ஐபிஎல் திரில்லர் போட்டி - வரலாற்றில் இன்று

இன்று, சரியாக ஒரு ஆண்டிற்கு முன், எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மட்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள், விஷக்கப்பட்னம் மைதானத்தில் மோதியது. இரு அணிகளுக்கும் ஒரே குறிக்கோள் தான், இப்போட்டியினை ஜெயித்தால் மட்டுமே, கோப்பையினை கைப்பற்றுவதற்கு அடுத்த சுற்றினை அடைய முடியும். தோல்வி அடைபவர், வெளியில் செல்ல வேண்டியது தான். இதில் நல்ல சீரான ஆட்டத்தில் இருந்தது டெல்லி அணி தான். ஆனால், சன்ரைசர்ஸ் அணி, மாயங்களை நிகழ்த்துவதில் வள்ளல், மற்றும் நாக்-அவுட் போட்டிகளை பொறுத்த வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆட்டத்தில் எந்த அணி சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துகின்றதோ, அவ்வணியே வெற்றிபெற முடியும். 

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கப்டில் சிக்ஸர்களுடன், பவர்பிளே ஓவர்களில் சீறினார். சாஹா தனது விக்கெட்டை பவர்பிளே ஓவர்களில் இழந்தாலும், 54/1 என சிறப்பாக விளையாடினார்கள். ஆனால், பவர்பிளே ஓவர்களுக்கு பின், கப்டில் தனது விக்கெட்டை இழக்க, மனிஷ் பாண்டேவும், அணியின் தலைவர் கேன் வில்லியம்சனும் நிதானமாக விளையாடினார்கள், காரணம் பௌண்டரிகள் செல்வதற்கான வாய்ப்புகளை குறைக்கும் பொருட்டு, இடைவெளிகளை நன்கு அடைத்தவாறு வீரர்கள் நின்றார்கள். மிகவும் பொறுமையிழந்த நிலையில், தவறான ஷாட் ஒன்றை அடித்து மனிஷ் பாண்டே தனது விக்கெட்டை இழக்க, சிறிது நேரத்தில் கேன் வில்லியம்சனும் தனது விக்கெட்டை இழந்தார். 16 ஓவர்கள் முடிவில் 111/4 என்று ஹைதராவது அணியின் ஸ்கோர் இருந்தது. உள்ளிருந்து மொஹம்மத் நபி மற்றும் விஜய் ஷங்கர். இவர்கள் மற்றும் சொதப்பியிருந்தால், சிறிய ஸ்கோரினை மற்றுமே இலக்காக அமைக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், அன்றைக்கு அவ்வாறு நடக்கவில்லை. இருவருமே சிறிய, விரைவான கேமியோ இன்னிங்ஸ்களை விளையாட, ரன்கள் வர தொடங்கியது. விஜய் ஷங்கர் தனது விக்கெட்டை இழந்த பொழுது 18.3 ஓவர்களில் 147/5 என்று ஸ்கோர் இருந்தது. ஆனால், கடைசி ஓவர் பேட்டிங்கிற்க்கும் பந்துவீச்சிற்கும் ஓர் போராகவே இருந்தது. மூன்றாவது பந்தில் நோ பால் சிக்ஸர் பறக்க, நபி இருக்கின்றார் எப்படியும் 170 ரன்களை சேர்த்துவிடுவார் என்று நினைக்க, ஸ்கோர் 160/5 என்று இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு பந்துகளில், மூன்று விக்கெட்டுகள் விழுந்தது. நான் சரியாக தான் கூறுகின்றேன், அடுத்த இரண்டு பந்துகளில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது. நான்காவது பந்து, நபி கவர்ஸ் திசையில் சிக்ஸர் அடிக்க முயன்று, பேட்டின் ஆதி பகுதியில் பந்து பட்டதால், ஃபீல்டரின் கையில் அழகாக விழுந்தது. அடுத்த பந்தினை வீச, அது வைட் பந்தாக விழுந்தது. ஆனால், படபடப்பில் ரன் எடுக்க முயன்று, ஹூடா ரன் அவுட் ஆனார். மீண்டும் ஐந்தாவது பந்து வீசினார் கீமோ பால். இம்முறை ரஷீத் கான், சிக்ஸர் அடிக்க முயன்று, கீப்பரின் கைகளில் கேட்ச் விழ, அதை தவறின்றி புடித்தாள் ரிஷப் பண்ட். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க, 162/8 என்று நடுநிலையின் ஸ்கோராக முடிந்தது. 

இந்த ஸ்கோரை அடிக்க உள்ளிறங்கினர் டெல்லி அணியின் ஒப்பனர்கள். சன்ரைசர்ஸ் அணியினை விட மிகவும் அழகாக தொடங்கினார்கள். ப்ரித்வி ஷா முழுவீச்சில் அன்று இருந்தார். அணைத்து திசைகளிலும் பௌண்டரிகள் அடித்தார். முதல் 6 ஓவர்களில் விக்கெட்டின்றி 55 ரன்களை குவித்தார்கள். அதில், முக்கிய பங்கினை வகித்தது ப்ரித்வி ஷா. மறுபுறத்தில் ஷிகர் தவான் நிதாரணமாக ரன்களை அடிக்க, பவர்பிளே ஓவர்களில் முடிவிற்கு பின், தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும், 10 ஓவர்களில் முடிவில் 83/1 என்று வலுவாக இருந்தது. ப்ரித்வி ஷாவும் தனது அரை சதத்தினை பதிவு செய்தார். அவர் இன்னும் சிறு ஓவர்கள் நின்றால், மிகவும் எளிமையாக போட்டியை வென்று கொடுப்பார் என்று எதிராணியான ஹைதராபாதிற்கு நன்றாக தெரியும். போட்டியில் விறுவிறுப்பு இல்லையென்றால், அது எலிமினேட்டர் போட்டியாக இருக்கவே முடியாது. அனைவரும் எதிர்பார்த்த திருப்பத்தினை வழங்கினார் கலீல் அஹ்மத். 11வது ஓவரில், ப்ரித்வி ஷா மற்றும் டெல்லி அணியின் தலைவர் ஸ்ரேயா ஐயர், இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்ற, ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால், டெல்லி அணி சரியாக செய்த வேலை, ரன் ரேட்டை குறையாமல், தேவையான நேரத்தில் பௌண்டரிகளை அடித்தார்கள். குறிப்பாக ரிஷப் பண்ட் இதை சரியாக ஒவ்வொரு ஓவரும் செய்தார். அதன் காரணமாக 14 ஓவர்களில் முடிவில் 111/3 என்று ஸ்கோர் இருந்தது. அவர்கள் அடித்த 111 ரன்களை இவர்கள் இரண்டு ஓவர்கள் முன்னதாகவே அடித்து விட்டார்கள். மீண்டும் ஒரு  வழங்கினார், ஆனால் இம்முறை ரஷீத் கான். தூக்கியது காலின் மன்றோ மற்றும் அக்ஷர் படேல். அதன் காரணமாக ஆட்டத்தின் வேகம் குறைந்தது. ஆனால், உள்ளிருந்து ரிஷப் பண்ட். 17 ஓவர்களில் முடிவில் 129/5 என்று இருக்க, நடந்தது மீண்டும் ஓர் திருப்பம். பசில் தம்பியிடம் பந்தினை கொடுக்க, பண்ட் அந்த ஓவரை சரியாக குறிபார்த்து தாக்கினார். 2 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் சேர்த்து 22 ரன்கள் குவிக்கப்பட்டு, மீண்டும் ஆட்டத்தினுள் நுழைந்தது டெல்லி அணி. அடுத்த ஓவரில், புவனேஷ்வர் குமார் பந்து வீச, மீண்டும் ஓர் திருப்பமாக 2 விக்கெட்டுகளை குவித்தார், குறிப்பாக பண்டின் விக்கெட் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் தேவை 5 ரன்கள். கையில் இருந்தது 3 விக்கெட்டுகள். பந்தை கொடுக்கப்பட்ட நபர் - கலீல் அஹ்மத். உள்ளிருந்து - கீமோ பால் மற்றும் அமித் மிஷ்ரா. முதல் பந்து, வைட் !!. தேவை 4 ரன்கள் 6 பந்துகளில். மீண்டும் முதல் பந்து, இம்முறை மிஸ்ரா ஒரு ரன் எடுக்க, 3 ரன்கள் தேவை 5 பந்துகளில். இரண்டாவது பந்தினை வீச வருகிறார், களீல் அஹ்மத். இம்முறை ரன் ஏதும் இல்லை. பார்வையாளர்கள் மத்தியில் ஒரே படபடப்பு. அடுத்த பந்து கீமோ பால், 1 ரன் எடுக்க, 2 ரன்கள் தேவை 3 பந்துகளில். பார்வையாளர்களிடம் இருந்த படபடப்பை கூடும் பொருட்டு, இன்னொரு விக்கெட் விழுந்தது. அமித் மிஷ்ரா ஸ்ட்ரைக்கில், பந்தினை விட, ரன் எடுக்க முயன்று கீமோ பால் உள்ளே வர, மறுபுறத்தில் அமித் மிஷ்ராவை ரன் அவுட் அடிக்க முயன்றார்கள். ஆனால், இப்படியும் ஒருவரால் தனது விக்கெட்டை இழக்க முடியும் என்பது அன்று புரிந்தது. மாரு புறத்தை அடைய முயன்ற பொழுது, கலீல் அஹ்மத் பந்தினை ஸ்டம்ப்பை நோக்கி வீச, இவர் அதை மறைக்கும்பொருட்டு ரன் ஓட, ஃபீல்டரை தனது வேலையை செய்ய விடாமல் தடுத்ததால் காரணமாக அவரை அவுட் கொடுத்தார்கள். இப்போது 2 ரன்கள் தேவை 2 பந்துகளில், ஸ்ட்ரைக்கில் இருந்தது கீம்போ பால். எப்படியோ அடுத்த பந்தினை பௌண்டரிக்கு அடிக்க, வெற்றிபெற்றது டெல்லி அணி. 

ஆட்ட நாயகன் விருதை பெற்றது ரிஷப் பண்ட் - தனது 20 பந்து 49 ரன்கள் காரணமாக. சிறப்பாக ஆட்டத்தை மாற்றியது இவர் தான். ஆனால், இவ்வளவு திருப்புகளுடன் பெற்ற வெற்றியை கண்டிப்பாக டெல்லி அணி மறவாது.                

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt