SRH vs RCB | திருப்புமுனை Segment

நேத்து, ஹைதராபாத்க்கும் பெங்களூருக்கும் இடையில, துபாய்'ல match நடந்துச்சு. இந்த வருஷம், IPLல நடக்குற 3வது match, இது தான். Toss win பண்ற ஹைதராபாத், முதல்ல bowling choose பன்றாங்க. சிறுவன் தேவ்தட் படிக்கல் மற்றும் ABDஓட சிறப்பான ஆடத்துனால, 163/5னு score அடிக்கிறாங்க. ஹைதராபாத் பொறுத்த வரைக்கும், Top Orderல பார்ஸ்டோ வெறியாட்டம் ஆடினார். ஆனா, அவரை தாண்டி வேற யாரும் பெருசா perform பண்ணல. Middle Orderல இருந்தது ரொம்பவும் அனுபவமில்லாத சிறுவர்கள் தான். இதுக்கு மேல அடியா இருக்குற மாறி, மிட்சேல் மார்ஷோட injury. எல்லாம் சேர்ந்து தோல்விய பரிசா கொடுத்துச்சு. 

இந்த match'அ பொறுத்த வரைக்கும், SRH தான் ஜெய்க்குற நெலமைல இருந்தாங்க. அப்புறம் ஏன் தோத்தாங்க ? அந்த திருப்புமுனை எங்க நடந்துச்சு ? நேத்து match மாதிரி ஒரு errorல திரும்புச்சா'னு கேட்டா, கெடயாது. ஒரு ballல திரும்புச்சா'னு கேட்டா அதுவும் கெடயாது. அப்பறோம் எப்போ ? ஒரே ஓவர் !!

16 வது ஓவர் யூஸ்வேந்திர சஹால் கிட்ட விராட் கோலி கொடுக்குறாரு. உள்ள இருந்தது, set batsman ஆன Bairstow. 8 wickets கையில வெச்சுட்டு, 5 ஓவர்ல 43 ரன்கள் அடிச்ச வெற்றிங்கிற கணக்கு. ஆனா, சஹால் இதுக்கு முன்னாடி வீசின 3 ஓவர்'ல வெறும் 12 ரன்கள் மட்டும் குடுத்துட்டு, 1 விக்கெட் வேற additionalஅ எடுத்தாரு. என்ன பண்ணுறாருனு பாக்கும்போது, முதல் பந்து dot ball. ரெண்டாவது ballல, correctஅ leg stump lineல pitch பண்ணி, fuller length'ல வீசுனாரு. Leg Break delivery. Deep Long Onல Slog பண்ண போனாரு. Complete Miss. Clean Bowled !! இதுக்கு அடுத்த ball, Vijay Shankar face பன்றாரு. இந்த முறை, அவருக்காக ஒரு Slip நிக்கவெச்சாரு Virat Kohli. Outside Off Stumpல, Just short of fuller lengthல Pitch பன்றாரு. சரி, leg break தான் போடுறாரு'னு, cover drive ஆட try பண்ணி, ரொம்பவே earlyஅ shot'கு போய்ட்டாரு. ஆனா, வந்தது googly !!. Batகும் Padகும் இடையில அவ்ளோ பெரிய gap !. அவரோட shotஅ மீறி stumpஅ அடிச்சுது !! Clean Bowled. அந்த ஒரு ஓவர்'ல வெறும் 6 ரன் தன் போச்சு. 

இந்த match'ஓட turning point'ஏ இந்த ஒரு ஓவர் மட்டும் தான். இதை தாண்டி ஏகப்பட்ட விஷயம் இருக்கு like Saini Death Over Yorkers, middle order பிரச்சனை'னு சொல்லிகிட்டே போலாம். ஆனா, அந்த ஒரு ஓவர்'ல இந்த ரெண்டு விக்கெட் எடுக்கலனா, ஹைதராபாத் ஜெயிச்சிருப்பாங்க !!!

    
   

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?