சென்னை சேப்பாக்கத்தின் சிறப்பம்சம்
பார்வையாளர்களின் கவனத்திற்கு - இப்பதிவு, பேச்சு தமிழில் அமைந்திருக்கும். இடையிடையில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்.
சென்னை'னு ஒரு City உருவாகி, இன்னியோட 381 வருஷம் ஆச்சு. மதுரை, கோயம்புத்தூர் மாறி ஊர்ப்பத்தி தான், ரொம்ப பெருமையா பேசுவாங்க. "மதுர காரனுங்க குணத்துலையும், கோபத்துலயும் உசந்தவங்க"னு, பல திரைப்படங்கள்'ல வசனம் கேட்டிருப்போம். அதே சென்னை'ங்கிற பெயர கேட்டாலே, " ஊரா அது, மனுஷன் எப்படி தான் அங்க வாழறானோ"னு negative comments pass பண்ணிட்டு கெடப்பானுங்க. ஆனா, deep down அவங்களுக்கே தெரிஞ்ச விஷயம் என்னனா, "சென்னை'கு வந்ததுக்கு அப்பறோம் தான் அவங்க வாழ்க்கையே மாறிச்சுனு".
மக்கள் மத்தியிலேயே இந்த நெலமை'னா, cricket'ல யோசிச்சு பாருங்க. இந்தியாவுல கட்டின, second oldest cricket stadiumனா அது, சென்னை சேப்பாக்கம் stadium தான். இப்போ சில பிரெச்சனை காரணமா, நடக்க கூடாத விஷயம்'லாம் சென்னை சேப்பாக்கம் stadium'கு நடந்திருக்கு. ஆனாலும், இந்தியாவோட, one of the best stadiums'ல, இதுவும் ஒன்னு.
சென்னை Cricket Crowd'கு Most Knowledgeable Crowd'னு ஒரு பெயரே இருக்கு. அதுக்கு, சிறந்த example, நம்ம நாட்டுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும், பல வகையில தகராறு போயிட்டு இருக்குற விஷயம், நம்ம எல்லாருக்குமே தெரியும். கிரிக்கெட்லயும், ரெண்டு நாட்டுக்கும் ஆகாது. இந்தியாவுல வந்து பாக்கிஸ்தான் ஒரு match'அ ஜெயிச்சா, அன்னிக்கி நடக்குற கலவரமே, ரொம்ப ரணமா இருக்கும். கொல்கத்தா'ல, இந்த மாறி பல சம்பவங்கள் நடந்திருக்கு. ஆனா, அப்பேற்பட்ட பாகிஸ்தானையே, இந்தியா'கு against'அ match ஜெயிச்சப்போ, கலவரம் ஏதும் பண்ணாம, standing ovation குடுத்த ஒரே crowd, சென்னை crowd தான். 1999'ல, இந்தியாக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த test matchல கடைசி வரைக்கும் போராடி பாகிஸ்தான் ஜெய்ச்சப்போ இது நடந்துச்சு. அன்னிக்கி, சேபாக்கத்து'ல, பாகிஸ்தான் team, Lap of Honour ku போனாங்க. அதாவது, சந்தோஷத்துல, ground'அ சுத்தி வந்தாங்க.
இது இல்லாம, 1997ல, சயீத் அன்வர், ODI match'ல, 194 ரன்கள் அடிச்சு, record படைச்சதும் இங்க தான். அப்போவும், Standing Ovation குடுத்தாங்க. எதிரி நாட்டாவே இருந்தாலும், விளையாட்டு'னு வந்துட்டா அதுக்கு ஏத்த respect கொடுக்கணும்'னு உலகத்துக்கே இவங்க உணர்த்திருக்காங்க.
Test Cricket'ல இது வரைக்கும், Tied Test'அ result கெடைச்சதே, ரெண்டு முறை தான். அது'ல, ஒன்னு சேப்பாக்கத்து'ல நடந்துச்சு. Test cricket'ல, 17 triple centuries score பண்ணிருக்காங்க. அதுல, இந்தியாவோட பக்கத்துல மூணு தடவ நடந்திருக்கு. அந்த மூணு triple centuriesல, ரெண்டு முறை, சென்னை'ல அடிச்சாங்க.
ஏன், இப்போவும் west Indies, south africa மாறி teamsலாம், சேப்பாக்கத்து'ல ஒரு match ஆவது விளையாடனும்'னு ஆசை படறாங்க. பல வருஷம் கழிச்சு, 2016ம் வருஷத்துல, test cricket'ல 700 ரன்களுக்கும் மேல அடிச்சது இங்க தான். சென்னை'ல matches ஜெயிக்கணும்'ன technically ரொம்ப strong'ஆ ஒரு team இருக்க வேண்டும்.
அவ்ளோ ஏன், 2019ல, தோனி அவர்கள் விளையாடாத matches'ல. ரிஷாப் பண்ட், wicket keeping பண்ணும்போது, ஏதாது சின்ன தவறு செஞ்சாருனா, இந்தியாவுல இருக்குற எல்லா groundலயும் தோனி தோனி னு கத்துவாங்க. யாரும் பண்ட் பண்ட்'னு கரகோஷம் குடுத்தது இல்ல. ஆனா, தோணியோட இன்னொரு கோட்டையான சேப்பாக்கத்துல, 2019ம் வருஷம், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி நடக்கும். அப்போ ரிஷாப் பண்ட், 70 ரன்கள் அடிப்பாரு. அன்னிக்கு, மொத்த crowdஉம் பண்ட் பண்ட்' னு கத்துச்சு. sports'அ இதுக்கும் மேல, மரியாதை கொடுக்க முடியாது.
தோனி'ங்கிற ஒரு ஆளுமை, Chennai Super Kings'ங்கிற ஒரு team'கு வரலைனா, இந்த ஊரோட பெருமை இங்கேயே தங்கியிருக்கும்.
இப்போ வேணும்னா, I,J,K Stands Issue காரணத்துனால பல matches நடக்காம போயிருக்கு. இப்டி matches'லாம், cancel ஆகுறதுனால, pitch'அயும் maintain பண்ணுறதில்ல. அது காரணமா, T20 matches'ல test wicket அமையுது. ஆனா, இந்த issue, கொரோனா'கு கொஞ்ச நாள் முன்னாடி தான், சரி செஞ்சாங்க.
எனக்கு இப்போ இருக்குறது, ஒரே ஒரு ஆசை தான். Chepauk'ல பழைய நெலமை வரணும். ICC Events நடக்கணும். முக்கியமா, Finals இங்க நடக்கணும். அத தாண்டி, சென்னையை சேர்ந்த ஒரு player, இந்தியாவையே கலக்கணும்.
இவ்ளோ நடந்தும், என்னை பொறுத்த வரைக்கும், Chepauk தான் எனக்கு ரொம்ப பிடிச்ச ground. அத தாண்டி,"நான் மதராஸி தான், சென்னை'யா சேர்ந்தவன்தான்'னு" ரொம்பவும் கர்வமா சொல்லுவேன். வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!
"நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும், உன்ன சொந்தம் ஆக்கும் டா, அதுதான் இந்த ஊருடா, இந்த ஊருடா !!"
Comments
Post a Comment