தோனி எனும் "சம்பவக்காரன்"

இன்று, தோனி எனும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானின் பிறந்தநாளை முன்னிட்டு, ஓர் சிறப்பு பதிவு. 1981ம் ஆண்டில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஞ்சி எனும் நகரில் பிறக்கின்றார். இவரின் வாழ்க்கை நிகழ்வுகளை பற்றி தோனியின் சுயசரித திரைப்படத்தை பார்த்த அனைவரும் அறிந்திருப்பீர். ஆனால், நான் கூறவுள்ளது தோனி எனும் சம்பவகாரனின் வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள், களத்தில் நிகழ்த்திய ராஜதந்திரங்கள், அவர்மீது கூறப்படும் பழிகளும் அதற்கு எனது பதில்களும், தான் களத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகள், அதனை கையாண்ட யுக்திகள், மற்றும் தனது குணாதிசயங்கள் என இவ்வாறு பலர் அறியாத பக்கங்கள் பற்றியே.

தோனி கிரிக்கெட் வாழ்விற்குள் நுழைவதற்கு முன், தான் ரயில் நிலையத்தில் பணிபுரிந்தார். ஆனால், அதனை விட்டுவிட்டு, தனது கனவை துரத்த மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்கினார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவரால், பணிபுரிகின்ற ஓர் வேலையிலிருந்து பிற வேலையிற்கு எளிதில் மாற்றிக்கொள்ள முடியாது. அதற்கு ஓர் மனவலிமை மிகவும் அவசியம். அதிலும், குறிப்பாக கிரிக்கெட் எனும் இந்திய அளவில் போற்றப்படக்கூடிய ஓர் விளையாட்டுத்துறையினை குறிவைத்து கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு களமிறங்குவது, அதிலும் தனது மாநிலத்தை சேர்ந்த முதல் கிரிக்கெட் வீரராக களமிறங்குவது என்பது மிக மிக கடினச்செயல் ஆகும். கிரிக்கெட் எனும் துறையில் தனது கால் தடத்தை பதிப்பதற்கு முன், எதிர்கொண்ட முதல் நெருக்கடி.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், கங்குலியின் தலைமையில் களமிறக்கப்படுகின்றார். முதல் நான்கு போட்டிகளில், தான் நினைத்தவாறு ரன்களை குவிக்காமல் களத்தைவிட்டு வெளியேற, கங்குலியை தவிர்த்து, பலரை இவரை அணியை விட்டு வெளியேற்றம் செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர். கங்குலி, நம்பிக்கை வைத்து, தான் விளையாடும் மூன்றாம் இடத்தை விட்டுக்கொடுத்தார். நடைமுறை கிரிக்கெட்டில், ரிஷப் பண்ட் அவர்கள், ஒரு போட்டியில் சொற்ப ரன்களில் வெளியேறினால், அவரை அணியை விட்டு நீக்குமாறு பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் இட, அப்போது உள்ள காலகட்டத்தில், ஜாம்பவான்களுடன் இனைந்து தன்னை நிரூபிக்க வேண்டும் என்கிற கட்டாயமும், மற்றும் அணியின் தலைவர் தன்மீது இவ்வாறு நம்பிக்கை வைத்து தனது இடத்தை விட்டுக்கொடுத்திருக்கின்றார்,  அவரின் நம்பிக்கையையும் மரியாதையையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என நெருக்கடிகள் இருந்தது. இதனையொட்டி, அணியில் உள்ள தேர்வாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்றால், நினைத்ததை விடவும் அசாத்திய சம்பத்தை நிகழ்த்த வேண்டும். மூவற்றையும் செய்தார். இதுவே தனது முதல் சம்பவம் என்றும் கூறலாம், முதல் கட்ட தடயங்களை கடந்து வந்தார் எனவும் கூறலாம். 148 ரன்களை குவித்தார். விக்கெட் கீப்பர் பட்டியலில் அதிக ரன்களை குவித்த வீரராய் மாறுகின்றார்.

அதே ஆண்டில், 183 ரன்கள் குவித்து, தனது சாதனையை தானே முறியடிக்கின்றார். இப்போது என்னை அணியை விட்டு வெளியேற்ற ஏதேனும் ஓர் காரணம் இருந்தால் கூறுங்கள் என, தனது ஆட்டங்களால் கூறினார். அதற்கு பின், பல வெற்றிகளில் இவர் முக்கிய பங்கினை வகிக்கின்றார். பலர் கூறுவர், முதல் 4 போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என. ஆனால், ஒருநாள் கிரிக்கெட்டில், ஐசிசி'யின் தரப்பில் முதல் இடத்தை பிடிக்க இவர் ரிக்கி பாண்டிங்கை கடந்து வெறும் 42 போட்டிகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். மிகவும் குறைந்த போட்டிகள். இன்றும், இச்சாதனையை எவரும் முறியடிக்கவில்லை.

2007ம் ஆண்டின் உலகக்கோப்பையில், முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேற்றம் அடைந்து, இந்திய நாட்டில் ஓர் தேச குற்றவாளிகளை போன்று நமது மக்கள் குடுத்த மரியாதையை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர். அதில், தோனியின் பாதிப்பு மிகவும் அதிகமாய் இருந்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எனும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஓர் அரசியல் கட்சி, அவரின் வீட்டை அடித்து நாசமாக்கினார். தனது, ஆட்டமும் அப்போது மொத்தமாய் இருக்கும் நேரத்தில், தன்னை மீண்டும் நிரூபித்துக்கொள்ள வேண்டிய நிபந்தனை. அதையும் ஏற்றுக்கொண்டு செய்தார். அவ்வாண்டில், மீண்டும் ஓர் திருப்பம், ராகுல் டிராவிட், தலைமை பொறுப்பிலிருந்து விலக, டெண்டுல்கர் தோனியை கைகாட்டினார். வெறும் 2 ஆண்டுகள், கிரிக்கெட்டில் அனுபவம் உள்ள வீரரிடம், தலைமை பொறுப்பினை வழங்கினர். அதில் அவர் எதிர்கொள்ள உள்ள முதல் சவால், 20 ஓவர் உலகக்கோப்பை. இவ்வாறு உள்ள நிலையினை வெளியிலிருந்து காணும்போது, சிறிதாக இருந்தாலும், அங்கு இருக்கும் மன அழுத்தம் ஏராளம். ஆனால், வேறு வழியில்லை. அதனை கடக்க வேண்டும். கடந்தார், மிகவும் சாமர்தியதுடன். 20 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றினார். அனுபவமில்லாத இளம் அணியை வைத்து கோப்பையை கைப்பற்றினார். இன்றும், அவரின் சம்பவங்களில் அதுவும் ஒன்று.

அதற்கு பின் 2011ம் ஆண்டின் உலகக்கோப்பை தன எதிர்கொண்ட நெருக்கடி. முதலில், 2011ம் ஆண்டின் உலகக்கோப்பை இறுதி போட்டி வரை, தோனி ஒரு அரை சதத்தை கூட பதிவிடவில்லை, என பல மக்கள் குரலெழுப்பினர். ஆனால், அதனை இறுதி போட்டியில் அவர் கூறும் வாய்களுக்கு ஓர் இரும்பு பூட்டினை பூட்டி அடைத்தார். 2007ம் ஆண்டின் மறக்கும் நினைவுகளுக்கு பழிதீர்க்குமாறு 2011ம் ஆண்டின் உலகக்கோப்பையை வென்றுகொடுத்தார். ஆனால், இப்போது அவர் மீது எழுந்த குற்றச்சாட்டு, கங்குலி அவர்கள் உருவாக்கிய அணியை வைத்து கோப்பையை கைபெற்றார் என்று. மற்றும், இறுதி போட்டியில் தான் யுவராஜ் சிங்கிற்கு முன் களமிறங்கி பெயர் வாங்கியுள்ளார் என சொர்கள் வெளிவந்தது.

அதனை முறியடிக்கும் வாறு, 2013ம் ஆண்டில், தான் உருவாக்கிய இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் கோப்பையை ஈட்டினார். மூன்று ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றிய முதல் தலைவன் மற்றும் ஒரே தலைவன் என்கிற பெயரும் கிடைக்கின்றது. ஆனால், இப்போது அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அனுபவம் உள்ள வீரர்களை வெளியேற்றிவிட்டார் என்று. அதற்கும் என்னிடம் பதில் உள்ளது.

யுவராஜ் அவர்கள், புற்றுநோயினால் வயப்பட்டு ஓராண்டிற்கு கிரிக்கெட்டில் களமிறங்கவில்லை எனும் செய்தியை அனைவரும் அறிந்திருப்பீர். ஆனால், அக்காலம் 2011ம் ஆண்டின் இடையிலிருந்து, 2012ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் வரை இருந்தது. இருப்பினும், குணமாகிவிட்டார் என்கிற செய்தியை அறிந்தவுடன், 20 ஓவர் உலகக்கோப்பை எனும் மிகப்பெரிய தொடரில் அவரை அணியினுள் சேர்த்தார். அங்கிருந்து பல வாய்ப்புகள் யுவராஜ் சிங்கிற்கு வழங்கப்பட்டது. 2013ம் ஆண்டின் முழுவதிலும், யுவராஜ் சிங்கை ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் களமிறக்கி பரிசோதனை செய்தார். ஆனால், அவரின் ஆட்டம் சரியாக அமையவில்லை. இருப்பினும் 2014ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை அணியினுள் களமிறக்கப்பட்டார். ஆனால், இறுதிப்போட்டியில் அவர் விளையாடிய ஆட்டத்தின் காரணத்தினால், வேறு வழியின்றி அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் 2015ம் ஆண்டின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் மிகவும் அற்புதமான ஆட்டங்களை வெளியிட்ட காரணத்தினால், மீண்டும் 2016ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை அணியினுள் சேர்க்க, இம்முறை காயத்தினால் அணியை விட்டு வெளியேறினார். 

யுவராஜ் சிங்க் மட்டுமென்றால், நிச்சயம் இல்லை. ஹர்பஜன் சிங் அவர்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு 2 ஆண்டு கால தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடைக்காலம் முடிவடைந்த பின் 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அவரை அணியினுள் களமிறக்கப்பட்டு பரிசோதனை செய்தார். ஆஷிஷ் நெஹ்ரா, 5 ஆண்டு கால, சர்வதேச கிரிக்கெட்டில் பங்குபெறாமல், 37 வயது காலத்தில் மீண்டும் 2016ம் ஆண்டில் அணியில் சேர்த்தார். அங்கிருந்து இரு ஆண்டுகளுக்கு சர்வதேச அணியினுள் விளையாடினார். 

கோலி அவர்கள், தலைமை பொறுப்பை ஏற்பதற்கு, மிகவும் சரியான பாதையை அமைத்துக்கொடுத்து அதற்கு ஏற்ப அணியையும் வழங்கிக்கொடுத்தார். பின்னர், 2018ம் ஆண்டில் ஓர் அரை சதமும் அடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருந்தது, அதற்காக அவரை மேற்கு இந்திய தொடர் மற்றும் ஆஸ்திரேலியா தொடரிலிருந்து நீக்க, மீண்டும் பயிற்சி செய்தார். தந்து பேட்டிங்கில் சில மாற்றங்களை கொண்டுவந்தார். மீண்டும் ஆஸ்திரேலியா அணியின் ஒரு நாள் தொடரில் களமிறக்கப்பட்டார். இம்முறை மூன்று போட்டிகளில் மூன்று அரை சதங்கள் தொடர்ச்சியாக. தொடரின் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஓர் அரைசதமும் இல்லை, என்கிற பெயர் 10 ஆண்டுகாலங்களுக்கு இருந்தது. 2017ம் ஆண்டு, இவையனைத்திற்கும் முற்றுப்புள்ளியை வைத்தார். இப்போது சர்வதேச 20 0வர கிரிக்கெட்டில் ஓர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்று தரவில்லை என்கிற பெயரும் இருக்கு. இப்போது அவர் இன்னும் ஓர் ஆண்டுகாலம் விளையாடினால், அதையும் பெறுவார்.

அவரின் மீது உள்ள மற்ற ஓர் குற்றச்சாட்டு, வெளிகண்டங்களில் ஓர் சாதமும் பதிக்கவில்லை என்று. கிரிக்கெட்டை பொறுத்தவரை, சதங்களை தாண்டி பல விஷயங்கள் உள்ளது. சதங்களை மற்றும் வைத்து கிரிக்கெட்டை பார்த்தால், டெண்டுல்கர், ஜெயசூர்யா, சங்கக்காரா போன்ற வீரர்களை கடந்து வேறு எவருடைய ஆட்டத்தையும் நாம் பார்க்க இயலாது. அது மட்டுமின்றி பல முறை, வெளிகண்டங்களில் தனது அணியை பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தார். அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு, 2014ம் ஆண்டில், இங்கிலாந்து அணியிற்கு எதிராக விளையாடவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், 4ம் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8/4 என்கிற ஸ்கோரில் தத்தளித்துக்கொண்டு இருந்தது.  அங்கிருந்து, தோனி தனியொருவராக 71 ரன்களை குவிப்பார். 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்திருப்பர். ஆனால், அந்த ஓர் மதிப்பெண்களுக்கு அணியை வழிநடத்தியதில் தோனியின் பங்கு பெரும் அளவிற்கு உள்ளது. அன்று சிறப்பாக பந்துவீசிய ஸ்டுவர்ட் பிராட், தோனி களத்தை விட்டு வெளியேறும் தருணத்தில் கைதட்டினார்.

தோனியின் யுக்திகளை கண்டோம் என்றால், தனது அதிரடி ஆட்டத்தை கடந்து, இடைப்பட்ட ஓவர்களில் வெகு விரைவாக ஒன்று இரண்டு ரன்களை திருடுவதில் வல்லவர். அதாகப்பட்டது, இடைப்பட்ட ஓவர்களில் இவ்வாறு ஒன்று இரண்டு என வெகு விரைவில் ரன்களை எடுத்தால், இறுதிக்கட்ட ஓவர்களில் மிகவும் எளிதாக பேட்டிங் அமையும். மற்றும், ஒன்று இரண்டு எனும் ரன்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது தோனி தான். இதனை தாண்டி, 2007ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பையில், இறுதி ஓவரை ஜோகிந்தர் ஷர்மா'விடம் பந்தை வழங்கியது, 2013ம் ஆண்டின் இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் அடிவாங்கியிருந்தாலும், மீண்டும் அவரிடம் பந்தை ஒப்படைத்து, விக்கெட்டுகளை கைப்பற்றியது, மற்றும் விராட் கோலி எனும் வீரர் 2011ம் ஆண்டில் சிறப்பற்ற ஆட்டத்தை இங்கிலாந்து மண்ணிலும் ஆஸ்திரேலியா மண்ணிலும் வெளிப்படுத்திய தருணத்தில் அவரை அணியை விட்டு விலகாமல் மீண்டும் முயற்சித்தது, பின்னர் ரோஹித் ஷர்மா அவர்களை ஒப்பனராக மாற்றி, அவருக்கு கிரிக்கெட்டில் ஓர் நீங்க இடத்தை வழங்கியது என பல தந்திரங்களை கூறலாம்.

ஆனால், இன்றும் அவரை குறைகூறுவோர் பலர். வேறு வேறு வகையிலுள்ள காரணங்களை சேகரித்து குறைகூறுவது வழக்கம். போலிகள் பல இருக்கலாம், ஆனால் அசல் ஒன்று தான். மற்றும், இவ்வாறு உள்ள குறைகளை சிறிதும் பொருட்படுத்தாமல், மீண்டும் மீண்டும் தனது அணியின் நலனிற்கென மட்டும் சிந்தித்து பல காரியங்களை செய்து வருகின்றார்.

இந்திய கிரிக்கெட்டில், இவ்வாறு வெறுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் என்கிற பெயரும் இவருக்கு உண்டு. ஆனால், ஒருவருக்கு எவ்வாறு எதிர்ப்புகள் இருக்கின்றதோ அதனை விட ஆதரவும் இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாகவே இருக்கும்  எனும் கூற்றிற்கும், ஒருவருக்கு தான் செய்யும் வேளையில் எதிர்ப்புகள் அதிகம் இருந்தால், தான் தனது துறையில் ஏதோ நன்னெறிகளை மேற்கொண்டுள்ளார் என்கிற கூற்றும் இவருக்கு நன்கு பொருந்தும்.

ஓர் தலைவனின் குணாதிசயம் அனைத்தும் இவரிடம் உள்ளது. வெற்றியை கண்டு மோகம் தலைக்கேறியதும் இல்லை. வீழ்ச்சியை கண்டு மனம் தளர்ந்ததும் இல்லை. போட்டி ஒன்றை வெற்றிபெற்றால், தனது அணியை முன்னிறுத்துவதும், தோல்வியடைந்தால் தான் முன்னின்று பழியேற்பதும், ஓர் உன்னதமான தலைவனின் எடுத்துக்காட்டாகும். 

பேட்டிங்கில், தான் எந்த தளத்தில் களமிறக்கப்பட்டாலும் அதில் தனது முத்திரையை பாதிக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3ம் 4ம் 5ம் 6ம் மற்றும் 7ம் எனும் அணைத்து முதன்மையான பேட்டிங் தளத்தில் சதம் பதித்துள்ளார். மற்றும், என்னை பொறுத்த வரை, ஒரு நாள் கிரிக்கெட்டில் இவர் மிக மிக சரியான வீரர் ஆவார். ஓர் இலக்கை அடையும் பொருட்டு, தனது மூலையில் பல சிந்தனைகள் ஓட்டத்தில் இருக்கும். ஒரு யுக்தி சொதப்பினால், மாரு யஹுக்தி என பல செயல்பாடுகள் மூலையில் ஓடும். ரன்களின் கணக்கும் பந்தின் கணக்கிற்கும் ஏற்ப மிகவும் நுட்பமாக ரன்களை சேகரித்து வெற்றிபெறுவார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்துள்ள இவர், மற்ற வீரர்களை கடந்து, இவர் மட்டுமே இடைத்தளத்தில் களமிறங்கி 10,000 ரன்களை குவித்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரே நாளில் அடிக்கப்பட்ட இரட்டை சதத்தை வைத்துள்ளார். வெகுவிரைவாக அடிக்கப்பட்ட இரட்டை சதங்களில் அதுவும் ஒன்று மற்றும் இந்திய வீரர்களின் பட்டியலில் முதன்மையான இடம் பெற்றுள்ளது. இவ்வாறு, பல சம்பவங்களை பற்றி கூறலாம்.

அன்றும் , இன்றும், என்றும் "சம்பாவக்காரன்" தோனி. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

         

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?