Seriesஐ வென்று பழிதீர்த்தது Australia !!

பழிதீர்க்கும் அளவில் இவர்கள் இருவருக்குமிடையே நிலவி வரும் பகையாது ? என பலரின் மனதில் கேள்வி எழும்பும். சென்ற முறை, 2018ம் ஆண்டில், இவ்விரு அணிகளும், இனைந்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் போட்டியிடுகின்றனர். இத்தொடரில், 5-0 என ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. அதனோடு சேர்த்து, தற்போது நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் தல்வியடைந்தது ஆஸ்திரேலியா அணி. ஆதலால், இவையிரண்டிற்கும் இணையாக பரிசளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி. மறுபுறம், இங்கிலாந்து அணி இப்போட்டியை வென்றால், கொரோனா நோய்க்கு பின் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிரிக்கெட் தொடர்களில், 5ம் தொடர் வெற்றியை பதிவு செய்வர். 

மென்சேஸ்டர் மைதானத்தில், சென்ற இரு போட்டிகளுக்கு மாற்றாக, பிட்ச் வழங்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியும் அதையே விரும்பியிருந்தாலும், முதலில் பந்துவீசிய வாய்ப்பு கிடைத்ததால், பின்னல் வெற்றியை பதிக்க இயலும் என்று தற்போது தெரிந்திருக்காது. ஸ்டார்க் அவர்கள் முதல் ஓவரை வீச களமிறங்கினார். இங்கிலாந்து அணியிலிருந்து ஜேசன் ராய் அவர்களும் ஜானி பார்ஸ்டோ அவர்களும் களமிறங்கினர். ஆட்டத்தின் முதற்பந்தில், பாயிண்ட் திசையில் நின்றுக்கொண்டிருந்த மேக்ஸ்வெல்லிடம் catch ஒன்றை வழங்கிவிட்டு வெளியேறினார். அதற்கு அடுத்தப்பந்தில், ரூட் அவர்களுக்கு வீசப்பட்ட inswinger பந்தில், LBW ஆனார். ஆஸ்திரேலியா அணி, முதல் 2 பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டது. ஆனால், இது சிறிது நேரத்துக்கு மட்டுமே. பார்ஸ்டோ அவர்கள், இந்த தொடர் முழுவதுமாய் தான் செய்த செயலினை இன்றும் சரியாக செய்தார். இன்று, மிகவும் நன்றாக விளையாடினார். சுட்டிக்காட்ட ஒரு பிழையும் இல்லை. தனது ஆட்டத்தை, சிறிதும் மாறுபடுத்தாமல் விளையாடினார். ஆனால், மறுபுறத்திலோ விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. மோர்கன் அவர்கள், சற்று நல்ல நிலையில் விளையாடிக்கொண்டிருக்கும் போது, அவரை வீழ்த்த மிகவும் தந்திரமாக சாம்பாவை களமிறக்குகின்றார், ஃபின்ச். விக்கெட் பறிக்கப்படுகிறது. அவரைத்தொடர்ந்து, மிகவும் தடுமாற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பட்லரை வீழ்த்தினர். மறுபடியும் சாம்பா அவர்களே. ஒருபுறம் பார்ஸ்டோ'வின் ஆட்டத்திற்கு துணையான ஆட்டத்தை வழங்க வேண்டும் என்கிற தலையாய கடமையுடன் களமிறங்குகிறார், பில்லிங்ஸ். முதல் போட்டியில் இருவரும் இனைந்து செயல்பட்ட நிகழ்வை, மீண்டும் நிகழ்த்தினர். ஒருபுறம் பார்ஸ்டோ அவர்கள் தனது சதத்தை கடக்க, மறுபுறம் பில்லிங்ஸ் அவர்கள் தனது அரை சதத்தை கடந்தார். மிகவும், புரிதலுடன் வெளிப்படுத்தப்பட்ட ஆட்டம். ஆனால், மீண்டும் எமனாக மாறுகின்றார், சாம்பா.பில்லிங்ஸ் அவர்களின் விக்கெட்டையும் கைப்பற்ற, போட்டியில் திருப்பம் ஏற்பட்டது. இவ்வாறு, போட்டியின் போக்கு, இங்கிலாந்து அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும், வாலி பந்தைப் போன்று, மாறி மாறி பறந்துசென்றது . 40 ஓவர்களில் 220/5 எனும் நிலையிலிருந்து 45ம் ஓவரின் முடிவில் 249/6 என்றே இருந்தது. இங்கிருந்து ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சு மிகவும் அடிவாங்கியது. ஸ்டார்க் அவர்களை, ஓவருக்கு ஒரு பௌண்டரியைக் குவிக்க வேண்டும் என்கிற கணக்குடன் விளையாடினார்கள். ஸ்டார்க் அவர்களின் ஆட்டமும் தேய்ந்தது. இங்கிலாந்து அணியில் உள்ள ஆழமான பேட்டிங்கின் காரணத்தினால், இறுதியில் 302/7 என்கிற ரன்களை குவிக்க முடிந்தது. 

சென்ற போட்டியை விட இப்போட்டியின் இலக்கு அதிகமானது. ஆனால், பிட்ச் வேறு. யாது செய்யவுள்ளார்கள் என்கிற கேள்வியில் களமிறங்க, வழக்கத்திற்கு மாறாய் ஆர்ச்சர் அவர்களை பந்தாடினார்கள். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை நேர்த்தியாக கையாண்டனர். ஆனால், பிட்சில் சற்று ஏற்றம் அதிகமாக இருந்ததால், ரூட் அவர்களை பந்துவீச அழைத்தார். ரூட் அவர்கள் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு துணையாக வோக்ஸ் அவர்களும், ஆரம்பத்தில் 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்ற, போட்டி முடிவடைந்தது என்றே அனைவரும் எண்ணினர், எரியும் நெருப்பில் என்னையும் ஊற்றிய கதையைப் போன்று, லபூஷனே அவர்கள், தம்மை தாமே ரன் அவுட் செய்துக்கொண்டார். 73/5 என்று தத்தளித்துக்கொண்டிருந்தது ஆஸ்திரேலியா அணி. வழக்கத்தை விட மிகவும் மோசமான சரிவை வெளிக்காட்டியுள்ளார்கள் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, விட்டு வைத்த களத்தில், ஓர் சிங்கம் நுழைந்தது. அந்த கர்ஜிக்கும் சிங்கத்துக்கு, அதிரடியான ஆட்டத்தைக் கடந்து வேறு ஏதும் தெரியாது. களமிறங்கிய முதற்பந்திலிருந்து, ரன்களைக் குவிக்கத்துவங்கினார். அதோடு இணையாக, ஆங்காங்கே பௌண்டரிகளையும் அடித்தார். மறுபுறத்தில் அலெக்ஸ் கேரி, நிதானமாக விளையாடி, ஸ்ட்ரைக்கை வழங்கினார். இருவரின் ஆட்டம், கொண்டாமாகவே இருந்தது. மோர்கன் அவர்களுக்கு திட்டம் விளங்கவில்லை. ரஷீத் அவர்களை களத்தில் இறக்க, மேக்ஸ்வெல் அவர்கள், ஒருகணம் சிந்திக்காது, பந்தாடினார். லெக் திசையில் சிக்ஸர்கள் பறந்தன. இருவரும் இனைந்து 212 ரன்களை கூற்றாக அமைத்தனர். இதில், இருவருமே சதங்களை குவிக்க, ஆஸ்திரேலியா அணி, வெற்றிக்கு அருகில் வந்தடைந்தார்கள். ஆனால், இங்கிலாந்து அணியோ, விட்டுக்கொடுக்காமல் போராடினர். அதற்கு பலனாக இருவருடைய விக்கெட்டுகளையும் கைப்பற்ற, 10 ரன்கள் தேவை 6 பந்துகளில் என்றே நிலையிருந்தது. இருபுறத்தில் பேட்டிங்கை மேற்கொள்வது பந்துவீச்சாளர்கள் தான். இங்கிலாந்து அணியில் மேலும் ஓவர்களை கையில் வைத்திருந்த பந்துவீச்சாளர்கள், வோக்ஸ், கரண் மற்றும் ரஷீத் ஆவர். அங்கு வோக்ஸ் அல்லது கரண் அவர்களிடம் பந்தினை வழங்கியிருந்தால் போட்டியும் தொடரும் இங்கிலாந்து அணியின் கைகளில் தான். ஆனால், இவர் செய்த தவற்று, ரஷீதிடம் பந்தினை வழங்கியது. இறுதிக்கட்ட ஓவர்களில், அதுவும் இடது காய் பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் பட்சத்தில், Leg Spinnerஐ பந்துவீச நினைப்பது மிகவும் தவறான செயலாகும். அதை செய்தார், முதல் பந்திலேயே ஸ்டார்க் அவர்கள் சிக்ஸர் அடித்தார். அதற்கு பின், 2 பந்துகளில் போட்டியை முடித்துவைத்தார். 

இரு அணிகளும் தங்களின் யுக்திகளில் தவறு செய்தார்கள். ஆனால், அதிக தவறுகளையும் முக்கிய தவர்களையும் செய்தது இங்கிலாந்து அணி. அதன் காரணத்தினால், தோல்வியை தழுவினர். இங்கிலாந்து அணி பழிதீர்த்தார்கள். ஆட்ட நாயகன் விருதை பெற்றது, க்ளென் மேக்ஸ்வெல். 

             
 

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt