CSA கிரிக்கெட் பிரச்சனை - ஓர் விளக்கவுரை
நேற்றிரவு, அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. தென் ஆஃப்ரிக்கா'வின் கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்தது, தென் ஆப்ரிக்கா விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் ஒலிம்பிக் குழு. முதலில், யார் இவர்கள் என்கிற கேள்வி உங்கள் அனைவரின் மனத்திலும் வெளிவந்திருக்கும். South African Sports Confederation and Olympic Committee ( SASCOC ) என்றழைக்கப்படும், தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அணைத்து வித விளையாட்டு வாரியத்துக்கு தலையாய் விளங்கும் ஆளும் குழு. அப்போது, Cricket South Africa யார் ? என்றும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். தென் ஆஃப்ரிக்கா நாட்டில் கிரிக்கெட் எனும் விளையாட்டு இயங்குவதற்கு முதல் உரிய காரணம், Cricket South Africa'வாகும். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து வித விளையாட்டுகளும் ஒழுங்காக இயங்குகின்றதா என்று பார்வையிட்டு, அதில் ஏதேனும் தவறு நடைபெற்றால் இவர்கள் நடுநிலையை கடைப்பிடித்து, தக்க தண்டனைகளை வழங்குவர். கிட்டத்தட்ட, தென் ஆஃப்ரிக்கா நாட்டின் அரசு நடத்தும் விளையாட்டு துறையே இந்த SASCOC ஆகும்.
சரி, Cricket South Africa அவ்வாறு என்ன தவறு செய்துள்ளார்கள். CSA நிர்வாகத்தின் இடையில், பல ஊழல்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இதனை விசாரிக்க பல மனுக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உண்டான விளக்கம் தெரிவிக்காமல் காலத்தை கடத்தியதால், CSA நிர்வாகத்தை தடை செய்து, SASCOC வாரியம், அந்நாட்டில் உள்ள கிரிக்கெட்டின் இயக்கத்தை முற்றிலும் கைப்பற்றியுள்ளது. இதற்கும் மேல், தெளிவுடன் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றால், தென் ஆஃப்ரிக்கா'வின் அரசுக்கு கீழ் தான் இனி கிரிக்கெட் இயங்கும். ஆதலால், பல வகையான இன்னல்கள் இதில் இடம் பெற்றுள்ளது. வீரர்களின் தேர்ச்சியில் அரசியல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இனவேறுபாடு மீண்டும் நடைபெற வாய்ப்புள்ளது. வெள்ளை கறுப்பின வீரர்களின் தேர்ச்சி சதவீதம் மாற்றம் ஏற்படலாம்.
இதற்கு, ICCயின் சட்டம் கூறுவது என்ன ? ICC நிர்வாகம் எழுதியுள்ள Code of Conductன் ஆவணத்தில், பல பக்கங்கள் உள்ளது. அவற்றுள் Members என்கிற பக்கத்தை எடுக்க வேண்டும். அதனுள், வேறு சில துணைப்பக்கங்கள்இடம்பெற்றிருக்கும். அதில், ICC Memorandum and Articles of Association என்கிற பக்கத்தில், 2.4ம் பகுதியை எடுத்து பார்த்தால், இதற்கான விடை கிடைக்கும். அதில் தெளிவுடன் வெளியிடப்பட்டது யாதெனில், " ஒரு நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்குள் ஏதேனும் இன்னல் ஏற்பட்டால், அவ்வாறு உள்ள இன்னலை அந்த கிரிக்கெட் வாரியமே சரிசெய்ய வேண்டும். அந்நாட்டு அரசாங்கம் தலையிட கூடாது. மீறினால் தடை.
ஆதலால், தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் அணியை தடை செய்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளது. இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு, சென்ற ஆண்டு, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இன்னல்களிலும், ICCயின் செயல்பாடுகளிலும், ஜிம்பாப்வே நாட்டின் கூட்டமைப்பு தலையிட்டதால், அவர்கள் இடைக்காலத்திற்கு தடை செய்தது, ICC.
தடையெனில், இனி வரும் ICCன் தொடர்களில், இவர்களால் பங்குபெற இயலாது. ICCயிலிருந்து ஒரு சம்பளமும், தவறு செய்த நாட்டுக்கு அனுப்பப்படாது.
ஆனால், இதற்கு ஓர் முறையான விசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்பை வழங்கவேண்டும் என நான் எண்ணுகிறேன். தென் ஆஃப்ரிக்கா அணி இல்லாத ஓர் கிரிக்கெட் தொடர் என்பது, மிதிவண்டியில் சுழற்சி சங்கிலி இல்லாதது போன்றாகும். ஆகையால், இந்த பிரெச்சனையை சரி செய்து மேலும் பல நாள் செய்திகள் வெளியிடப்படும் என்று நான் நம்புகிறேன்.
Comments
Post a Comment