது". ஆனால் மறுபுறத்தில் இருந்த அம்பத்தி ராயுடு, மற்றும் புதிதாக உள்ளிறங்கிய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து, அழகாக ரன்களை சேர்த்தார்கள். ராயுடு அரை சதத்தினை எட்ட, 15 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100ஐ தொட்டது. ஒரு வழியாக விடிவு காலம் பிறந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது, 18வது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வின் ரோஹித் ஷர்மாவையும் மற்றும் ஃபினிஷர் பொல்லார்டை முதல் பந்திலும் கைப்பற்றி 18 ஓவர்களின் முடிவில் 129/4 என தத்தளித்துக்கொண்டு இருந்தது. இருவருமே டீப் ஸ்குவையர் லெக் திசையில் நின்றுகொண்டிருந்த ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார்கள். அதற்கு அடுத்த ஓவரின் முதல் பந்தில், நன்கு விளையாடிக்கொண்டிருந்த ராயுடுவின் விக்கெட்டையும் கைப்பற்றி அச்சுறுத்தியது சென்னை அணி. ஆனால், இறுதியில் கோரே ஆண்டர்சன் மற்றும் ஆதித்திய தாரே அடித்த சில பௌண்டரிகளின் காரணமாக 157/6 என்று ஓர் நடுநிலை ஸ்கோரை அடித்தது. அன்று பௌண்டரியில் நின்றிருந்த டூ ப்ளஸிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா மற்றுமே குறைந்த படியாக 20 ரன்கள் அருகே கட்டுப்படுத்தினர். சென்னை அணியிற்காக ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
158 ரன்களை இலக்காக ஏற்றுக்கொண்டு உள்ளே இறங்கினார்கள் டுவெயின் ஸ்மித் மற்றும் பிரண்டன் மெக்கலம். மும்பை அணியினை போன்று சென்னை அணியின் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்களை சேர்க்கவில்லை. பிரவீன் குமார், இரு பக்கங்களிலும் ஸ்விங் பந்தினை செய்தார். அதன் காரணமாக அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கலம் தனது விக்கெட்டை இழக்க 6 ஓவர்களில் முடிவில் 38/1 என இருந்தது. அங்கிருந்து சிறிது நேரத்தில் ரெய்னாவும் தனது விக்கெட்டை இழக்க, சென்னை அணியின் வெற்றிவாய்ப்பு மிகவும் குறைவு என்று நினைக்க, கிரிக்கெட்டை பொறுத்த வரை எதிர்பாராதது நிறைய நடக்கும். அடுத்து உள்ளிறங்கினார் டூ ப்ளஸிஸ். இருவரும் தெளிவாக, தவறான பந்துகளை மற்றும் தாக்கி, நன்கு வீசப்பட்ட பந்துகளில் 1 அல்லது 2 ரன்களை எடுத்து, போட்டியினை சென்னை அணியின் பக்கம் திருப்பினார்கள். டுவெயின் ஸ்மித் தனது அரை சத்தினை எட்டினார். 39 ரன்கள் 28 பந்துகளில், 8 விக்கெட் மீதம் இருந்த நிலையில், டுவெயின் ஸ்மித்தின் விக்கெட்டை காவு வாங்கியது மும்பை இந்தியன்ஸ். சரி, இங்கிருந்து போட்டியினை வெற்றி பெறுவது அவ்வளவு கடினம் இல்லை என்று எண்ணிய நேரத்தில் எமன் வந்து இறங்கியது மலிங்கா ரூபத்தில்... முதலில், டு ப்ளஸிஸின் விக்கெட்டை யார்க்கர் பந்தின் வாயிலாக வீழ்த்தினார். பின்னர் அவர் வீசிய 19வது ஓவர் தான், ஆட்டத்தின் ஊக்குவிப்பு என்றே கூறலாம். 17 ரன்கள் 12 பந்துகளில் தேவை என்று இருந்த எளிதான நிலையில், மலிங்க வெறும் 6 ரன்களை மட்டுமே வழங்கி ஜடேஜாவின் விக்கெட்டை சிறப்பான யார்க்கர் பந்தில் கைப்பற்றினார். மற்றும், கூடுதல் நெருக்கடியாக மிதுன் மன்ஹாஸ் அதே ஓவரில் ரன் அவுட் ஆனார். 11 ரன்கள் தேவை 6 பந்துகளில். உள்ளிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் தல தோனி. "இதை தான் நீ முதல்ல சொல்லிருக்கணும்" என்கிற துப்பாக்கி திரைபடம் வசனத்தை இப்போது சென்னை ரசிகர்கள் என்னை பார்த்து கூறுவார்கள் என்று தெரியும், ஆனால் இங்கு நான் வேறொரு செய்தியை குறிப்பிடுகிறேன். சென்ற ஆண்டு, சென்னையில் மும்பை அணியின் எதிரே நடந்த போட்டியில் இதனை போல் 12 ரன்கள் கடைசி ஓவரில் தேவை என்கிற நிலையில் தோனி உள்ளிருக்க, முதற்பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று தனது விக்கெட்டை இழந்தார். அதன் காரணமாக, மும்பை அப்பொடியை வென்றது. இது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அதனை போன்ற சூழல், ஆனால் இம்முறை நடந்தது வேறு......
போலார்டிடம் பந்து கொடுக்கப்பட்டது. முதல் பந்து, கையிலிருந்து நழுவி வைட் பந்தாக சென்றது. மீண்டும் முதற் பந்து வீசுகின்றார். இம்முறை வெகு விரைவாக இரண்டு ரன்கள் எடுத்து டோனி மீண்டும் ஸ்ட்ரைக்கில் வந்தார். தேவை 8 ரன்கள் 5 பந்துகளில். மூன்றாவது பந்து வீசுகின்றார் பொல்லார்ட். இம்முறை சற்று வேகம் குறைந்த பந்து, ஆனால் தோனி அதனை நன்கு கவனித்து டீப் மிட் விக்கெட் திசையில் ஓர் சிக்ஸர் அடிக்க, 4 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்று சென்னையின் பக்கம் கற்று வீசியது. அடுத்த பந்து, ரோஹித் சர்மா கவர் திசையில், உள் வட்டத்தில் நால்வரை நிறுத்தி வைக்க, அதை தாண்டி நான்கினை அடித்து போட்டியை வென்று கொடுத்தார்.
" வாழ்க்கை ஒரு வட்டம், இதுல ஜெயிக்கிறவன் தோற்பான், தோக்குறவன் ஜெயிப்பான்" என்கிற வசனத்தை மட்டும் நான் கண்டிப்பாக கூற மாட்டேன். ஏனெனில், சென்னையும் மும்பையும் எப்போது மோதிக்கொண்டாலும் பழைய கணக்குகளை தீர்க்குமாறு தான் போட்டி அமையும்.
"சிங்கம் பதுங்கி, வேவுபார்த்து, குறிவெச்ச இரையை அடிச்சதுக்கு அப்பறோம் அதோட உழைப்பெல்லாம் வீணடிக்கிற மாதிரி ஹைனா (கழுதைப்புலி) ஏதோ ஒரு சூழ்ச்சிப்பண்ணி அந்த இரையை தட்டிப்பறிச்சுதாம்" என்கிற வசனம் இப்போட்டியில் நன்கு பொருந்தும். மும்பையில் விளையாடிய கடந்த 10 போட்டிகளில், தோல்வியின்றி ராஜாவாக இருந்த மும்பை அணியை, தோற்கடித்து அவ்வணியின் உழைப்பை வீணாகியது. மற்றும், 5 போட்டிகளின் தோல்வியிற்கு பின், தொடர்ந்து 2 வெற்றிகள் பெற்று, இனி வரும் அணைத்து போட்டிகளும் முக்கியம் என்று இருந்த நிலையில், மும்பை அணியினை தோற்கடித்தது சென்னை அணி.
ஆட்ட நாயகன் விருதை பெற்றது - டுவெயின் ஸ்மித் ( தனது 57ற்காக )

Comments
Post a Comment