தென் ஆஃப்ரிக்கா - இங்கிலாந்து தொடர் ரத்து !!
தற்போது, இங்கிலாந்துக்கும் தென் ஆஃப்பிரிக்காவுக்கும், இடையே தென் ஆஃப்ரிக்கா நாட்டில் ஓர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டு இருந்தது. 3 T20Iக்கள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளைக்கொண்ட இத்தொடரில், 3-0 என 20 ஓவர் தொடரை வென்றது இங்கிலாந்து அணி. அதனைத்தொடர்ந்து, ஒரு நாள் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில், கொரோனா பரிசோதனை நடைபெற்றது. அப்பரிசோதனையில், தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அணியை சேர்ந்த ஒரு வீரருக்கு, கொரோனா நோயின் பாதிப்பு உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆம், நன்றாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் தொடரின் இடையில், இவ்வாறு பாதிப்புகள் வெளிவரும் என எவர் எதிர்பார்த்திருப்பர் ?. ஆனால், ஒரு கிரிக்கெட் வீரருக்கு Positive எனும் விளைவு வெளியானதால், 4ம் டிசம்பர் அன்று நடைபெறவிருந்த, முதல் ஒரு நாள் போட்டியை, 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அந்த ஒரு வீரரை தனிமைப்படுத்தப்பட்டு, மீதமுள்ளோர் தங்களின் பயிற்சிகளை மேற்கொண்டனர்.
அவ்வாறு பயிற்சிகளை மேற்கொண்டு, 6ம் தேதியன்று நிச்சயமாக, முதல் ஒரு நாள் போட்டி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, வீரர்கள் வசித்து வந்த உணவகத்தில் உள்ள பணியாளர்களுள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக, 6ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்ட முதல் ஒரு நாள் போட்டியை ரத்து செய்தனர்.
ஆதலால், மீதம் உள்ளது இரண்டு ஒரு நாள் போட்டிகள் மட்டுமே. இவையிரண்டும், 7 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என அட்டவணையிடப்பட்டுள்ளது. அப்போது, இங்கிலாந்து நாட்டின் பரிசோதனையில், சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால், பாதிப்பு நிச்சயம் அதிகரிக்கும் என முன்னெச்சரிக்கையாக, இத்தொடரை ரத்து செய்து, பின் வரும் மாதங்களில் நடைபெற இயலுமாறு அமைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இவ்வாண்டின் IPL தொடர் துவக்கம் பெறுவதற்கு முன், சென்னை அணியை சார்ந்த Deepak Chahar மற்றும் Ruturaj Gaikwad ஆகிய இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சென்னை அணியின் தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் அதிகரிக்கப்பட்டது. ஆனால், இவையனைத்தும் நடந்தது, IPL தொடர் துவங்குவதற்கு முன்பே. அதனால், தனிமை படுத்திகொண்டு, நோயிலிருந்து வெளிவந்து செயல்பட ஏதுவாய் இருந்தது. ஆனால், தென் ஆஃப்ரிக்கா தொடரில் இவ்வாறு செயல்படுத்த சாத்தியக்கூறுகள் இல்லை.
கொரோனா நோயின் பாதிப்பானது, இன்றும் தலைவிரித்தாடுகிறது. ஆதலால், பாதுகாப்பாக இருங்கள். சுத்தத்தை மேற்கொள்ளுங்கள். ஒரு வேளை, தென் ஆஃப்பிரிக்காவில் உள்ள ஏற்பாடுகள் மிகவும் பாதுகாப்பாக இருந்திருந்தால் ? ஒரு வேளை, வசிக்கும் விடுதிகளை நன்கு பராமரித்து, நோய் பாதிக்காது அமைக்கப்பட்டிருந்தால் ? என பல கேள்விகள் மனதில் இருந்தாலும், இவையனைத்திற்கும் ஒரே பதில், சுத்தம் சோறு மட்டும் அல்ல உயிர் பிச்சையும் போடும் ! கொரோனாவை வீழ்த்துவோம், களமிறங்குவோம் !!
Comments
Post a Comment