ஆஸ்திரேலியா'வின் 5வது உலகக்கோப்பை

வரலாற்றில் இன்று - 29/3/2015


5 வருஷத்துக்கு முன்னாடி, ஆஸ்திரேலியா டீம் நியூஸிலாந்து டீம்'அ தோக்கடிச்சு அவங்களோட 5வது கப்'அ ஜெயிச்சாங்க. இந்த டௌர்ன்மெண்ட் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ரெண்டு இடத்துலயும் பிரிச்சு நடத்துறதா ICC முடிவு பண்ணிட்டாங்க, ஆனா இறுதி போட்டிய எந்த டீம் ஃபைனல்ஸ்'கு வருதோ அந்த டீமுக்கு ஏத்த மைதானத்துல நடத்தலாம்'னு இருந்தாங்க. ஆனா இறுதி போட்டிக்கு ரெண்டு ஹோஸ்ட் டீம்களும் வந்தாங்க. அப்போ ICC மெல்போரன்'ல நடத்தலாம்'னு முடிவு பன்றாங்க (சீட்டிங் கேபாஸிட்டி அதிகம்னு) . அங்கேயே தெரிஞ்சு போச்சு, ஆஸ்திரேலியாவுக்கு தான் கப்'னு. ஏன்னா இந்த உலகக்கோப்பை'ல நியூஸிலாந்து அணி ஒரு போட்டி கூட ஆஸ்திரேலியா மைதானத்துல விளையாடல. ரெண்டு டீமும் அவ்ளோ பிரமாதமா விளையாடி ஃபைனல் வரைக்கும் வந்தாங்க. 

இன்னோனு ஆஸ்திரேலியா அணி செமிஃபைனல் போட்டியில இந்தியாவை தோக்கடிச்சது கூட கப் அடிச்சதுக்கு ஒரு முக்கியமான காரணம்னு சொல்லலாம். ஆனா உலகக்கோப்பை இறுதி போட்டியில உண்மையிலே அவ்வளவு சுவாரஸ்யம் இல்ல. ஒன் சைடெட் போட்டியா முடிஞ்சிடுச்சு. நியூஸிலாந்து டீம் முதல்'ல பேட்டிங் பண்ணி 183'கு ஆல் அவுட் ஆகிட்டாங்க. அந்த டௌர்ன்மெண்ட் 'ல சிறப்பா பௌலிங் பண்ண ஸ்டார்க், ஜான்சன் மற்றும் ஃபால்குனர் நியூஸிலாந்து அணியோட பேட்டிங்க  அக்குவேறா ஆணிவேரா காலி பண்ணிட்டாங்க. அதுக்கு அப்புறம் சேசிங் ரொம்ப எளிமையா அமைஞ்சுடுச்சு. ஆனா ஆஸ்திரேலியா இந்தியா இறுதி போட்டிக்கு வரதுக்கு முன்னாடி இங்கிலாந்து,  ஸ்ரீலங்கா, பாக்கிஸ்தான், இந்தியா போல ஸ்டராங்கான டீம்ஸ தோக்கடிச்சு வந்தாங்க. ஸ்டார்க் பௌலிங் மத்த அணிகளால ஒண்ணுமே பண்ண முடில. அது நால அவருக்கு தொடர் நாயகன் விருது கொடுத்தாங்க. அவனோட ஊர்ல அவன் தன் ராஜா !!!!       

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?