ஐசிசி'யின் பிற்கால திட்டங்கள்

50 நாளாய் நடைபெற்ற ஆலோசனைகளுக்குப் பிறகு, 20 ஓவர் கிரிக்கெட் உலககோப்பையின் நிலையைக் குறித்து, ஐசிசி ஓர் முடிவுக்கு வந்தது. அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், "இவ்வாண்டில் நடக்கவிருப்ப 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை நாங்கள் தள்ளிவைக்கின்றோம். இதனை, 2021ம் ஆண்டு அல்லது 2022ம் ஆண்டில் நடவிருப்பதாக தெரிவித்துக்கொள்கிறோம்" என குறிப்பிட்டனர்.


நாம் அனைவரும் அறிந்திருப்போம், கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கத்தைப்பற்றி. உலகினையே உலுக்கிவரும் கொரோனா'வின் காரணத்தினால், பல நிகழ்ச்சிகள் தடைபட்டு உள்ளது. இவ்வாறு உள்ள நிலையில், இவ்வாண்டின் இறுதியில் அட்டவணைக்கப்பட்ட 20 ஓவர் உலகக்கோப்பை தொடர், நடைபெறுமா இல்லையா என்கிற கேள்வி பல ரசிகர்கள் மனதில் இருந்தது. இதற்கு ஓர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்கிற நோக்கில், பல ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டு, இறுதியில், இதற்கு தீர்ப்பை வழங்கியுள்ளது, ஐசிசி.

பல நாடுகளிலிருந்து பயணம் மேற்கொள்வோர், அவரவர் நாடுகளில் உள்ள விதிகளை மீறி பயணம் மேற்கொள்ளும்வாறு அமையும். மற்றும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கொரோனா'வின் எண்ணிக்கை மாறுபட்டு திகழ, இதனை நடைபெற முயற்சித்தல் என்பது, தானே தனக்கு விஷம் வைத்து குடிப்பதற்கு சமம். ஆதலால், இதனை, பின் வரும் ஆண்டுகளுக்கு தள்ளிவைத்துள்ளார்கள். 

இதனையடுத்து பல தகவல்கள் வெளிவந்துள்ளது.அதில் முதல் தகவல், 
"2021ம் ஆண்டில் நடக்கவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை, நாங்கள் ஃபிப்ரவரி மாதத்திலிருந்து அக்டோபர் - நவம்பர் மாதங்களுக்கு தள்ளிவைக்கிறோம். அதன், இறுதி போட்டி, நவம்பர் 14ம் தேதி அன்று நடைபெறும்". 

இரண்டாம் தகவல், "2022ம் ஆண்டில் நடக்கவுள்ள, 20 ஓவர் உலகக்கோப்பை ( 2020ம் ஆண்டில் நடவிருந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடர்) தொடரை நாங்கள், அக்டோபர் - நவம்பர் மாதங்களுக்கு அட்டவணை செய்கிறோம். அதன் இறுதி போட்டி, நவம்பர் 13ம் தேதி அன்று நடைபெறும்"

மூன்றாம் தகவல் "2023ம் ஆண்டில், இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரை, நாங்கள் பிப்ரவரி மாதங்களிலிருந்து அக்டோபர் - நவம்பர் மாதங்களுக்கு தள்ளிவைக்கின்றோம். இதன் இறுதிப்போட்டி, நவம்பர் 26ம் தேதி அன்று நடைபெறும்" என்றே செய்திகள் வெளிவந்தது.

இதில், ரசிகர்கள் மிகவும் அதிர்ந்த செய்து எதுவென்றால், நிச்சயமாய் அது 2023ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரை, அக்டோபர் மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்ட செய்தியே ஆகும். காரணம், அந்த மாதங்களில், மழைக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். 2019ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில், நடைபெறவிருந்த பல போட்டிகள், மழையின் காரணங்களினால் தடைபட, பல ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இப்போதும் அதற்கான வாய்ப்புகள் மிகுந்து காணப்படுகின்றது, என ரசிகர்கள் கண்டுகொள்ள, ஐசிசி'யின் தரப்பிலிருந்து நான் சிந்தித்தால், அதன் கோணம் வேறு. கொரோனா, எனும் ஓர் நோய், முழுவற்றையும் நாசம் செய்துள்ளது. அதனை சரிசெய்துக்கொள்ள, அவர்கள் நேரம் கண்டு, செயல்பட வேண்டிய நிலையிற்கு தள்ளப்படுகின்றார்கள். இதனை மட்டுமல்லாது, 2022ம் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை நடத்தி முடித்தபின், வெறும் 3 மாத காலத்திற்குள், அனைத்து அணிகளாலும் உலகக்கோப்பை தொடருக்கு பயிற்சி மேற்கொண்டு, முழு தயார் நிலைக்கு திரும்புவார்கள் என்றால் அது சந்தேகம் தான். அதனால், இதனை தள்ளிவைத்து ஒரு ஆண்டு காலத்தில், நடைபெரும்வாறு அட்டவணை அமைத்துள்ளார்கள். இதனையொட்டி, மற்றோர் செய்தி, ஒரு ஐசிசி'யின் தொடரை நடத்தி முடித்தபின் வெறும் 3 மாத காலத்திற்குள், இன்னோர் ஐசிசி தொடரை நடைபெறவைப்பது என்பது சாத்தியமற்றது. காரணம், அதில் உள்ள பல செயல்பாடுகள், மற்றும் சிக்கல்கள். மற்றும், குவாலிஃபையர் போட்டிகளை நடத்துவதற்கு, இவ்வாறு அமைக்கப்பட்ட இடைவெளி, நன்கு உதவும். ஆதலால், பல நாட்களுக்கு பிறகு, கிரிக்கெட்டை பற்றியே செய்திகள் உடனுக்குடன் அறிவதனைப்பற்றி சிந்தித்து பெருமிதம்கொள்ள வேண்டும். இவ்வாறு உள்ள நிலையில், கிரிக்கெட்டை நடைபெறவைப்பது என்பதே மிகவும் கடின செயலாகும். ஆனால், ரசிகர்களுக்கென செய்தார்கள்.

2021ம் ஆண்டின் மகளிர் உலகக்கோப்பை தொடரை, அவர்கள் ஏற்பாடு செய்ய பல இன்னல்களை மேற்கொள்கின்றனர். ஆனால், அத்தொடர் நடைபெறுவதன் வாய்ப்புகள் மிகவும் அதிகம். காரணம், அதனை தொகுப்பிக்கும் நாடு, காரோண பாதிப்பு மிகவும் குறைந்த நிலையில் உள்ள நியூஸிலாந்து ஆகும். ஆனால், 2021ம் ஆண்டின், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை நடைபெறவைப்பது என்பது சற்று சிக்கலுடைய நிகழ்வாகும்.

இப்போது பல ரசிகர்கள் இவ்வாறு வெளிவந்த செய்திகளை கொண்டாடி வருகின்றனர். காரணம், 2020ம் ஆண்டின் 20 ஓவர் உலகட்ப்பை தள்ளிச்சென்றால், ஐபிஎல் தொடரை நடத்துவற்கு ஏதுவாய் அமையும். இதுவே இந்திய கிரிக்கெட் அணியின் வாரியம் தெரிவித்த செய்தி. இப்போது, தள்ளிச்சென்றது. துபாய் நாடுகளிலும், ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்திய அரசாங்கம், பயணம் மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்கினால் மட்டுமே போதும். ஆதலால், ஐபிஎல் தொடரை நடத்துவதில், பல வாய்ப்புகள் உள்ளது. 

இறுதியில் நான் கூறும் ஓர் பழமொழி " நடப்பவை அனைத்தும் நன்மைக்கே!".    

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt