IPL செய்திகள் - 2020

ஒரு புறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் போன்ற அணிகள், துபையில் தங்களது பயிற்சிகளை துவங்கினாலும், மறுபுறம் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்தகவல்கள், சென்னை அணியின் ரசிகர்களை மிகவும் பாதிக்கும்.

நேற்று மாலையிலிருந்து, மற்ற அணிகள் தங்களின் பயிற்சிகளை, துபாய் நாட்டில் துவங்கியுள்ளனர். சென்னை அணியைப்பற்றி எவ்வித அறிவிப்பும் வரவில்லை என சமூக வலைத்தளங்களில், தகவலுக்காக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்திகள் மட்டுமே வெளிவந்துள்ளது. அதில் முதல் செய்தி, சென்னை அணியை சேர்ந்த 12 ஆதரவு ஊழியர்கள் மற்றும் 1 வீரர், கொரோனா நோய் தேர்வில், நேர்மறை என்கிற தேர்ச்சி வெளிவந்துள்ளது. சிறிது நேரம் கழித்து, ஓர் இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு, காரோண நோய் பாதிப்பு என்கிற செய்தி வெளிவந்தது. பின்பு, பல செய்தி வலைத்தளங்களில், அந்த வீரர் வேறு எவரும் இல்லாது, தீபக் சஹார் என்று வதந்திகள் வெளிவர, இறுதியில் அந்த வதந்தி உண்மையாகவே மாறியது.

இரண்டாம் தகவல், சென்னை அணிக்கு மட்டும், செப்டம்பர் 1ம் தேதி வரை, உள்ளிருப்பை நீடித்துள்ளார்கள். பாசிட்டிவ் என்கிற தேர்ச்சியை பெற்ற வீரராகளுக்கு, அடுத்து 14 நாட்களுக்கு, பயிற்சிகளில் பங்குபெற இயலாது. அந்த  14 நாட்கள், அவர்கள் தங்கியிருந்த அறையில் தான் உள்ளிருக்க வேண்டும். 14 நாட்களுக்கு பின், கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு, அதில் நெகட்டிவ் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு, நெகட்டிவ் தேர்ச்சி பெற்றவுடன், பயிற்சிகளில் பங்குபெற இயலும். ஆதலால், தீபக் சஹார் அவர்களுக்கு, இது தான் தற்போதைய நிலை.

இதனையடுத்து, இன்று காலை தருணத்தில், சென்னை அணியின் CEO'ஆன காசி விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், சுரேஷ் ரெய்னா என்றழைக்கப்படும் சின்ன தல, இவ்வாண்டின் IPL தொடரில் பங்குபெற மாட்டார். தனிப்பட்ட இன்னல்களின் காரணத்தினால், தற்போது இந்தியா'விற்கு பறந்து செல்ல உள்ளார், என்றும் செய்திகள் வெளிவந்தது. சமீபத்தில், தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்த ரெய்னா அவர்களுக்கு, இவ்வாண்டின் IPL தொடர், ரசிகர்களுக்கென கற்பனை செய்து விளையாடவுள்ளதாக கருதப்பட்டது. ஆனால், இந்த முடிவு, எல்லார் மனதையும் அதிர்ச்சியாகியது. Mr.IPL இல்லாத IPL தொடராக பார்க்கப்படுகின்றது. 

இதனையடுத்து, வளர்ந்து வரும், இளம் வீரரான, ருதுராஜ் கைக்வாத் அவர்களுக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தீபக் சஹாரைப் போன்று, இவரும் 14 நாட்கள், தனிமைப்படுத்தப்படுவார். 14 நாட்களுக்குப்பின், நெகட்டிவ் பரிசோதனைகளை வெளியிட வேண்டும். 

இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல் தொடரை நாங்கள் தள்ளிவைக்க மாட்டோம், என்று அறிவித்துள்ளார்கள். ஐபிஎல் தொடரின் அட்டவணையின் வெளியீட்டை மட்டுமே சற்று தள்ளிவைத்துள்ளார்கள் என்றே தெரிகின்றது. 

பலர் கவலைக்கொள்ளும் நிலையில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற பாக்கிஸ்தான் இங்கிலாந்து தொடருக்கு முன் பல வீரர்கள், பாசிட்டிவ் என்றே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள், தங்களின் தேர்ச்சிகளை சரிசெய்துக்கொண்டு வெளிவந்தனர். ஆதலால், என்னைப்பொறுத்த வரை, இவர்களும் மீண்டெழுவர். பயிற்சியில் பங்குபெற இயலவில்லை என்றாலும், களத்தில் போட்டியிட்டு வெல்வர். ரெய்னா அவர்கள் இல்லாதது, சற்று கடினமாய் இருந்தாலும், பிற்காலத்தில் இந்த ஓர் நிலை நிச்சயம் வரும். அப்போது நாம் என்ன செய்யவுள்ளோம் ?!. 

ஆதலால், நேர்மறையாக சிந்தியுங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே. தற்போதைய நன்மையோ, பிற்கால நன்மையோ, நடைப்பவையில் நிச்சயம் நன்மை நீடித்து இருக்கும். காத்திருங்கள் !!            

Comments

Post a Comment

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt