பிறந்த நாள் வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் என்கிற பெயரை கேட்டால், நம் அட்டியில் ஓர் நண்பன் இருப்பான். அவனைப்பற்றிய ஞாபகமே வரும். அந்த நண்பன், தான் கிடைக்கின்ற வேலைகைளை செய்வான். மிகவும் அனுபவம் வாய்ந்தவனாக இருப்பான் ஆனால் அந்த அனுபவத்திற்கு ஏற்ப அவனுக்கு மதிப்பு இல்லாமல் திகழ்வான். ஆனால், அதனை பற்றி சிறிதும் கவலைக்கொள்ளாமல், முயன்ருக்கொண்டே இருப்பான்.
ஜூன் 1, 1985ஆம் ஆண்டில், திருச்செந்தூர், தமிழகத்தில் பிறக்கின்றார். தனது 19 வயது காலத்திலேயே, இந்திய அணியை அடைகின்றார். பார்திவ் படேலின் இடத்தை இவர் நிரப்பினார். ஆனால், பல ஆண்டுகளாக இவர் அணியினுள் உள்ளும் வெளியும் இருந்துக்கொண்டே இருந்தார். மிகவும் வலுவாய்ந்த விக்கெட் கீப்பர். நல்ல பேட்ஸ்மேனும் கூடவே. இங்கு நான் யாரையும் தவறாய் குறிப்பிடவில்லை. பலர் கூறுவர் தோனி அணியினுள் வந்ததிலிருந்து கார்த்திக்கின் இடம் பறிபோனது என்றே. ஆனால், தோனியை பொறுத்த வரை பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டிலும் வல்லுனராக இருந்தார். கார்த்திக்கும் அப்படி தான். ஆனால், தோனியின் பேட்டிங் கார்த்திகை விட கூடுதல் பலத்துடன் இருந்தது. ஆனால், பல முறை அணியிற்காக உள்ளே இறங்கி விளையாடியுள்ளார்.
2005ம் ஆண்டு வரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விக்கெட் கீப்பராகவே தான் இருந்தார். தன்னால் முடிந்தவற்றை நிறைவு செய்தார். வலது கை பேட்ஸ்மேனாக வலம் வரும் இவர், தனது டிரைவ் ஷாட்களால் அனைவரின் பார்வைகளையும் கவர வைத்தார். இன்று வரை, இந்திய அணியில் ஓர் அங்கமாகவே இருக்கின்றார். ஆனால், கன்சிஸ்டெண்சி எனும் ஓர் பிரச்சனை இவர் வாழ்வில் நன்றாக கபடி விளையாடியது. ஆனால், இன்றும் அணியில் வாய்ப்பு கிடைக்க போராடிக்கொண்டிருக்கின்றார்.
அணியிற்காக ஓப்பனிங் இறங்க வேண்டும் என்றால், அதை செய்திருக்கின்றார். தோனி இல்லாத நேரத்தில் விக்கெட் கீப்பராக வலம் வரணும் என்றால், அதனையும் செய்திருக்கின்றார். சமீபத்தில், அணியிற்காக ஃபினிஷெர் பதவியை மேற்கொள்ளவேண்டும் என்றால், அதையும் செய்ய தயாராக உள்ளார். ஆனால், அதிகம் போற்றப்படாத வீரராகவே இருக்கின்றார்.
தமிழ் நாட்டை சேர்ந்த பேட்ஸ்மேன்களுக்கு உரிய ஓர் தன்மை, அவர்கள் விளையாடும் டிரைவ் ஷாட்டுகள் மிகவும் அழகாய் காணப்படும். இவருக்கும் அவ்வாறு தான். 32 வயதில் தான், தனக்கு உரிய மரியாதை கிடைத்துள்ளது. தான், 2018ம் ஆண்டின் நிடஹாஸ் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடிய ஆட்டம், இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. அங்கிருந்து, தனக்கு இந்திய அணியின் பினிஷெராக வலம் வந்தார். அது மட்டுமின்றி, அவ்வாண்டில் கொல்கத்தா அணியிற்காக தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. தன்னுடைய மதிப்பு, இன்னும் உயர்த்தியது என்றே கூறலாம்.
அது மட்டுமில்லாமல், இந்திய கிரிக்கெட் என்று பார்த்தால், அணியினுள் இடம் பெறுவதற்கு மிகப்பெரிய போட்டியொன்று நடைபெறும். அப்போட்டியில் தன்னை தனித்து உயர்த்தி காட்டினால் மட்டுமே தன்னால் அணியில் இடம் பெற முடியும். அதுமட்டுமில்லாமல், அவ்விடத்தை பறிகொடுக்காமல் விளையாட வேண்டும் என்றால், அதில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை தக்க நேரங்களில் வெவ்ளிக்காத வேண்டும்.
ஆனால், இவ்வருடம் உள்ள மிகவும் பிடித்த குணம் என்றால், இவரிடம் உள்ள விடாமுயற்சி. இப்போது 35 வயது ஆகிய நிலையில், 16 ஆண்டுகளாக இந்திய அணியில் உள்ளும் வெளியும் இருந்துக்கொண்டே தான் இருக்கின்றார். ஆனால், சிறிதும் மனதை விட்டுக்கொடுக்காமல், அணியினை விட்டு வெளியேற்றப்பட்டால் மீண்டும் அணியினுள் இடம்பெறுவதாக போராடுகின்றார்,சளைக்காமல். ஓர் கிரிக்கெட் வீரரிடம் இருக்க வேண்டிய முக்கிய குணம் இது என நான் பார்க்கின்றேன். அதிர்ச்சி போற்றர்வமாய் திகழும் செய்தி என்னவென்றால், இவர் 2 உலகக்கோப்பை அணிகளில் மட்டுமே பங்குபெற்றுள்ளார். 2007 மற்றும் 2019. ஆங்காங்கே, வந்து விட்டு மீண்டும் வேறு எவராவது இவரை காட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெளியேற்றப்படுவார்.
ஆனால், இன்றும் சளைக்காமல், போராடிக்கொண்டிருக்கும், தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Comments
Post a Comment