வருகிறது இந்தியா - இங்கிலாந்து தொடர் !

 இந்தியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான சௌரவ் கங்குலி, தற்போது ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், 2021ம் ஆண்டு, பிப்ரவரி மாத காலகட்டத்தில், இந்தியாவும் இங்கிலாந்தும், ஓர் கிரிக்கெட் மோதிக்கொள்ளும். அத்தொடர், கொரோனா பரவலுக்கு பின், முதன் முறையாக, இந்திய நாடு தொகுத்து வழங்கும் தொடராக அமையும். 

கொரோனா சர்வதேச பரவலை முன்னிட்டு, இந்திய'வில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர், பாதிப்படைந்துள்ளனர். உலகவரிசையில், 4ம் இடத்தை பிடித்துள்ளது. ஆதலால், இந்திய நாட்டில், கிரிக்கெட் போட்டிகளை, தொகுத்து வழங்குவதற்கு, பலர் அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால், நியூஸிலாந்து அணிக்கு எதிரே, இவ்வாண்டு, பிப்ரவரி மாத காலத்தில், விளையாடப்பட்ட தொடரே, இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி, விளையாடிய இறுதி தொடராகும். அதற்கு பின், பல கிரிக்கெட் அணிகள், தங்களின் ஆட்டத்தை மீண்டும் துவங்கினாலும், இந்திய கிரிக்கெட் மட்டுமே துவக்கம் பெறவில்லை. இவ்வாறு உள்ள நிலையில், அடுத்த மாதம், ஐக்கிய கிரிக்கெட் நாடுகளில், ஐபிஎல் தொடர், துவக்கம் பெறுகின்றது. அதனையடுத்து, இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா நாட்டிற்கு, பயணம் மேற்கொள்வர். ஆனாலும், இந்திய மண்ணில், கிரிக்கெட் போட்டிகள் துவங்கவில்லையே என பலர் எண்ணிக்கொண்டிருந்த தருணத்தில், 2021ம் ஆண்டு, பிப்ரவரி மாத காலத்தில், இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வர் என்கிற இன்ப செய்தி, நம்மை வந்தடைந்தது. 

இதனையொட்டி, சௌரவ் கங்குலி அவர்கள், கூறியது யாதெனில், "இங்கிலாந்து இந்தியா தொடர் முடிவடைந்த பின், திட்டமிட்டப்படி 2021ம் ஆண்டின் ஐபிஎல் தொடர், ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்", எனவும் அறிக்கையிட்டார். 

தற்போது பலரிடம் உள்ள ஓர் கேள்வி, " அதற்குள், அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்புமா ? " என்பது தான். இயல்பு நிலைக்கு திரும்பும் என, நேர்மறையாக நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

இவ்வாண்டின் ஐபிஎல் தொடரின் அட்டவணையை பொறுத்தவரை, கொரோனா நோய்க்கு முன், வெளியிடப்பட்ட அட்டவணையை சற்று மாற்றியமைக்கப்படும், என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, அனைத்து அணிகளும், ஐக்கிய நாடுகளை வந்தடைந்தனர். இங்கு, 7 நாட்கள் தனிமையை மேற்கொள்வர். அதில், முதல், மூன்று மற்றும் ஆறாம் நாட்களில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் தேர்ச்சி பெறுவோர் பயிற்சியை மேற்கொள்வர். 

    

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?