2022/23ல் தென் ஆஃப்ரிக்கா அணியின் தேர்வு !!

தற்போது, தென் ஆஃப்ரிக்கா அணியில் உள்ள நிலை, களத்தில் விளையாடவிருக்கும் 11 வீரர்களில், 5 வீரர்கள் வெள்ளையினத்தை சேர்ந்தவர்களும், மீதம் உள்ள 6 நபர்கள், பிற நிறங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு விளையாடுவார்கள் என தேர்ச்சி கணக்கு அமைந்திருந்தது. இந்த தேர்வினால் பல இன்னல்களை சந்திக்கிறது, தென் ஆஃப்ரிக்கா அணி. 2022/23ம் ஆண்டு காலகட்டத்திற்குள் இத்தேர்வு கணக்குகளில் மாற்றம் ஏற்பது என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், தென் ஆஃப்ரிக்கா நாட்டில் நடைபெற்று முடிவடைந்த இங்கிலாந்துக்கும் தென் ஆஃப்ரிக்காவுக்கும் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணி 3-0 என வெற்றியைக்கண்டது. இம்மூன்று போட்டிகளில், வீரர்களை தேர்வு செய்த வகையிலேயே இதில் உள்ள வீரியம் புரிந்திருக்கும். முதற்போட்டி, நடைபெறுவதற்கு முன்பு வரை Anrich Nortje அவர்கள் தான் முழு நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால், இந்த சதவீத கணக்கு, அவரை வெளியே உட்கார வைத்து Lungi Ngidi அவர்களை அணியினுள் அழைத்தது. Reeza Hendricks அவர்களை வெளியெடுத்து Pite Van Bilon அவர்களை இணைத்தது. இரண்டாம் போட்டியில், Reeza Hendricks களமிறங்க கூடுதலாக Anrich Nortjeவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்றாம் போட்டியில், Rabada அவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் வெளியேற கறுப்பினத்தை சார்ந்த மற்றோரு வீரரான Lutham Sipamlaவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இவ்வாறு உள்ள மாற்றங்களால், பல இடங்களில், தென் ஆஃப்ரிக்கா எனும் அணியை கடந்து ஒரு நாடாக, களத்தில் வெற்றிகள் ஏதும் ஈட்டாமல், வீழ்ச்சியடைகிறது. இதற்கு முன்பு, வருவாயினால் ஏற்பட்ட இன்னல்கள். அதன் காரணத்தினால், பல வீரர்கள் தென் ஆஃப்ரிக்கா நாட்டை விட்டு வெளிநாடுகளில் விளையாடுகிறார்கள். இதனோடு, அணியின் தெரிவு நிலையில் பிரச்சனை. கறுப்பினத்தவர்களுக்கும், மாநிறம் வாய்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கும் பொருட்டு, தற்போது இதன் கணக்கை மேலும் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது.

அந்த கணக்கு யாதெனில், களத்தில் விளையாடும் 11 வீரர்களுள், 4 வீரர்கள் வெள்ளையினத்தை சேர்ந்தவர்களும், மீதம் 7 வீரர்கள், மாநிற மற்றும் கறுப்பினத்தை கலந்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றுள், 3ல் இருந்து 4 வரை கறுப்பினத்தை சார்ந்த வீரர்கள் இடம்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக்குறித்து, தலையாட்கள் முடிவெடுக்கவில்லை என்றாலும், கிட்டத்தட்ட இது தான் நடக்கவிருக்கிறது என அனைவரும் கூறுகின்றார். 

2015ம் ஆண்டிற்கு பின், தேர்வில் உள்ள வேறுபாடு, தென் ஆஃப்ரிக்கா அணியை முற்றிலும் உடைத்தெறிந்து என்று தான் கூற வேண்டும். இனி வரும் காலங்களில், தென் ஆஃப்ரிக்கா அணி எழுச்சி பெறவேண்டுமென்றால், இவ்வாறு உள்ள வேறுபாடுகள் ஏதும் இல்லாமல், சமத்துவமாக செயல்படவேண்டும். 

    
    

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?