பார்த்திவ் படேல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் !!

 90க்களில் பிறந்த குழந்தைகளுக்கும், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இவரை நன்கு தெரிந்திருக்கும். 17 வயது காலகட்டத்தில், இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட Wicket Keeper Batsman தான், பார்த்திவ் படேல். டெண்டுல்கர், பியூஷ் சாவ்லா, லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் வரிசையில், மிகவும் சிறு வயதில் களமிறங்கும் கிரிக்கெட் வீரரே இவர் ஆவார். 

டீனேஜ் பருவம் முடிவதற்குள்ளேயே களமிறங்கிய பெருமை இருந்தாலும், மறுபுறத்தில் உள்ள Wicket Keeperகளின் ஆதிக்கம், இவரை இரண்டாம் அளந்து மூன்றாம் கட்ட தேர்வாகவே வைத்தது. இந்த நிலை, தான் விளையாடிய 18 ஆண்டு கால, சர்வதேச கிரிக்கெட் முழுவதும் மாறாது இருந்தது. 2002ம் ஆண்டில், முதல் முறையாக, காயப்பட்ட அஜய் ராத்ராவுக்கு மாற்றாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக, Trent Bridge மைதானத்தில் debut செய்கிறார். 

அங்கிருந்து, 2003ம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் சார்பாக இவரை தேர்வு செய்தாலும், Rahul Dravid அவர்கள் மூத்தவர் என்பதால், அவருக்கே முதல் மரியாதை வழங்கப்பட்டு, இவருக்கு வாய்ப்புகளும் பெரிதாக வழங்கப்படவில்லை. ஆனால், இவரோ கிடைக்கும் வாய்ப்புகளில், தன்னை தானே நிரூபித்திருக்க வேண்டும். அதை சரியாக செய்யாத காரணத்தினால், தினேஷ் கார்த்திக் மற்றும் தோனி அவர்கள், இவரை பின்தள்ளி ஜொலித்தார்கள். 

2004-06 வரையில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில், இவர் வெறும் 18 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அவற்றுள், கூறும் அளவிற்கு எண்ணிக்கை ஏதும் இல்லை. அத்தருணத்தில் தான் தோனி எனும் சம்பவக்காரன் களமிறங்கி, ஜாம்பவான் ஆட்டங்களை நிகழ்த்தி, தனது இடத்தை நிலையாகிக்கொண்டார். 

தோனி அவர்கள் சிறப்பித்த காலகட்டத்தில், எப்போதெல்லாம் தோனி அவர்களுக்கு காயம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இவரை அடுத்த தேர்வாக களமிறக்குவர். இதையும் மீறியவாறு, 2010ம் ஆண்டில் மீண்டும் களமிறங்குகிறார். அங்கிருந்து அடுத்த 2 ஆண்டுகளுக்கு, ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓர் துவக்க வீரராக பணியாற்றினார். இருப்பினும், இவரின் ஆட்டம் போதுமானதாக அமையவில்லை. 

2016ம் ஆண்டில், சாஹா அவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு மாற்றாக இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறார். 8 ஆண்டுகள் கழித்து இவர் விளையாடும் டெஸ்ட் தொடர் ஆகும். இதில், 2 அரை சதங்களை குவிக்கின்றார். அதன் காரணத்தினால், 2 ஆண்டுகளுக்கு Backup Wicket Keeperராக நியமிக்கப்படுகிறார். இருப்பினும், போட்டி அதிகமானதால், 2018ம் ஆண்டிற்கு பிறகு எவ்வித சர்வதேச கிரிக்கெட் அணியின் உள்ளே இடம் பெறவில்லை. 

IPL கிரிக்கெட்டில், ஓர் முக்கிய பங்காக, 13 ஆண்டுகளுக்கு பணியாற்றி வந்தார். இந்த பயணத்தில், இவர் 6 IPL அணிகளுக்காக விளையாடி அனைத்திலும் தனது சிறப்பு முத்திரையை பதித்து வந்தார். இருப்பினும், இவ்வாண்டில் நடைபெற்ற IPL தொடரில், ஒரு போட்டியிலும் இடம்பெறவில்லை. 

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில், 10,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். ஆயினும், ஒரு வீரர் உள்நாட்டு தரத்தில் அல்லது உலக கிரிக்கெட் தரத்துக்கு குறுகிய காலத்திற்குள், தன்னை தானே மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த ஒரு மாற்றம் தான், சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும், லோக்கல் கிரிக்கெட் வீரர்களுக்கும் உண்டான வேறுபாட்டினை வெளிக்காட்டும்.

38 ஒரு நாள் போட்டிகளில், இவர் 736 ரன்களை குவித்து, வெறும் 39 dismissalகளை மட்டுமே நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் களமிறங்கி, அதில் 934 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச தரத்தில் விளையாடும் ஒரு வீரருக்கு, இந்த எண்ணிக்கை போதாத ஒன்றாகும். 

ஆயினும், தன்னுடைய ஆட்டம், நன்றாக இருப்பினும், விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

நன்றி பார்த்திவ் !

    

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood