ஐபிஎல் திரில்லர் போட்டி - வரலாற்றில் இன்று

புனே வாரியர்ஸ் இந்தியா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் சரியாக 7 ஆண்டுகளுக்கு முன், ஜெய்ப்பூரில் மோதியது. புனே அணியிற்கு இப்போட்டியினை வென்றால் தான் தங்களால் அடுத்த சுற்றை அடைய ஓர் வாய்ப்பு இருக்கும். மறுபுறத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 2013ம் ஆண்டில், தங்களுடைய சொந்த ஊரில் இது வரை தோல்வியை கண்டதில்லை. அவர்களை அவர்களுடைய சொந்த ஊரில் வதம் செய்ய வேண்டிய கட்டாயம்.

டாஸ் வென்ற புனே அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.புனே அணியின் ஓனர்கள் மிகவும் வலுவான அணியினை தான்  செதுக்கியுள்ளார்கள், ஆனால் களத்தில் மிகவும் மோசமான ஆட்டம் வெளிப்படுகின்றது. அதனை போக்க வேண்டிய நிபந்தனை. தொடக்கம் மிக அருமையாக இருந்தது. ராபின் உத்தப்பா மற்றும் ஆரோன் ஃபின்ச், வருகின்ற பந்துகள் அனைத்தும் பொளந்தார்கள். முதல் விக்கெட்டினை பறிகொடுத்த போது ஸ்கோர் 97/1, 11 ஓவர்கள் முடிவில். ஆரோன் ஃபின்ச் 45 ரங்களுடன் வெளியேற, ராபின் உத்தப்பா வெற்றிகரமாக அரை சதத்தினை எட்டினார். இடையில் யுவராஜ் மற்றும் ஏஞ்சலோ மேத்தியூஸ் சில உறுதுணையாக ரன்களை சேர்க்க, இறுதியில் மிட்செல் மார்ஷ் பௌண்டரிகளுடன் முடித்தார். அணியின் ஸ்கோர் 178/4. மிட்செல் மார்ஷ் 21 பந்துகளில் 35  ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க, ராபின் உத்தப்பா 54 ரன்கள் அடித்திருந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ராகுல் டிராவிட் மற்றும் அஜிங்க்ய ரஹானே, இருவருமே தங்களின் அரை சதங்களை பதிவு செய்தார்கள். ஆனால், குறுகிய நேரத்தில் ரஹானே, வாட்சன் மற்றும் ட்ராவிடின் விக்கெட்டுகளை பறித்தது ராஜஸ்தான் அணி. 136/3 என 15 ஓவர் முடிவில் இருந்தது. 43 ரன்கள் தேவை 24 பந்துகளில், ஆனால் ராஜஸ்தானிடம் வலுவான பேட்டிங் உள்ளது. ஸ்டுவர்ட் பின்னி, சிக்ஸர்கள் அடிக்க, ஆட்டம் புனே அணியின் கைகளை விட்டு நழுவ தொடங்கியது. ஆனால், பார்னெல் முக்கியமாக விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களை கட்டுப்படுத்தினார். போட்டி இன்னும் முடிய வில்லை  என நடுமண்டையில் கொட்டி சொல்லியவாறு இருந்தது. ஆனால் பின்னி, கணக்கை பௌண்டரிகள் மூலம் சரி செய்தார். 5 ரன்கள் தேவை ஆறு பந்துகளில். முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க, இரண்டாவது பந்தில் விக்கெட் !!! சில்லி மிட் ஆண் திசையில் இருந்த வீரரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனை நோக்கி திரும்பினார். பின் ஃபால்க்னர் அடுத்த 2 பந்துகளில் 3 ரன்களை எடுக்க, 2 பந்துகளில் 1 றன் தேவை என்று இருந்தது. மைதானத்தின் உள்வட்டத்தில் அணைத்து ஃபீல்டர்களையும் நிறுத்தினார் புனே அணியின் தலைவர் ஆரோன் ஃபின்ச். ஆனால் பின்னி, அழகாக மிட் ஆண் மற்றும் மற்றும் மிட் விக்கெட் திசையிற்கு இடையில் பந்தினை அடிக்க, நான்கு ரங்களுக்கு சென்றது.

" இங்க நீங்க எப்படியோ, அதே மாறி ஜெய்ப்பூர்'ல அவுஹ ", என்ற வசனத்திற்கேற்ப ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால், புனே அணியும் தங்களால் முடிந்த வரை போராடினர். ஆனால், சில முறை முயற்சியிற்கேற்ப பலன் கிடைக்காமல் போகும்.

ஆட்ட நாயகன் - அஜிங்க்ய ரஹானே = 67(47)

         

         

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?