NZ vs PAK - முதல் Test, நான்காம் நாள் Review

நேத்து, எப்படியோ பாக்கிஸ்தான் team போராடி, follow on avoid பண்ணிட்டாங்க. ஆனாலும், drawங்கிற ஒரு விஷயம் ரொம்பவே கஷ்டமா அமைஞ்சிருக்கு. அதுக்கு ஒரு முக்கிய காரணம், NZ எடுத்த lead. அந்த ஒரு lead காரணமா, maybe New Zealand ஜெயிக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதையும் மீறி, ஒரு வேளை பாக்கிஸ்தான் draw'ஆவது பண்ணிட்டாங்கன்னா, இருக்குறதுலயே ரொம்ப பெரிய விஷயமா இருக்கும்.

இன்னிக்கி, நியூஸிலாந்து திரும்ப அவங்களோட second inningsகு உள்ள வந்து bat பன்றாங்க. ஆரம்பத்துல, முஹம்மத் அப்பாஸ் அசத்தலா bowl பண்ணாரு. Pitchல uneven bounce இருந்துட்டு இருந்துச்சு. அது காரணமா, அவசரப்பட்டு batடை எங்கயும் விட்டுட கூடாதுன்னு ரொம்பவே கண்ணியமா இருந்தாங்க. 

ஒரு எடத்துல கூட, நியூஸிலாந்துக்கு விட்டு கொடுக்க கூடாதுனு, பாகிஸ்தானும் போராடுறாங்க. ஆனா, எழுச்சி நியூஸிலாந்துக்கு தான். கொஞ்சம் நேரம் நினதுக்கு அப்புறம், எங்க எப்படி bounce ஆகுதுங்கிற விஷயத்தை புரிஞ்சிகிட்டு, விளையாடுறாங்க. 

இடையில கொஞ்சம் அவசரம் இருந்தாலும், 180/5னு ஒரு score அடிச்சு declare பன்றாங்க. பாகிஸ்தானுக்கு second innings target, 373 runs. முன்னாடி இருந்த காலத்துல, அந்த score chase பண்ணிடலாம். ஆனா, இப்போ அது பெரிய score ஆகியிடுச்சு. அதை தாண்டி, wicketல இருக்குற uneven bounce.

இந்த முறை, நியூஸிலாந்து bowlers swing பன்றாங்க. Southeeக்கு test careerல 300 wickets mark'அ reach பண்ணுறாரு.பாக்கிஸ்தான் openers, ரெண்டு பேருமே pavilionனுக்கு போயிட்டாங்க. ஆனா, அதுக்கு அடுத்து, பாக்கிஸ்தான் teamமோட former captain'ஆன Azhar Ali மற்றும் Fawad Alam சேர்ந்து fight பன்றாங்க.

Pitch'உம் கொஞ்சம் flat ஆக ஆரம்பிச்சுது. அது காரணமா, நாளைக்கி ஒரு நல்ல chase இருக்கும்ன்னு எதிர்பார்க்கலாம். இன்னிக்கி நாள் முடியும்போது, பாக்கிஸ்தான் 71/3னு முடிச்சாங்க. பாப்போம், யாரு பக்கம் இந்த முதல் test மேட்ச் போகப்போவுதுன்னு. 


     

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?