சுனில் கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய கருத்துகள்
நேற்று, பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் மோதிக்கொண்ட போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தலைவரான கே. எல். ராகுல் அவர்களின், சிறப்பான ஆட்டத்தின் காரணத்தினாலும், பெங்களூரு அணியின் சுமாரான பந்துவீச்சின் காரணத்தினாலும், 206 ரன்களை அடைந்தது. அங்கு, பெங்களூரு அணியின் தலைவரான விராட் கோலி, 16ம் ஓவரிலும் 17ம் ஓவரிலும், கே.எல் ராகுலின் கேட்சுக்களை கைப்பற்ற தவறினார். அதன் காரணத்தினாலும், இறுதியில் அதிரடியாக விளையாட இயன்றது. பெங்களூரு அணி, வெறும் 109 ரன்கள் குவித்து, 97 ரன்களில் தோல்வியை தழுவியது.
பெங்களூரு அணியின் பேட்டிங்கிலும், விராட் கோலி அவர்கள் சரியாய் விளையாடவில்லை. அதற்கு, பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளரான, திரு. சுனில் கவாஸ்கர் அவர்கள், தவறான கருத்துக்களை தெரிவித்தார். அக்கருத்திக்கள், மிகவும் சர்ச்சைக்குரியது.
சுனில் கவாஸ்கர் அவர்கள் ஹிந்தி வர்ணனையில், " Inhone Lockdown me to bas Anushka ki gendon ki practice ki hai " கூறினார். அதன் அர்த்தம் யாதெனில், " Lockdown காலகட்டத்தில், விராட் கோலி அவர்கள் அனுஷ்கா'வின் பந்துகளை மட்டுமே எதிர்த்து விளையாடியுள்ளார் ". கிரிக்கெட் வர்ணனையில், தேவையின்றி குடும்ப வாழ்வினை இணைத்து பேசுவது தவறு. அதிலும், விராட் கோலியின் விளையாட்டை விமர்சனம் செய்ய முற்பட்டு, சம்மந்தமின்றி அவருடைய மனைவியை இழுத்து, இணைத்து பேசுவது மிகவும் தவறு.
இதற்கு, விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா அவர்கள், தன்னுடைய Insta பக்கங்களில், மிகவும் வருத்தத்தை தெரிவித்தார். " இது 2020, ஆனால் இன்னும் ஒரு மனிதன் பணிபுரியும் இடத்தில், தான் செய்யும் தவறுக்காக தன்னையும் கடந்து தன் குடும்பத்தைப் பற்றி பேசும் பழக்கம் மாறவில்லை ".
எவ்வித எண்ணத்தில் நீங்கள் இதை கூறியிருந்தாலும், இது தவறு ! சஞ்சய் மஞ்சரேக்கரின் சர்ச்சைக்கடுத்து இவருடைய கருத்துக்கள், இனி வரும் நாட்களில் நிச்சயம் பேசப்படும். இதற்கு தகுந்த மரியாதை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment