இந்திய அணியின் அசத்தலான வெற்றி
சென்ற ஆண்டு, இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள், மஞ்செஸ்டரில் மோதியது. ஒரு புறம் அரையிறுதி ஓட்டத்திலிருந்து வெளியேறிய மேற்கு இந்திய தீவுகள் அணி. அவர்களை பொறுத்தவரை, தங்கள் மானத்தையும் தங்கள் அணியின் சிறப்பையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை. ஆனால், தோல்வி அடைந்தால், பாதிப்பு பெரிதும் இல்லை. மறுபுறம், இந்திய அணியும் அரையிறுதி சுற்றை அடையும் ஓட்டப் பந்தயத்தில் நிற்க, கிடைக்கின்ற ஒவ்வொரு வெற்றியும் தேவையானது. அதுமட்டுமில்லாமல், சென்ற ஆட்டத்தில், தோனி'யின் பொறுமையான ஆட்டத்தின் காரணத்தினால், இந்திய அணி சற்று குறைந்த ஸ்கோர் அடித்தது என்று கூறினர். அப்போட்டியை, நாம் வென்றிருந்தாலும், சொற்பழிகள் குறையவில்லை. அதனை, தவுடுபிடியாக மாற்றியமைக்க வேண்டும்.
டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேற்கு இந்திய தீவுகளின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக விளங்கியது. வெற்றிபெற வேண்டும் என்கிற போராட்டம், தங்களின் ஆட்டத்தில் தெரிந்தது. ரோஹித் ஷர்மா, அன்று நன்கு தொடங்கியிருந்தாலும், அவரின் விக்கெட் மிகவும் விரைவாக வீழ்த்தப்பட்டது. அதில், நடுவர் கூறிய தீர்ப்பு, மிகவும் சர்ச்சைகளுக்கு உட்பட்டவை. காரணம், ரோச் வீசிய வேகப்பந்தில், மட்டையிற்கும், முட்டியிற்கும் இடையில் இருந்த குறைந்த இடைவெளியில், பந்து வந்தடைந்தது. தொடக்கத்தில், நடுவர் அவுட் இல்லை என்கிற தீர்ப்பை வழங்கியிருந்தாலும், பின்னர் மறுபரிசோதனையில், ஸ்நிக்க்கோ'வில் சத்தம் கேட்டவாறு ஸ்பைக் வெளிவர, அது மட்டையில் பந்து அடித்ததனால் வெளிவந்த ஸ்பைக்கா ? அல்லது முட்டியில் பந்து அடித்ததன் காரணத்தினால் வெளிவந்த ஸ்பைக்கா ? என்கிற குழப்பம் இருந்தது. அதற்கு பல மணிநேரம் கடைபிடித்து, நடுவர் அவுட் என்கிற தீர்ப்பை வழங்கினர்.
ராகுல் மற்றும் கோலி, மிகவும் அருமையாக விளையாடினார்கள். மேற்கு இந்திய தீவுகளின் பந்துவீச்சும் சற்று பிடிகொடுக்கவில்லை. ராகுல் 48 ரங்களுக்கு வெளியேறினார். கோலி, ஆனால் வழக்கம் போன்று, மிகவும் அருமையாக விளையாட, இவரை என்ன செய்து அடக்க வேண்டும் என்று சற்று யோசித்தனர். முதல் கட்ட திட்டம், மறுபுறத்தில் உள்ள வீரர்களை வீழ்த்துவது. வீழ்த்தினார்கள், விஜய் ஷங்கர் மற்றும் கேதர் ஜாதவ். களமிறங்கினார் மகேந்திர சிங் தோனி. இவரை சற்று நிறுத்தி, அணியின் மீது பாரத்தை இறக்க எண்ணி, சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்கினர். ஆனால், அவர்களிடம் இருந்தது ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே. ஆதலால், இருவரும் விளையாடும் பெரும்பான்மையான ஷாட்டுகளை கட்டுப்படுத்த, அந்தந்த திசைகளில் வீரர்களை நிற்க வைத்தனர். கோழியின் ரன் வேகமும் குறைக்கப்பட்டது, தோனியின் ரன் வேகமும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, தவறான ஷாட் ஒன்றை அடித்து, வெளியேறினார் விராட் கோலி, 72 ரன்களுக்கு. தோனி, இதனை முறியடித்தார். சென்ற போட்டியில், தான் செய்ய உள்ளதை தவறியதால், கிடைத்த விமர்சனத்தை முற்றிலும் உடைத்தெறிந்தார். தோனியும் ஹர்திக்கும் இனைந்து 40ம் ஓவர்களிலிருந்து வேகத்தை கூட்டினார்கள். ரன் ஓட்டம், முதலாம் கட்ட ஓவர்களில் இருந்தவாறு அமைய, 49வது ஓவரில், ஹர்டிக் பாண்டியா'வின் விக்கெட்டை, 46 ரங்களுக்கு வீழ்த்தியது, மேற்கு இந்திய தீவுகள் அணி. ஆனால், தோனி இறுதி ஓவரில், தனது சிறப்பை வெளிப்படுத்தினார். 2 சிக்ஸர்கள் மற்றும் 1 ஃபோர் அடித்து, 16 ரன்களை சேர்த்தார். 56 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் நின்றார். பலர், தோனி இறுதி ஓவரில், மூன்று பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல், மீதம் மூன்று பந்துகளில் 16 ரன்கள் அடித்ததை குறைகூறினர். ஆனால், மறுபுறத்தில் குலதீப் யாதவ் இருந்தார். தோனி முழு ஓவரை தன வசம் ஆக்கியதால் மட்டுமே, 16 ரன்கள் கிடைத்தது. இல்லையெனில், அதில் பாதியளவு கிடைத்திருக்குமா ? என்பது கேள்விக்குறி. ஆனால், தன் மீது விழுந்த அவக்கூறுகளை அவரே நீக்கிவிட்டார். " நம்மை குறைகூறுவோரை அக்குறையினால் வீழ்த்துதவது, மனதில் ஓர் தனி இன்பத்தையும், கர்வத்தையும் வழங்கும்". 268/7 என்கிற ஸ்கோருடன் முடித்தது இந்திய அணி. மேற்கு இந்திய தீவுகளின் பந்துவீச்சு மிக மிக அருமையாக இருந்தது. உடலை நோக்கி வரும் பந்துகளை எதிர்கொள்ள இந்திய அணி தடுமாற, அதனை நன்கு பயன்படுத்தி ரோஹித், ராகுல் மற்றும் விஜய் ஷங்கரின் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பந்துவீச்சை நிறைவாக செய்தோம். இனி பேட்டிங்கை சரியாக செய்தால் போதும், வெற்றி நிச்சயம். ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சு, மிகவும் தலைசிறந்த ஓர் அணிவகுப்பு. அதிலும் குறிப்பிடத்தக்க, வேகப்பந்து வீச்சாளர்கள், எதிரணியிற்கு தலைவலியினை வழங்குவர். அன்றும் ஜொலித்தது, இந்திய அணியின் பந்துவீச்சு. மேற்கு இந்திய தீவுகள் அணி, சற்றும் பேட்டிங்கில் தேர்ச்சி பெறவில்லை. சென்ற போட்டியிலாவது, போராடி தோல்வியடைந்தனர். ஆனால், அன்று, பந்துவீச்சில் வெளிக்காட்டிய ஓர் உற்சாகம், பேட்டிங்கில் இல்லை. அதனை தவிர்த்து, ஷமி'யின் அறைக்குழி பந்துகள், மேற்கு இந்திய தீவுகள் அணியிற்கு, அவர்கள் செய்ததனை திருப்பி கொடுத்தவாறு அமைந்தது. மிகவும் வெறிகொண்ட பந்துவீச்சு. அதன் காரணத்தினால், 143 ரங்களுக்கு மேற்கு இந்திய தீவுகள் அணி அணைத்து விக்கெட்டுகளை இழந்தது.
ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றியது - விராட் கோலி
Comments
Post a Comment