நீங்க ஜெயிக்கணும் சிராஜ் !
அனைவரின் மனதிக் உள்ள கேள்வி, ஏன் இத்தனை நாட்களாக நீங்கள் சிராஜ் அவர்களைப் பற்றி சிறிதும் எழுதவில்லை ? சிராஜ் அவர்களுக்கு நேர்ந்த துக்க சம்பவம் முழுமையடையும் வரை காத்திருந்தேன். முழுமை அடைவது என்றால் ? அவரின் தந்தை மறைவை பற்றி சமீபத்தில் நாம் அறிவோம். இந்த செய்தியின் முடிவு, சிராஜ் அவர்கள் இந்திய நாட்டிற்கு மீண்டும் பயணம் மேற்கொள்வாரா ? அல்லது ஆஸ்திரேலியாவில் களம்கண்ட வீரனாக திகழ்வாரா ? என்கிற இரு பாதைகளில் ஒரு பாதையை தேர்வு செய்தலே ஆகும். தற்போது, சிராஜ் அவர்கள் ஒரு பாதையை தேர்வு செய்துள்ளார். அது எந்த பாதை என்பதை இப்பதிவில் காண்போம்.
2020ம் ஆண்டின் IPL தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே, Abu Dhabi மைதானத்தில் ஓர் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில், சிராஜ் அவர்கள் தொடர்ச்சியாக 2 maiden ஓவர்களை வீசி, முதல் 3 விக்கெட்டுகளை தகனம் செய்தார். அன்றைய தினத்தின் ஆட்டநாயகனாக ஜொலித்தார். இவர் தான் அன்று தலைப்புச்செய்தி.
அதற்கு அடுத்த தினம், Royal Challengers Bangalore அணியின் YouTube பக்கத்தில், சிராஜ் அவர்களை நேர்காணல் செய்தனர். அதில் அவர் தெரிவித்தது, எனது தந்தை அவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். தொலைபேசியில் எனது தாய், அழுகையில் ஆழ்த்தப்பட்டு இருந்தார். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என அவர் கூறினார்.
அப்போதிலிருந்து சென்ற வாரம் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிராஜ் அவர்களின் தந்தை, சென்ற வார இறுதியில் காலமானார். சிராஜ் அவர்களின் தந்தை, ஓர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்தவர். மிகவும், கடினப்பட்டு வாழ்க்கையை நகர்த்தி, சிராஜ் அவர்களை வளர்த்தார். சிராஜ் அவர்களின் கிரிக்கெட் ஆசைக்கும், நன்கு துணைபுரிந்தார். எப்போது, சிராஜ் அவர்கள் IPLலில் களமிறங்கினாரோ, அப்போது தான் குடும்ப இன்னல்கள் சரியாகியது. அவ்வாறு உள்ள தந்தையாரின் இறப்பு செய்தி, சிராஜ் அவர்களை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கும்.
முன்னதைய தருணங்களில், நினைத்த நேரங்களில் விமான பயணம் மேற்கொள்ளவியலும். அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு, 1999ம் ஆண்டில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இத்தொடரின் இடையில், டெண்டுல்கர் அவர்களின் தந்தையார் இறந்து விடுவார். அப்போது, டெண்டுல்கர் அவர்கள் இந்தியாவிற்கு பயணித்து, தன்னுடைய தந்தையாருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தி, பின்னர் மீண்டும் இங்கிலாந்திற்கு பயணித்து, அடுத்த போட்டியில் சதம் அடிப்பார்.
ஆனால், தற்போது கொரோனா நோயின் பாதிப்பால், நினைத்தவாறு பயணம் மேற்கொள்ள இயலாது. அதையும் மீறி பயணித்து மீண்டும் ஆஸ்திரேலியாவை அடைந்தாலும், அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த 14 நாட்களில், 3 பரிசோதனைகளை செய்வர். அதில், ஏதேனும் ஒன்றிலாவது கொரோனா நோய்யுள்ளது என நேர்மறையான முடிவு வெளிவந்தால், தனிமைப்படுத்திக்கொள்ளும் நாட்கள் அதிகரிக்கும். ஆதலால், ஒன்று இத்தொடரை விளையாட வேண்டும், அல்லது தந்தையாருக்கு முக்கியத்துவம் அளித்து, வெளியாக வேண்டும். இவ்வாறு உள்ள நிலையில், சிராஜ் அவர்கள் ஆஸ்திரேலியாவில் களமிறங்கவுள்ளதாக தீர்மானித்து உள்ளார்.
தன்னுடைய ஆசையும், தனது தந்தையின் போராட்டமும் இந்த ஒரு நிலைக்கு தான். இதை, விட்டுவிட கூடாது, களத்தில் சிறப்பாக செயல்பட்டு, தனது தந்தைக்கு அவர் செய்கின்ற ஒவ்வொரு சம்பவத்தையும் பரிசளிக்கும் வகையாக அமைக்கவேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.
இதற்கு முன்பாக, விராட் கோலி அவர்கள், தன்னுடைய ரஞ்சி கிரிக்கெட் காலகட்டங்களில், தனது தந்தை இறப்பார். அப்போது, ரஞ்சி போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. கோலி அவர்கள், அடுத்த நாள் காலை தருணத்தில், களமிறங்கி தனது அணியை மீட்டெடுத்து பின்னர் தன்னுடைய தந்தையின் இறுதி அஞ்சலிக்கு செல்வார்.
Comments
Post a Comment